Tuesday, August 25, 2009

யாருமற்ற......

யாருமற்ற வெட்டவெளியில்
சிறகு விரித்து பறக்கும் இந்த
சின்ன புறா

பெற்றவர்களும் மற்றவர்களும்
இணையாய் வந்தவரும்
துணை என சொன்னவர்களும்

தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்
தனிமைத்துயரில் தவித்து
தக்கையாகிவிட

கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்
_________யாய்....

38 comments:

சீமான்கனி said...

//கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்
_________யாய்....//

நிறையப்பேர் அப்படித்தானே....
அருமை...

ப்ரியமுடன் வசந்த் said...

//தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்//

தன்னிலை விளக்கம்

அழகு......

அப்துல்மாலிக் said...

சக்தி என்னாச்சி உங்களுக்கு
ஒரே சோகமயமான கவிதையா எழுதுறீங்க‌

- இரவீ - said...

......

ஆ.ஞானசேகரன் said...

//நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்//

99/100 பேர் இப்படிதான் என்று நினைக்கின்றேன்..

நட்புடன் ஜமால் said...

படத்தில் இருக்கும் அழகு

வரிகளால் ஆழமாக்கப்பட்டுள்ளது

சோகம் ஏன் சகோதரி

------------

வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை]]

இந்த நிலையை நாம் தான் மாற்றி கொள்ள(ல்ல்) வேண்டும்.

Anonymous said...

வாழ்க்கையின் வலி வார்த்தையில் தெரிக்கிறது...இதை வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்களில் ஒருத்தியாகையினால் உன் வலி எனக்கும் வலிக்கிறது சக்தி.....ஆம் உன்னைப் போல் ஒற்றையாய் விடப்பட்ட பறவை....

Anonymous said...

சக்தி, இருப்பது ஒரு வாழ்க்கை, அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரசனையுடன் வாழலாம். தனிமை சிறையை தகர்த்து என்ன பிடிக்குதோ அதை மற்றவர்களுக்கு இடையுறு இல்லாமல் செய்து, சந்தோசமாய் இருங்கள்.

Sanjai Gandhi said...

வழக்கம் போல நல்லா இருக்கு மாமி..

ஈரோடு கதிர் said...

//தக்கையாகிவிட//

ஆயிரம் அர்த்தம் ஒளிந்திருக்கிறது சக்தி

கலையரசன் said...

இருந்தும் தனியாய்...
ஏன் இந்த சோகம்?

எந்த சோகமாயினும் பனிபோல் மறையும், கவலைவிடு தோழி!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்//
எனக்குத் தெரிய பலரது வாழ்க்கையில் இந்த கசப்பும் தனிமையும் இருக்கிறது.
நல்ல கவிதை சக்தி.

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

S.A. நவாஸுதீன் said...

வரிகளில் சோகம் அதிகம் இருந்தாலும் ஒரு அருமையான கவிதை கிடைத்திருக்கிறது.

சக்தி! கவிதை கலக்கலா இருக்கு.

SUFFIX said...

தனிமையின் கொடுமை....சோகம் சோகமாய்.

gayathri said...

நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்//

naanum than ma

நேசமித்ரன் said...

தனிமைத்துயரில் தவித்து
தக்கையாகிவிட

அருமையான வரி

சூழ இருந்தும்

அழகு

நேசமித்ரன் said...

எனக்கு பிடித்திருக்கிறது இந்தக் கவிதையும் சக்தி

sakthi said...

seemangani said...

//கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்
_________யாய்....//

நிறையப்பேர் அப்படித்தானே....
அருமை...

நன்றி சீமான்

sakthi said...

பிரியமுடன்...வசந்த் said...

//தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்//

தன்னிலை விளக்கம்

அழகு......

நன்றி வசந்த்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

சக்தி என்னாச்சி உங்களுக்கு
ஒரே சோகமயமான கவிதையா எழுதுறீங்க‌

சும்மா தான் அபு அண்ணா

sakthi said...

Ravee (இரவீ ) said...

......

நன்றி ரவீ

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்//

99/100 பேர் இப்படிதான் என்று நினைக்கின்றேன்.

