Monday, August 10, 2009

வண்ணத்துப்பூச்சியின் கனவு....

வானம் முழுவதையும் தன் வசப்படுத்த நினைத்த
வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்
சிறையில் அடைத்துவிட்டார்கள்....

ஜந்தும் பத்துமாய் அவள் சேர்த்து வாங்கிய
ஆக்ஸ்போர்டு அகராதி இப்போது
காகிதக்கப்பலாகி அவள் கண்ணீரில் மிதக்கின்றது....

பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த
சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி
அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....

கால் பவுன் தங்கத்தாலும்
சிறு கயிற்றாலும் அவளின்
கல்லூரி கனவுகள் கலைக்கப்பட்டது
கற்பனைகள் சிதறடிக்கப்பட்டது....

இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை....

53 comments:

அப்துல்மாலிக் said...

எத்தனையோ வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகள் உடைக்கப்பட்டு வறுமையையும், பெண்மையையும் காரணம் காட்டி இவ்வாறுதான் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கிறது

அப்துல்மாலிக் said...

//ஆக்ஸ்போர்டு அகராதி இப்போது
காகிதக்கப்பலாகி அவள் கண்ணீரில் மிதக்கின்றது....
//

இப்படியும் சொல்லலாம்

குழந்தைகளின் சந்தோஷத்துக்காக‌ காகிதக்கப்பலாகிப்போனது
பிள்ளைக‌ளுக்காக‌ த‌ன் ச‌ந்தோஷ‌த்தை தொலைக்கும் எத்த‌னையோ தாய்மார்க‌ள்

sarathy said...

யாரந்த பெண்????

ப்ரியமுடன் வசந்த் said...

யார்க்கா அந்த கூண்டில் அடைபடப்போகும் கிளி

நட்புடன் ஜமால் said...

பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த
சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி
அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....]]

சிறு வயதிலே திருமணம் ...

நட்புடன் ஜமால் said...

இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை....]]

புரிந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை

goma said...

பெண்ணுக்கு சுதந்திரம் வராதவரை நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது என்று, மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமே இல்லை

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//ஆக்ஸ்போர்டு அகராதி இப்போது
காகிதக்கப்பலாகி அவள் கண்ணீரில் மிதக்கின்றது....
//

இப்படியும் சொல்லலாம்

குழந்தைகளின் சந்தோஷத்துக்காக‌ காகிதக்கப்பலாகிப்போனது
பிள்ளைக‌ளுக்காக‌ த‌ன் ச‌ந்தோஷ‌த்தை தொலைக்கும் எத்த‌னையோ தாய்மார்க‌ள்

நன்றி அபு அண்ணா வருகைக்கு

sakthi said...

sarathy said...

யாரந்த பெண்????

எனக்கு மிகவும் வேண்டப்பட்ட பெண் சாரதியாரே

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

யார்க்கா அந்த கூண்டில் அடைபடப்போகும் கிளி

அது ரகசியம் வசந்த்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை....]]

புரிந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

goma said...

பெண்ணுக்கு சுதந்திரம் வராதவரை நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது என்று, மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமே இல்லை

ஆம் கோமா

நன்றி தங்கள் வருகைக்கு

ஆ.ஞானசேகரன் said...

//பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த
சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி
அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....//

ம்ம்ம் வருகின்ற காலங்களிம் நாமும் அதேதான் செய்ய போகின்றோமா?

ஈரோடு கதிர் said...

//ஜந்தும் பத்துமாய் அவள் சேர்த்து வாங்கிய
ஆக்ஸ்போர்டு அகராதி இப்போது
காகிதக்கப்பலாகி அவள் கண்ணீரில் மிதக்கின்றது....//

//பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த
சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி
அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....//

வலியூட்டும் அசாத்திய வரிகள்

வாழ்த்துகள் சக்தி

SUBBU said...

