Wednesday, August 19, 2009

உயிர் குடித்தல்!!!!


அந்த வாகனக்காற்று

அளாவியதில்

தொங்குநிலைஎன் உடல் அசைந்தது

விழிப்புற்றேன்

சோம்பல் முறிய

கொதிக்கும் தார் மணத்தால்

சூழப்பட்டிருந்தேன்

காற்றின் வெக்கை

கை கால் உதைத்தேன் காற்றுவெளியில்

அழத்தொடங்கினேன்

எங்கே அவள் ?

என் உணர்ச்சி புரியாதவளா ?

இல்லையே ?!

என்னுயிரின் வலியையே உணர்பவளாயிற்றே ?!

வருகிறாள் வருகிறாள்

அவளுக்கு இடம் மாற்றப்பட்டேன்

ஊசி முனைத்துவாரவழி

முறிந்த இரத்தத்தை

என்னுள் புகட்டும் ஆயத்தம்

ஆமாம் !

என்னுள் புதைந்த

சுரபி வழி

அவள் உயிர் குடிக்கும் முயற்சியில் நான் !!!!!!!!!

அடிப்பாவி !!!!!!!

உன் வறுமையின் சாரத்தை எல்லாம்

இங்கேயா இறக்கி வைத்திரு க்கிறாய் !!!!!!!!!!!!!!!????????????????????????

சண்டாளி !!!!!!

திரவமே இல்லையேடி

அவளுக்கு எட்டவில்லை

என்னவோ முணுமுணுக்கிறாள் !

"பாவி பயலுவோ இத கூட

கண்ணு வாங்காம "

நான் உயிர் குடிக்கும்

முயற்ச்சியில் தீவிரமாய் இருந்தேன் ...

பி.கு : சில கவிதைகள் மனதை விட்டு அகலாது இது நான் மிகவும் ரசித்த கவிதை இந்த வலையுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய என் உடன் பிறவா சகோதரர் பாலாவின் கவிதை.

அவர் வலைத்தளம் கடல் புறா

30 comments:

அப்துல்மாலிக் said...

சக்தி அவரோட வரிகளை உங்களையும் விட்டுவைக்கவில்லையா

உண்மையை சொல்லுங்க உங்களுக்கு முழுசா புரிந்ததா?

சீமான்கனி said...

//கை கால் உதைத்தேன் காற்றுவெளியில்

அழத்தொடங்கினேன்

எங்கே அவள் ?

என் உணர்ச்சி புரியாதவளா ?

இல்லையே ?!

என்னுயிரின் வலியையே உணர்பவளாயிற்றே ?!//

அருமையான வரிகள் ,
சில வரிகள்..நமக்கு தூரமாய் இருக்கின்றன.....

ஹேமா said...

சக்தி,கவிதை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு படம் காட்டும்.எனக்கு என்னமோ... விபத்தாயிருக்குமோன்னு காட்டுது.

அ.மு.செய்யது said...

தலைப்பை பார்த்தவுடனே புரிந்து விட்டது இது ஒரு பின்நவீனத்துவ கவிதை என்று.

பாலாவைத் தவிர வேறு யார் இப்படி எழுத முடியும் ??

பழைய சாதமாக இருந்தாலும்,அதை பீங்கான் தட்டில் வைத்து பரிமாறிய உங்களுக்கு நன்றி !!!

rose said...

nallairukku sakthi

ஈரோடு கதிர் said...

//நான் உயிர் குடிக்கும்
முயற்சியில் தீவிரமாய் இருந்தேன் ...//

இயல்பான உணர்வு

நன்றி சக்தி

ஈரோடு கதிர் said...

//நான் உயிர் குடிக்கும்
முயற்சியில் தீவிரமாய் இருந்தேன் ...//

இயல்பான உணர்வு

நன்றி சக்தி

நட்புடன் ஜமால் said...

அமுதம்.



-------------

படமும் அழகு

பகிர்வும்.

Btc Guider said...

//"பாவி பயலுவோ இத கூட
கண்ணு வாங்காம "//

மனித வக்கிரமோ?

கலையரசன் said...

//சுரபி வழி
அவள் உயிர் குடிக்கும் முயற்சியில் நான் //

என்னை கவர்ந்த வரிகள்..
பின்றீங்கங்க...

