Saturday, February 28, 2009

என்னை தன்னாக்கியவன்!!!

காற்றே உனக்கு ஆணை இடுகிறேன்
தென்றலாய் அவனை தழுவி செல்
இல்லையேல் உன்னை சிறை செய்வேன்
அவன் கனவை கலைத்த குற்றத்திற்காக
ஏன் எனில் அவன் கனவில் இருப்பது நான்!!!

நேசித்தலை விட நேசிக்கபடுதல்
அழகானது என கற்று குடுத்தவன் அவன்
தோற்றால் எனக்கு பிடிக்காது
ஆனால் அவனிடம் தோற்க பிடிக்கின்றது
ஏன் எனில் வெற்றி பெறுபவன் என்னவன் அல்லவா!!!

Friday, February 27, 2009

வரதட்சனை

எல்லா சந்தைகளிலும் வாங்குகிறவன் தருகிறான்
கல்யாண சந்தையில் மட்டும் விற்பவன் தருகிறான்
வரன் தரும் தட்சனைஆக இருந்தது
இப்பொழுது வரனுக்கு தர வேண்டிய தட்சனை ஆக
மாறிபோனது ஏனோ ???

Thursday, February 26, 2009

மதம்

மக்களால் மக்களின் மேனமைகாக உருவாக்கப்பட்டவை
இன்று மதத்தின் பெயரால் மனித நேயம் மரித்து விட்டதே
இனத்தின் பெயரால் இழிவுபடுதபடுகிறதே !!!

அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்
அல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத் நபி
இயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்
என்றாவது அடுத்தவரை இம்ச்சிக்கசொல்கிறதா !!!

மனிதனை செம்மைப்படுத்த வந்த மதம் இன்று
மனிதர்களை கொன்று குவிப்பதை என்ன வென்று இயம்புவது !!!

ஏன் இப்படி ஆனாய்!!!!!

காதலிக்கும் போது கண்ணன் ஆனாய்
மணம் செய்த பின் மாதவன் ஆனாய்
கருவில் இருப்பது பெண் என தெரிந்ததும்
ஏன் கம்சன் ஆனாய் ????

Tuesday, February 24, 2009

உயிராய் இருக்க வருவாயா?

என்னுள் நிறைந்தவனே
எனக்காய் வாழ்பவனே
சொற்களில் சரம் தொடுத்து
அற்புத வரம் கேட்பேன்
இம்மையிலும் மறுமையிலும்
எத்தனை இன்னல் வந்தாலும்
என்னை விட்டு பிரியாதே
சிறு தவறு நான் செய்தாலும்
சிரித்து விட்டு சென்று விடு
எனக்கே எனக்காக உன் கோபத்தை கொன்று விடு ...

Monday, February 23, 2009

வண்ணத்து பூச்சி !

சிரித்து பேசி சிந்தை கவர்ந்தாள் ஒருத்தி
கவிதை பேசி கருத்தையும் கொள்ளை கொண்டாள்
இனியவள் அவள் இன்னல் பல கண்டாலும்
எழுந்து நிற்பாள் பாரதி கண்ட புதுமை பெண்ணாக
என் வாழ்வில் வசந்தம் வீசி சென்றாள்

இறைவா எப்பொழுதும் அவள் துணை இரு
இன்னலை தீர்த்துவிடு எங்கு இருந்தாலும் வாழ விடு
அவள் வாழ்வில் வண்ணம் பல சேர்த்து விடு
மீண்டும் அவளை வண்ணத்து பூச்சி ஆக்கிவிடு .