எனக்கென்னமோ இப்போ எல்லாம் அப்படி இல்லன்னுதான் தோனுது

Anonymous said...

என்னது இது!! ஒரே அழுவாச்சியா இருக்கு. :(

S.A. நவாஸுதீன் said...

இளவயதில் திருமணம் என்பது எப்படியாவது கை கழுவி விட்டா போதும் என்ற எண்ணம், இதை விட்டால் வேறு நல்ல வரன் அமையாமல் போய் விடுமோ என்ற பயம், பொருளாதாரப் பற்றாக்குறை இப்படி பல காரணங்களால் இளம் பெண்களின் கனவுகள் கலைக்கப் படுகின்றன.

நல்லா இருக்கு சக்தி

Suresh Kumar said...

எத்தனையோ வண்ணத்து பூச்சிகள் தங்கள் கனவுகளோடு முடக்கி போகின்றன

பாலா said...

மீண்டும் ஒரு தேவலாம் ரகம்

அ.மு.செய்யது said...

என்னுடன் பள்ளியில் படித்த பல பட்டாம்பூச்சிகளின் கனவும் இப்போது இப்படி தான்
ஆகிவிட்டது.

பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை சேலையில் கைக்குழந்தையுடன் பார்க்கும் போது,
சிரிப்பதா அழுவதா என்று தெரியாது.எல்லோருக்கும் இருந்தது பாரதியின் புதுமைப் பெண் கனவு.

நிறைய சிந்தனைகளை தோற்று வித்தது சக்தி உங்கள் கவிதை !!!

SUFFIX said...

நல்லா இருக்கு, பாவம் அந்த வண்ணத்துப்பூச்சி, ஆனால் இது போன்ற நிகழ்வுகள் தற்பொழுது குறைவு என்றே கருதுகிறேன்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

அந்த வண்ணாத்துப் பூச்சி கூட ஓர் ஏழையா?..

அருமையாக இருந்தது கவி வரி....

வாழ்த்துக்கள்....

குடந்தை அன்புமணி said...

தற்போது இத்தகைய நிகழ்வுகள் இல்லையென்றே நினைக்கிறேன். இருந்தால் காவல் துறைக்கு தகவல் கொடுத்து தடுக்கலாமே...

கலையரசன் said...

//வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்
சிறையில் அடைத்துவிட்டார்கள்....
இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை.... //

இந்த 4 வரியை படிச்சா கூட புரியுதுங்க சக்தி!
100 அடிக்க போவதற்க்கு வாழ்த்துக்கள்!!

rose said...

வானம் முழுவதையும் தன் வசப்படுத்த நினைத்த
வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்
சிறையில் அடைத்துவிட்டார்கள்....
\\
சில படிப்பறிவு இல்லா மக்களை திருத்தவே முடியாது சக்தி

நேசமித்ரன் said...

கனவுகளைக் கொல்வதும் தன்னை பலியிடத்தருவதும் தியாகமல்ல தற்கொலைக்குரிய தைரியத்தை விட கீழ்த்தரமானது

மாளப் புதைக்கும் கரங்கள் மீளாச்சிறைக்குள் மிகுதியாய் ஒரு பருக்கைக்கும் தகுதி அற்றவர்கள் சக்தி

rose said...

இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை....
\\
இதை பற்றி விமர்ச்சிக்க வார்த்தையும் இல்லை

*இயற்கை ராஜி* said...

பாவம் அந்த வண்ணத்துப்பூச்சி, :-(

ஹேமா said...

என்ன சொல்ல சக்தி,எல்லாமே வலியின் அனுபவம்.யாருக்குச் சொல்லி அழ என்பதுபோல.

நானும்கூட.

