Tuesday, August 4, 2009

வல்லமை தாராயோ !!!!

அகதியாய் அலைந்து உயிர் பிழைக்கவும்
பதுங்கு குழியில் பதுங்கிடவும்

நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்

மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்

கற்பு நெறிகள் கயவர்களால்
காற்றில் கரைவதைகண்டும்

செம்புனல் கண்டு சிதறாமலும்
வன்கொடுமை கண்டு வளையாமலும்

இருக்க வல்லமை தாராயோ!!!!!!!

யுத்த பூமி

பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்து
இறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு

முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு

புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது

இது யுத்த பூமி எங்கேடா சாமி???

கரியும் வைரமாகும்

கூழாங்கல் கரியை கண்டது
கர்வத்தில் சிரித்தது
கரி தன்னை பூமியில் புதைத்தது
காலத்தின் கோலம் கரிகட்டையாய் நாம்

பூமிக்குள் புதையும் என் இனம்
யுகங்கள் கழியும்
மண்ணில் புதைந்த மக்களும்
கரியும் வைரம் ஆகும்

இறைமை கரி கட்டையின் பொறுமைக்கு
அதை வைரம் ஆக்கும்
ஆனால் கூழாங்கலே
எங்கள் கால்களில் மிதி படத்தான் போகிறாய்

எம்மை கண்டு எள்ளி நகை ஆடும்
அனைவருக்கும் இது பொருந்தும்

நிறுத்துங்கள் தோழர்களே

உதித்திடும் செங்கதிரோன் எங்கள்
உள்ளத்து துயர் துடைப்பான் என எண்ணினோம்

அருணனும் எங்கள் நிலை கண்டு அழுதிடும்
பரிதியும் எங்கள் நிலை கண்டு பதறிடும் என நம்பினோம்

ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்

ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவ‌து???

போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது

பி.கு : நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் என் மக்களுக்காக ஆதங்கத்துடன் எழுதிய கவிகளில் சில உங்கள் பார்வைக்கு சிலர் உங்களின் பழைய பதிவுகளை தவற விட்டுவிட்டோம் என கேட்டுக்கொண்டதற்க்காக மீண்டும் என் மற்றொரு வலைதளத்தில் இருந்த கவிதையை இங்கு பதிவிடுகிறேன்......

52 comments:

நேசமித்ரன் said...

சக்தி

இந்த வார்த்தைகளில் மீதமிருக்கும் ஈமத்தீ ,பால் கட்டிக்கொண்ட தாயின் மார்பாய் வேதனை பகிர வியலாமல் மொழித்திணரும் கையறு நிலை ,குமுறும் ஆற்றாமை மீது எச்சில் துப்பும் இறையாண்மை , வெறியாட்டு மீதான சீற்றம்
வன்முறைக்கு எதிரான தன்மானத்தின் குரல் ,வீணாகும் உயிர்ப் பலிகள் யாவும் காட்சிப் படுத்தும் உங்கள் கவிமொழி .நெற்றிப் பொட்டில் வைக்கப் படுகிற துப்பாக்கியின் குழல் உங்கள் கவிதை முன்வைக்கும் கேள்விகள் . தொடர்ந்து எழுதுங்கள் .தீர்ந்து போய்விடவில்லை உதிரத்தில் உஷ்ணம் .மாண்டு போய் விடவில்லை மரணங் கண்டு உயிர்த் திமிரும் தீ ..!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

''ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்''
அப்பட்டமான உண்மையிது. ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் குமுறுவதைக் காண மனதுக்கு ஆறுதலாகவிருக்கிறது சகோதரி.

Admin said...

//''ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்''//

நெஞ்சைத் தொட்ட வரிகள்.....
ஈழத்து மக்களின் ஏக்கங்களை அழகாக சொல்லியுள்ளிளீர்கள் நன்றிகள்..

நட்புடன் ஜமால் said...

நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்]]

ஓலமிட்ட அழத்தோன்றுகிறது ...

நட்புடன் ஜமால் said...

முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு]]

வார்த்தைகள் அருமை என்று இரசிக்க இயலவில்லை அதன் வலி கண்டு ...

நட்புடன் ஜமால் said...

போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது]]

இது மிக அவசியம்.

ஆ.ஞானசேகரன் said...

//நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்

மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்//

படிக்கும்போழுது மனம் நடுங்குகின்றது...

ஆ.ஞானசேகரன் said...

//புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது//

ம்ம்ம்ம் என்ன செய்யபோகின்றோம் என்றுதான் தெரியவில்லை

ஆ.ஞானசேகரன் said...

//போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது//

உண்மைதான் சக்தி....

Anonymous said...

ரொம்ப கஷ்ட்டமா இருக்குங்க.

