Monday, March 30, 2009

புதிய பாதை அமைப்போம்!!!!!


ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்


நீங்கள் எங்களின் வெளிச்சவிதைகள்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே
வைராக்கிய விதைகளை விதைப்பவர்க்கு
பாறாங்கல்லும் பஞ்சாகும்
மலையும் மண்மேடாகும்


மௌனத்தை நோக்கி பயணம் செய்து
நம் மனதின் வன்மத்தை களைவோம்
நிகழ்காலம் உங்களை பித்தன் எனறாலும்
வருங்காலம் உங்களை புத்தன் என்கும்

உள்ளத்தில் உறுதியுடனிருந்து
உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்

Friday, March 27, 2009

இன்னமும் காதலிக்கிறேன்

இன்னமும் காதலிக்கிறேன்
வான் நிலவை
வழியனுப்ப வந்த சூரியனை


உலக அழகி நான் தான் என
சொல்லாமல் மலரும்
வண்ண மலர்களை
காவலர்களால் துரத்தப்படும்
கள்ளன் போல ஒடும்
நடக்க மறந்த எறும்புகளை

கல் மனதையும் கரைக்கும்
கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட‌
குழந்தையின் புன்னகையை


உன் காதல் போனால் என்ன‌
நீ என்னை ஏற்காவிட்டாலும்
இவைகள் என்னை மறுதலிப்பதில்லை

அதற்காகவே வாழ்வேன்
இன்னமும் 100 ஆண்டுகள் இது
நேற்று நடந்த காதல் தேர்வில்
தோற்றவர்களுக்காக மட்டும்

என் கற்பனை குதிரை
வானம் வெளித்த பின்னும்
வைகறை புலர்ந்த பின்னும்
பூக்கள் முகிழ்த்த பின்னும்
உன்னருகே இருக்க விழையும் மனம்கண்மூடி நீ துயில்வதை
கண்டால் என் கற்பனை குதிரையும்
காற்றில் றெக்கை கட்டி பறக்கும்
கண் விழிக்கும் உன் முதல் பார்வைகாக என்
கண்ணின் மணிகளூம் பூத்திருக்கும்உன்னவர்கள் எனை வருத்தினாலும்
உனக்காய் சகித்திருப்பேன்
உன்னை பெற்றதற்காகவே
உன் தாயை துதித்திருப்பேன்

நம் மழலையின் முதல் ஸ்பரிசத்தில்
நின் யாக்கை சிலிர்க்க கன்டேன்
மழலைகள் பல பரிசளிக்க உள்ளம் கொண்டேன்
பாவம் பாரதம் பரிதவிக்கும் என இரங்கிவிட்டேன்

Tuesday, March 24, 2009

மனிதனுக்குள் மிருகம்

சித்திரையில் சுகப்பிரசவம் வேண்டாம் என
பங்குனியில் சிசேரியின் செய்து
சிசுக்களின் சுதந்திரம் பறிக்கும் சிந்தனைவாதிகள்

வரதட்சனை வரவில்லை என
பணத்திற்காக பெற்ற பெண்சிசுவை
கிணற்றில் துயில வைத்த புண்ணியவான்கள்

மனைவியின் மேல் சந்தேகம் எனவே
மகளுக்கு மரணதண்டனை தந்த
மனமற்ற‌ மானுட பதர்கள்

இன்றும் மனித உருவில்
மிருகங்கள் நம்மிடம்
உலவிக்கொண்டிருக்கின்றன

Saturday, March 21, 2009

பட்டாம்பூச்சியும் நானும்பட்டாம்பூச்சியே நம் இருவருக்கும்
எத்தனை பொருத்தம்
இளமையில் புழுவானோம்
மத்திமத்தில் கூட்டுக்குள்
வயோதிகத்தில் மட்டுமே நமக்கு
சிறகுகள் முளைக்கும் போலும்
முதுமை கூட அழகானதே பட்டாம்பூச்சி
நமக்கு சிறகுகள் முளைக்குமல்லவா!!!!!!!!

Tuesday, March 17, 2009

ஊமையின் கனவு

என் கண்ணீர் கண்ட பின்பும்
உன் மேல் நான் கொண்ட காதல்
உனக்கு புரியவில்லையா பெண்ணே
உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்
கற்பூர பொம்மையானேன்

எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென‌
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை

அடைத்து கொண்டு இருக்கும் மூங்கில் சாரமாகும்
வெறுமையான மூங்கில் புல்லாங்குழலாகும்
என்றால் என் ஏந்திழையாள்

உன் நினைவுகளால் என் மனம் அடைபட்டிருக்கிறது பெண்ணே
நான் சாரமாவேனா புல்லாங்குழலாவேனா
என்பது உன்னிடத்தில் அல்லவா உள்ளது

என் காதல் உன்னிடம் சொல்லபடாமலே
உன் செவி எட்டாமலே
ஊமை கண்ட கனாவாகிடுமோ
என அஞ்சுகிறேன் அஞ்சுகமே

Tuesday, March 3, 2009

தோழியாய் என் காதலியாய் !!!
பள்ளி தோழி அவள்
பால்யத்தின் பாதி அவள்

பரதமும் பாட்டும்
கதையும் கற்பனையும்

விமர்சனமும் விவாதங்களும்
என பயிற்று வித்தவள்

மேகத்தில் வர்ண ஜாலங்களும்
பூமியில் வண்ண கோலங்களும்

அவளால் எனக்கு அறிமுகம் ஆயின
அவள் என்னவள் என இறுமாந்திருந்தேன்

காலச்சக்கரத்தின் சுழற்சியில் காணவில்லை அவளை
காலம் மாறினாலும் ஏன் காத்திருப்பு மாறவில்லை

வஞ்சி அவளை நெஞ்சில் நிறுத்திவைத்தேன்
விட்டு பிரிதல் என்பது விடை பெரும் போது மட்டுமே என உணர்ந்தேன்

தொலைந்த போன தோழமைக்காக ஏங்கினேன்
திரும்பி வந்தனள் தீபத்தின் ஒளியாக தேவி அவள் !!!

Sunday, March 1, 2009

அம்மா

அன்னையை படைக்கும் போது
ஆண்டவன் அமைதியில் ஆழ்ந்திருப்பன் போலும்
அமைதியின் உருவமாய் அம்மா

5 வயது வரை உன் அணைப்பில் வைத்து இருந்தாய்
10 வயது வரை பக்கத்தில் இருந்தாய்
16 வயதில் நான் உனக்கு பாரம் ஆகி போனது ஏன் அம்மா ???
பார்ப்பவர் அனைவருக்கும் குளிர்தென்றல் ஆனேன்
உனக்கு மட்டும் அடி வயிற்று நெருப்பாய் !!!

என் இனிய பொன் நிலாவே
வானில் உள்ள வெண்ணிலவும்
பூமியில் உள்ள பெண்ணிலவும் ஒன்றே

கதிரவனின் சுடு தனல் தன்னுள் கொண்டு
நிலவொளி ஆக தரும் அம்புலியும்

வன் சொற்களால் வதைபட்டாலும்
சிரிக்கும்
அவளும் ஒன்று தானே ???

கருமுகில் என கஷ்டங்கள் சுழ்தாலும்
வீறு கொண்டு விரைகின்றனர்

காத்துநிற்கும் விண்மீன்களை தவிர்க்கின்றனர்
(பூமி) காதலனிடம் மட்டுமே கதைக்கின்றனர்