Sunday, February 22, 2009

வானத்து மகளே

ஐந்து இரு மாதங்கள் அடிவயிறறில உனை தாங்கி
அம்மா என அலறி நான் ஈன்று எடுத்த தேவதையே
வானவரும் தேவரும் பூ மழை பொழிய
என் இல்லம் வந்த காரிகையே
அஞ்சனைஇல் கண் எழுதி அல்லி பூ மெத்தைஇட்டு
முத்து சிவிகை உடன் முல்லை பந்தலில் தொட்டில் இட்டு
நான் காத்து இருக்க
எனை வெறுத்து பூமகளே எங்குசென்றாய்
இழப்பின் வலி என்ன வென்று எனக்கு உணர்த்த சென்றாயோ
மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி

Saturday, February 21, 2009

மறக்கமுடியுமா

அன்னையின் அன்பை , அழகான தாலாட்டை ;
தந்தையின் மடியில் தலை வைத்து உறங்கியதை;
சகோதரனின் பாசத்தை ,சகோதரியின் நேசத்தை;
அனைவரும் சேர்ந்து அழகாய் சண்டை இட்டதை;
ஒன்றாய் கூடி நிலா சோறு உண்டதை;
கண்ணீருடன் எனக்கு விடை தந்ததை;
காணாத போதும் என்னை வாழ்த்துவதை;
மறக்க முடியுமா ????

Friday, February 20, 2009

முதிர் கன்னிகள்

எனக்கு தெரிந்த தோழியின் கதை இது
ஹே ஆண்களே
அழகான பெண்களுக்கு மட்டும் முன் உரிமை என்றால்
எங்களை போன்ற அழகற்ற பெண்கள் என்ன தான் செய்வது
கருப்பு என்பது திராவிட நிறம் அல்லவா.

ஒருவன் சொந்தமாக வீடு உள்ளதா என கேட்கிறான்
இன்னொருவன் எனக்கு மாமனார் வேண்டும்
உன் தகப்பன் உயிருடன் இல்லை என்கிறான்.

அட மடையர்களே என்னை திருமணம் செய்து கொள்ள
ஒருவரும் இல்லையா
நீ தாலி எனக்கு கட்ட போகிறாயா
இல்லை எனது வீட்டிற்கா
இல்லை இல்லாத என் தந்தைகா .

ஹே கடவுளே
எனக்கு ராமன் வேண்டாம்
ஒரு ராவணன் ஆவது கணவன் ஆகட்டும்.


ஜன்னல் கம்பிகளுக்கு பின்னால் நின்று நின்று
ஜன்னல் மரம் மட்டும் அல்ல
என் மனமும் இற்று விட்டது ...

Saturday, February 14, 2009

என் அன்பு காதலா ! to my sweet hubby

சிறு பெண்ணாக உன் கையில் ஒப்படைக்கபட்டேன்
சின்னச் சிறு நாற்றாக என்னை உன் வீட்டு தோட்டத்தில்
ஏற்று கொண்டாய் .

அங்கு உள்ள ஆலமரத்திருக்கு அடிபணிய கற்று குடுததாய்
நாணலாக வளைந்து போக சொல்லி தந்தாய்
உன்னால் எனது உலகம் இனிமை ஆனது ...


பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது
உன் முகம் பார்த்து இதழ் விரிததால்
நான் தாமரை ஆனேன்
உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் .

சில நேரங்களில் விதியின் சதியால்
நான் எரிந்து சாம்பல் ஆனேன்
உன் அன்பால் உயிர்த்து எழுந்தேன்
பினிக்ஸ் பறவை ஆக .

எனக்கு தெரியும் நீ என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருபதால் நான் அழகி ஆனேன்.

எனது வலிகளின் போது நீ துடித்தாய் ...
எனது பிதற்றலை நீ சகித்தாய் ...
என் கண்ணில் கண்ணீர் காணும் போது நீ கதறி அழுதாய் .

எனது பனி காலத்தில் உனது பார்வை
ஒன்றே போர்வைஅக....
எனது இளவேநிர்காலத்தில் குளிர் காற்று நீ
இருட்டிலும் என் நிழல் நீ
இறுதி வரை வரும் உறவு நீ ....


என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பிலாத உன் காதல் என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??

என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது அன்பு மட்டும் போதும்....