வரிகள் தேடிய விதம் அருமை.

shakthikumar said...

arputhamaa irukku akkaa idhayam pizhiyum varigal enna soldrathu
vaarthaigal kidaikalai

shakthikumar said...

vannathu poochikkum oru manasu undu athukkulla oru kanavu undunnu yaarum ninaikka maattengaraangale
athai sirai paduthathaan ninaikaraanga
nijamaana vanathu poociyai sonnen akkaa azhagu abathuthaan illayaa?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஏனோ மனது வலிக்கிறது.

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த
சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி
அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....//

ம்ம்ம் வருகின்ற காலங்களிம் நாமும் அதேதான் செய்ய போகின்றோமா?

இல்லை வருங்காலம் அப்படியிருக்க வாய்ப்பில்லை ஆனால் நிகழ்காலத்தில் கொஞ்சம் கொஞ்சம் இந்த நிலை இது மாறவேண்டும் வெகுசீக்கிரம் மாறும்

நன்றி சேகரன்

sakthi said...

கதிர் - ஈரோடு said...

//ஜந்தும் பத்துமாய் அவள் சேர்த்து வாங்கிய
ஆக்ஸ்போர்டு அகராதி இப்போது
காகிதக்கப்பலாகி அவள் கண்ணீரில் மிதக்கின்றது....//

//பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த
சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி
அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....//

வலியூட்டும் அசாத்திய வரிகள்

வாழ்த்துகள் சக்தி

நன்றி கதிர் தொடர் ஆதரவுக்கு

sakthi said...

SUBBU said...

எனக்கென்னமோ இப்போ எல்லாம் அப்படி இல்லன்னுதான் தோனுது

சரி சுப்பு அது உங்கள் கருத்து

நன்றி

sakthi said...

mayil said...

என்னது இது!! ஒரே அழுவாச்சியா இருக்கு. :(

அப்போ அப்போ அழுதுவைச்சிடறேன் மா

நன்றி தங்கள் வருகைக்கு மயில்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

இளவயதில் திருமணம் என்பது எப்படியாவது கை கழுவி விட்டா போதும் என்ற எண்ணம், இதை விட்டால் வேறு நல்ல வரன் அமையாமல் போய் விடுமோ என்ற பயம், பொருளாதாரப் பற்றாக்குறை இப்படி பல காரணங்களால் இளம் பெண்களின் கனவுகள் கலைக்கப் படுகின்றன.

நல்லா இருக்கு சக்தி

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

Suresh Kumar said...

எத்தனையோ வண்ணத்து பூச்சிகள் தங்கள் கனவுகளோடு முடக்கி போகின்றன

ஆம் சுரேஷ்

நன்றி

sakthi said...

பாலா said...

மீண்டும் ஒரு தேவலாம் ரகம்

சரி பாலா மீண்டும் நல்லதொரு கவிதையுடன் சந்திப்போம்

sakthi said...

அ.மு.செய்யது said...

என்னுடன் பள்ளியில் படித்த பல பட்டாம்பூச்சிகளின் கனவும் இப்போது இப்படி தான்
ஆகிவிட்டது.

பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை சேலையில் கைக்குழந்தையுடன் பார்க்கும் போது,
சிரிப்பதா அழுவதா என்று தெரியாது.எல்லோருக்கும் இருந்தது பாரதியின் புதுமைப் பெண் கனவு.

நிறைய சிந்தனைகளை தோற்று வித்தது சக்தி உங்கள் கவிதை !!!

நன்றி செய்யது

ஆனால் இது தான் நிஜம் ஏதோ சில காரணங்களுக்காக அவர்களின் கனவு கருக்கப்படும் பாவம் அவர்கள்

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

நல்லா இருக்கு, பாவம் அந்த வண்ணத்துப்பூச்சி, ஆனால் இது போன்ற நிகழ்வுகள் தற்பொழுது குறைவு என்றே கருதுகிறேன்.

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

அந்த வண்ணாத்துப் பூச்சி கூட ஓர் ஏழையா?..

அருமையாக இருந்தது கவி வரி....

வாழ்த்துக்கள்....