ஆம் சேகரன்

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

நட்புடன் ஜமால் said...

படத்தில் இருக்கும் அழகு

வரிகளால் ஆழமாக்கப்பட்டுள்ளது

சோகம் ஏன் சகோதரி

------------

வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை]]

இந்த நிலையை நாம் தான் மாற்றி கொள்ள(ல்ல்) வேண்டும்.

கண்டிப்பாக ஜமால் அண்ணா

sakthi said...

தமிழரசி said...

வாழ்க்கையின் வலி வார்த்தையில் தெரிக்கிறது...இதை வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்களில் ஒருத்தியாகையினால் உன் வலி எனக்கும் வலிக்கிறது சக்தி.....ஆம் உன்னைப் போல் ஒற்றையாய் விடப்பட்ட பறவை....

நன்றி தமிழ்

sakthi said...

mayil said...

சக்தி, இருப்பது ஒரு வாழ்க்கை, அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரசனையுடன் வாழலாம். தனிமை சிறையை தகர்த்து என்ன பிடிக்குதோ அதை மற்றவர்களுக்கு இடையுறு இல்லாமல் செய்து, சந்தோசமாய் இருங்கள்.

சரிங்க சகோ

அ.மு.செய்யது said...

க‌விதையின் பொருள் புரியுது.ஆனா எத‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து என்று தெரிய‌வில்லை.

என்ன‌ பிர‌ச்சினை உங்களுக்கு நாங்கெல்லாம் இருக்கும் போது..

sakthi said...

SanjaiGandhi said...

வழக்கம் போல நல்லா இருக்கு மாமி..

நன்றி அண்ணா

sakthi said...

கதிர் - ஈரோடு said...

//தக்கையாகிவிட//

ஆயிரம் அர்த்தம் ஒளிந்திருக்கிறது சக்தி

ஆம் கதிர்

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

கலையரசன் said...

இருந்தும் தனியாய்...
ஏன் இந்த சோகம்?

எந்த சோகமாயினும் பனிபோல் மறையும், கவலைவிடு தோழி!!

நன்றி கலை

sakthi said...

ஜெஸ்வந்தி said...

//கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்//
எனக்குத் தெரிய பலரது வாழ்க்கையில் இந்த கசப்பும் தனிமையும் இருக்கிறது.
நல்ல கவிதை சக்தி.

நன்றி ஜெஸ்

sakthi said...

பிரபா said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

கண்டிப்பாக வருகிறேன் பிரபா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

வரிகளில் சோகம் அதிகம் இருந்தாலும் ஒரு அருமையான கவிதை கிடைத்திருக்கிறது.

சக்தி! கவிதை கலக்கலா இருக்கு.

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

தனிமையின் கொடுமை....சோகம் சோகமாய்.

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

sakthi said...

gayathri said...

நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்//

naanum than ma

எல்லோரும் ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைதான் காயா இது

sakthi said...

நேசமித்ரன் said...

தனிமைத்துயரில் தவித்து
தக்கையாகிவிட

அருமையான வரி

சூழ இருந்தும்

அழகு

எனக்கு பிடித்திருக்கிறது இந்தக் கவிதையும் சக்தி

நன்றி நேசமித்ரரே

தங்கள் ஊக்கம் தரும் வருகைக்கு

sakthi said...

அ.மு.செய்யது said...

க‌விதையின் பொருள் புரியுது.ஆனா எத‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌து என்று தெரிய‌வில்லை.

என்ன‌ பிர‌ச்சினை உங்களுக்கு நாங்கெல்லாம் இருக்கும் போது..

சில சமயங்களில் யாரிடமும் சொல்லமுடியாத பிரச்னைகளும் எல்லோருக்கும் உண்டு செய்யது தம்பி

Unknown said...

//கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்//
எனக்குத் தெரிய பலரது வாழ்க்கையில் இந்த கசப்பும் தனிமையும் இருக்கிறது.
நல்ல கவிதை.

சில சமயங்களில் யாரிடமும் சொல்லமுடியாத பிரச்னைகளும் எல்லோருக்கும் உண்டு.