Monday 31 August 2009

மாயை!!!!!

மனம் எனும் மாயை அதன்
இருப்பிலும்
இல்லாமையிலும்
காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!!

நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே

நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!!

தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில்
கிளைக்கும் அதன்
தீனமான குரலில் தெரிகின்றது
பொங்கிகொண்டும் பெருகிக்கொண்டும்
இருக்கும் அதன் வேட்கைகள்
!!!

நிம்மதியற்ற பயணங்களும் துரத்தல்களும்
மனதின் மென்மைகளைஉருமாற்றியதால்
மழை நாட்களை போல்
மனமும் புகையோடி போய் இருக்கின்றது!!!!

பல சமயங்களில்
வியூக சூட்சமம் அமைத்தும்
சில சமயங்களில் வெடவெடப்பும்
மெலிவும் கொண்டு மடிந்து சுருள்கிறது
ஆனாலும் மீண்டும் உயிர்த்து நிற்கிறது!!!!


Sunday 30 August 2009

சுழற்புதிர்!!!





தயக்கங்களும் தவிப்புகளும்
வேடிக்கைகளும் வினோதங்களும்!!!


வலிகளும் வதைகளும்

பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!!

அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!




கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்

போய் விழுந்து விடுகின்றது!!!


காலமெனும் விசை
யாவையும்
சுற்றிவிடுகின்றது!!!

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்

சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!


ஆனாலும் பாதையின் தொலைவு

விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!

Saturday 29 August 2009

என் அன்பு காதலா!!!! (To My Sweet Hubby)


சிறு பெண்ணாக உன் கையில்
ஒப்படைக்கபட்டேன்

சின்னச் சிறு நாற்றாக என்னை
உன் வீட்டு தோட்டத்தில்
ஏற்று கொண்டாய் !!!!

அங்கு உள்ள ஆலமரத்திருக்கு
அடிபணிய கற்று குடுததாய்

நாணலாக வளைந்து போக சொல்லி தந்தாய்

உன்னால் எனது உலகம் இனிமை ஆனது !!!

பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது

உன் முகம் பார்த்து இதழ் விரித்ததால்
நான் தாமரை ஆனேன்!!!

உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்

நான் சூரிய காந்தி ஆனேன் !!! சில நேரங்களில் விதியின் சதியால்
நான் எரிந்து சாம்பல் ஆனேன்

உன் அன்பால் உயிர்த்து எழுந்தேன்

பினிக்ஸ் பறவை ஆக !!!

எனக்கு தெரியும் நீ
என்னை விட அழகன் என்று

உன் அருகில் இருப்பதால் நான் அழகி ஆனேன்!!!

எனது வலிகளின் போது நீ துடித்தாய் ...
எனது பிதற்றலை நீ சகித்தாய் ...
என் கண்ணில் கண்ணீர்
காணும் போது நீ கதறி அழுதாய் ....

எனது பனி காலத்தில்
உனது பார்வை
ஒன்றே போர்வையாக
எனது இளவேனிர்காலத்தில் குளிர் காற்று நீ

இருட்டிலும் என் நிழல் நீ

இறுதி வரை வரும் உறவு நீ !!!!


என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்

விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது

விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??

என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது அன்பு மட்டும் போதும்!!!!

பி.கு : வலையுலகில் எனது முதல் கவிதை (கவுஜ) , மீள்பதிவு

Thursday 27 August 2009

வண்ண வண்ண கனவுகள்!!!


வானவில்லின்
வர்ண சிதறல்களாய்
கண்ணிமைக்குள் ஜனித்திடுகின்றது
வண்ண வண்ண கனவுகள்!!!

அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு என்
கைப்பிடித்து நீ எடுத்தேகுவதாய்!!!!


அங்கு வானம் நம் இல்ல
வாசலில் நிறைந்திருப்பதாய்


விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....


உன் அன்பான
கரங்களின் கட்டளைக்கு
நான் ஆட்படுவதாய்

நீண்டு கொண்டே செல்கின்றது
என் கனவுகளின் சாம்ராஜ்ஜியம்
கூட முடிவற்றதாய்......

Wednesday 26 August 2009

விருதுகள் பலவிதம்!!!


மீண்டும் ஞானசேகரன், கடையம் ஆனந்த் மூலம் எனது தளத்திற்கு கிடைத்த விருது 20 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது

மிக குறுகிய காலத்தில் சிறப்பாய் பல பதிவுகள் மூலம் எனை ஆச்சரியப்படவைக்கும்

1.வித்யா - பக்கோடா பேப்பர்கள்

2.நேசமித்ரன் கவிதைகள்

3.ஜெஸ்வந்தி - மெளனராகங்கள்

4.பிரியமுடன் வசந்த்

5.கலையரசன் - வடலூரான்

6.பா.ராஜாராம் - கருவேல நிழல்

7. ஜமால் அண்ணா - கற்போம் வாருங்கள்

8.அ.மு.செய்யது
- மழைக்கு ஒதுங்கியவை

9.தமிழரசி - எழுத்தோசை

10.இயற்கை மகள்


12. நவாஸ் அண்ணா - மனவிலாசம்

13. அபு அண்ணா - என் உயிரே

14. ரம்யா - WILL TO LIVE

15. ஷ‌ஃபிக்ஸ் ஷ‌ஃபி உங்களில் ஒருவன்

16. சுரேஷ் - என் பக்கங்கள்


17 . சந்ருவின் பக்கம்

18 பிரிவையும் நேசிக்கும் காயத்ரி

19 அன்பு - open heart

20 பாலா - கடல் புறா

KEEP ROCKING FRIENDS !!!!!!!!

Tuesday 25 August 2009

யாருமற்ற......


யாருமற்ற வெட்டவெளியில்
சிறகு விரித்து பறக்கும் இந்த
சின்ன புறா

பெற்றவர்களும் மற்றவர்களும்
இணையாய் வந்தவரும்
துணை என சொன்னவர்களும்

தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்
தனிமைத்துயரில் தவித்து
தக்கையாகிவிட

கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்
_________யாய்....

Monday 24 August 2009

நண்பர் சிங்கை நாதனுக்காக பிரார்த்திப்போம்

நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.

எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.

இங்கும் பாருங்கள்

முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.

அன்புடனும் நட்புடனும் …

சக்தி