S.A. நவாஸுதீன் said...

குருநாதர பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.

அவர் ரேஞ்சே தனி.

vasu balaji said...

அருமையான சொல்லாண்மை. அற்புதம். நன்றி உங்களுக்கும் பாராட்டுக்கள் பாலாவுக்கும்.

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

நேசமித்ரன் said...

saththiyama enakku puriyala sakthi..

:(

Anonymous said...

saththiyama enakku puriyala sakthi..

:(

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

சக்தி அவரோட வரிகளை உங்களையும் விட்டுவைக்கவில்லையா

உண்மையை சொல்லுங்க உங்களுக்கு முழுசா புரிந்ததா?

புரியலைன்னாலும் ஆன்லைன் வந்தா விசாரிச்சுகுவேன் அபு அண்ணா

sakthi said...

seemangani said...

//கை கால் உதைத்தேன் காற்றுவெளியில்

அழத்தொடங்கினேன்

எங்கே அவள் ?

என் உணர்ச்சி புரியாதவளா ?

இல்லையே ?!

என்னுயிரின் வலியையே உணர்பவளாயிற்றே ?!//

அருமையான வரிகள் ,
சில வரிகள்..நமக்கு தூரமாய் இருக்கின்றன.....

நன்றி சீமான்

sakthi said...

ஹேமா said...

சக்தி,கவிதை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு படம் காட்டும்.எனக்கு என்னமோ... விபத்தாயிருக்குமோன்னு காட்டுது.

இல்லை ஹேமா இது விபத்தை பற்றி அல்ல

sakthi said...

அ.மு.செய்யது said...

தலைப்பை பார்த்தவுடனே புரிந்து விட்டது இது ஒரு பின்நவீனத்துவ கவிதை என்று.

பாலாவைத் தவிர வேறு யார் இப்படி எழுத முடியும் ??

பழைய சாதமாக இருந்தாலும்,அதை பீங்கான் தட்டில் வைத்து பரிமாறிய உங்களுக்கு நன்றி !!!

நன்றி செய்யது

sakthi said...

rose said...

nallairukku sakthi

நன்றி ரோஸ்

sakthi said...

கதிர் - ஈரோடு said...

//நான் உயிர் குடிக்கும்
முயற்சியில் தீவிரமாய் இருந்தேன் ...//

இயல்பான உணர்வு

நன்றி சக்தி

நன்றி கதிர்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அமுதம்.



-------------

படமும் அழகு

பகிர்வும்.

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

ரஹ்மான் said...

//"பாவி பயலுவோ இத கூட
கண்ணு வாங்காம "//

மனித வக்கிரமோ?

ஆம் ரஹ்மான்

sakthi said...

கலையரசன் said...

//சுரபி வழி
அவள் உயிர் குடிக்கும் முயற்சியில் நான் //

என்னை கவர்ந்த வரிகள்..
பின்றீங்கங்க...

பின்னியது பாலா கலை

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

குருநாதர பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.

அவர் ரேஞ்சே தனி.

ஆமா நவாஸ் அண்ணா

sakthi said...

வானம்பாடிகள் said...

அருமையான சொல்லாண்மை. அற்புதம். நன்றி உங்களுக்கும் பாராட்டுக்கள் பாலாவுக்கும்.

நன்றி வானம்பாடிகள்

sakthi said...

நேசமித்ரன் said...

saththiyama enakku puriyala sakthi..

:(

நன்றி நேசமித்ரரே

இதானே எங்களுக்கு வேண்டும்

sakthi said...

கடையம் ஆனந்த் said...

saththiyama enakku puriyala sakthi..

:(

நன்றி ஆனந்த்

sakthi said...

ரோட்டோரத்து மரத்து தூளியில் உறங்கும் குழந்தை தன் தாயை தேடுகின்றது அது தன் அன்னையிடம் அமுது உண்பதை பற்றிய கவிதையிது

"உழவன்" "Uzhavan" said...

இன்றைய நவீனத்தில் தன் அழகு கெடும் என்று எண்ணி, உயிர் புகட்டாமல் இருப்பதாகக் கேள்வி.
நல்ல கவிதை