விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில்
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
ஜா.ராஜகோபாலன்
விமர்சகர் மோகனரங்கன்
இயக்குனர் சுகா
கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)
இசைஞானி இளையராஜா
எழுத்தாளர் ஜெயமோகன்
கவிஞர் தேவதேவன்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .
தேவதேவனின் அசல்பெயர் பிச்சுமணி கைவல்யம்
தேவதேவனின் பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகே இ.ராஜாகோயில்
தேவதேவனின் கவிதைத் துளிகள்.......
’தனிமைக் குளத்தில் இறங்கினான்
கொஞ்ச நேரத்தில் குஞ்சுமீன்கள்
கூட்டமாய் வந்து
மொய்த்தன தனிமையை’
’அசையும் போது தோணி
அசையாத போதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் இடையே
மின்னற் பொழுதே தூரம்’
’மோகம் ததும்பும் நீர்ப்பரப்பு
தீராவேட்கையில்
துள்ளி எழும் மீன் துடிப்பு
படக்கென்று நிறைவேறியதென்ன
லாவகமாய் கொத்திச்
சென்றது ஒரு பறவை
வானில் நீந்தி’
(குளித்து கரையேறாத கோபியர்கள்)
-- நீரில் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை
மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை’
(துள்ளல்)
உனக்குப் புரிகிறதா இதெல்லாம்?
துள்ளுகிறதா உன் இதயம்?
அதுதான் காதல் என்பது
காதல் என்பது இனங் கண்டுகொள்ளல் அல்ல
காதல் என்பது காணுதல் ஆகும்
தனக்குள் இருக்கும் உன்னதத்தைத்
தான் கண்டுகொள்ளல், மற்றும்
என் உன்னதத்தை உன் உன்னதம்
அல்லது உன்னதை என்னது
பிறிதெது வொன்றும் காதல் ஆகாது .....
இலக்கிய வட்டம் ஏராளமானவை இங்கிருந்தாலும் சில சமயம் அவை மிகச்சிறந்த எழுத்தாளர்களை கெளரவம் செய்வதை மனம் நிறைந்து பாராட்ட வேண்டியது நம் கடமை ...
கவிஞர் தேவதேவன் தமிழ்க்கவியுலகில் ஆகச்சிறந்த கவிஞரில் முதன்மையானவர்... அவருக்கான பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிற்ப்பிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.....
No comments:
Post a Comment