நன்றி சப்ராஸ் அபூ பக்கர்

sakthi said...

குடந்தை அன்புமணி said...

தற்போது இத்தகைய நிகழ்வுகள் இல்லையென்றே நினைக்கிறேன். இருந்தால் காவல் துறைக்கு தகவல் கொடுத்து தடுக்கலாமே..

இது முடிந்து போன கதை அன்பு அண்ணா

sakthi said...

கலையரசன் said...

//வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்
சிறையில் அடைத்துவிட்டார்கள்....
இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை.... //

இந்த 4 வரியை படிச்சா கூட புரியுதுங்க சக்தி!
100 அடிக்க போவதற்க்கு வாழ்த்துக்கள்!!

நன்றி கலை தொடர் ஆதரவிற்கும் ஊக்கமளித்தலுக்கும்

sakthi said...

rose said...

வானம் முழுவதையும் தன் வசப்படுத்த நினைத்த
வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்
சிறையில் அடைத்துவிட்டார்கள்....
\\
சில படிப்பறிவு இல்லா மக்களை திருத்தவே முடியாது சக்தி

ஆம் ரோஸ் ஆனால் படிப்பறிவு அற்றவர்கள் அல்ல

நன்றி தங்கள் வருகைக்கு ரோஸ்

sakthi said...

நேசமித்ரன் said...

கனவுகளைக் கொல்வதும் தன்னை பலியிடத்தருவதும் தியாகமல்ல தற்கொலைக்குரிய தைரியத்தை விட கீழ்த்தரமானது

மாளப் புதைக்கும் கரங்கள் மீளாச்சிறைக்குள் மிகுதியாய் ஒரு பருக்கைக்கும் தகுதி அற்றவர்கள் சக்தி

இல்லை நேசமித்ரரே அவள் சிறு பெண் அவளால் அனைவரையும் எதிர்க்க முடியாது

இவர்களை எதிர்ப்பது போன்ற நிகழ்வுகள் கதைகளிலும் சினிமாக்களிலும் வேண்டுமானால் நிகழலாம் ஆனால் நிஜத்தில் அது சாத்தியம் இல்லை

பெற்றோர்களையும் உற்றோர்களையும் எதிர்த்து அவள் எங்கே போகக்கூடும் அவள் பாவம் சிறு பெண்ணும் கூட

sakthi said...

rose said...

இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை....
\\
இதை பற்றி விமர்ச்சிக்க வார்த்தையும் இல்லை

நன்றி ரோஸ் அந்த வலியை புரிந்து கொண்டமைக்கு

sakthi said...

இய‌ற்கை said...

பாவம் அந்த வண்ணத்துப்பூச்சி, :-(

நன்றி இயற்கை ஆம் பாவம் தான் அவள்

sakthi said...

ஹேமா said...

என்ன சொல்ல சக்தி,எல்லாமே வலியின் அனுபவம்.யாருக்குச் சொல்லி அழ என்பதுபோல.

நானும்கூட.

வரிகள் தேடிய விதம் அருமை

நன்றி தோழி

sakthi said...

shakthikumar said...

arputhamaa irukku akkaa idhayam pizhiyum varigal enna soldrathu
vaarthaigal kidaikalai

நன்றி சகோதரா

sakthi said...

கிறுக்கல் கிறுக்கன் said...

ஏனோ மனது வலிக்கிறது.

நன்றிப்பா தங்களின் முதல் வருகைக்கு

kanagu said...

பலருடைய சிறகுகள் இதுபோல் பறிக்கப்பட்டு இருக்கின்றன :(

/*இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை.... */

உண்மை.. :(((

நல்ல கவிதை அக்கா :))

sakthi said...

kanagu said...

பலருடைய சிறகுகள் இதுபோல் பறிக்கப்பட்டு இருக்கின்றன :(

/*இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை.... */

உண்மை.. :(((

நல்ல கவிதை அக்கா :))

நன்றி கனகு