அ.மு.செய்யது said...

அனைத்து கவிதைகளுமே உணர்ச்சி பெருக்காக அமைந்திருக்கிறது.

மீள்பதிவுக்கு நன்றி. நிறைய புதிய தமிழ் வார்த்தைகளை கற்று கொள்ள முடிந்தது.

Anonymous said...

வலிகளுக்கு மீண்டும் வாழ்க்கை...மறந்து விடாதீர்கள் இந்த மரணங்களின் அவலத்தை என நினைவூட்டுவதைப் போல இருக்கிறது..இது சரித்திரம் பேசும் ஆனால் மீட்காது இந்த வதைகளை....

ப்ரியமுடன் வசந்த் said...

நெஞ்சு கனக்கும் வரிகள்

gayathri said...

கஷ்ட்டமா இருக்கு.

சப்ராஸ் அபூ பக்கர் said...

///முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு///

யுத்த பூமியின் கவி வரிகள் வித்தியாசமாய் இருந்தது.

வாழ்த்துக்கள்.....

தேவன் மாயம் said...

தற்போதும் தினமும் தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவதாக இலங்கையிலிருந்து வந்த நண்பர் சொன்னார்...

கலையரசன் said...

துயரத்தை மீண்டும் நினைவுபடுத்தும்... மீல்ஸ்!

ஈரோடு கதிர் said...

இருக்கும் வலியை
இன்னும் கூட்டும் வரிகள்

பா.ராஜாராம் said...

பலகீன படுத்துகிறது வலியும்..இயலாமையும்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:(

Suresh Kumar said...

நாங்க எவ்வளவோ மிஸ் பண்ணிகிட்டோம் என்பது இப்போது தான் தெரிகிறது .

ஒவ்வெரு வரிகளிலும் நிதர்சனகளையும் வலிகளையும் உணர்ந்திருக்கிறீர்கள்

Suresh Kumar said...

ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவ‌து??? ///////////////

இத்தனை உயிர்கள் இழந்தும் நம் உரிமைகளை இழந்து விட்டோமே ( இழக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டோம் )

S.A. நவாஸுதீன் said...

கொழுந்து விட்டு மீண்டும் எரிகிறது சக்(தீ). மனதை அப்படியே சுக்கு நூறாக கிழிக்கும் வரிகள்.

S.A. நவாஸுதீன் said...

//நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்

மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்//

வரிகள் ஒரு விதமான படபடப்பை உண்டு பண்ணுகிறது

S.A. நவாஸுதீன் said...

மீள்பதிவாயினும் முன்பு படிக்காதது. மனதை மிகவும் பாதித்தது.

அப்துல்மாலிக் said...

மனவலியை உண்டாக்கிய வரிகள்

புரட்சி தெரிகிறது சக்தி

இதயத்தின் ஓசைகள் said...

கேளுங்கள் தரப்படும் என்றான்
கேட்காமலே எடுக்கப்படுகின்றன
ஈழத் தமிழர் உயிர்கள்

வலி வலி வலி வலி
போர் நடக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மனிதாபிமான நிறுவன ஊழியன்
இலங்கையில் இருந்து யாதவன்

உள்ளிருப்பதை உருக உருக வாசித்து
உற்சாக கூத்தாடி உணர்ந்து அழவேண்டும்
சொந்தங்களை விட்டுவருகிறேன் என கூறக்கூட
சந்தர்ப்பமின்றி வந்துவிட்டேன்

SUBBU said...

:(((((((((

ஹேமா said...

//''ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்''//

வார்தையே ஆயுதமாய் தோழி நீ.
ஆவதற்கு ஒன்றுமில்லை இப்போது வந்த செய்தியைத் தொடர்ந்து!
அழுது புலம்புவதைத் தவிர.
எதிரி தன் வழியில் போய்க்கொண்டே இருக்கிறான்.

"உழவன்" "Uzhavan" said...

//பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்து
இறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு//

மிக ரசித்தேன். அனைத்து வரிகளிலும் அனல் தெரிகிறது.

sakthi said...

நேசமித்ரன் said...

சக்தி

இந்த வார்த்தைகளில் மீதமிருக்கும் ஈமத்தீ ,பால் கட்டிக்கொண்ட தாயின் மார்பாய் வேதனை பகிர வியலாமல் மொழித்திணரும் கையறு நிலை ,குமுறும் ஆற்றாமை மீது எச்சில் துப்பும் இறையாண்மை , வெறியாட்டு மீதான சீற்றம்
வன்முறைக்கு எதிரான தன்மானத்தின் குரல் ,வீணாகும் உயிர்ப் பலிகள் யாவும் காட்சிப் படுத்தும் உங்கள் கவிமொழி .நெற்றிப் பொட்டில் வைக்கப் படுகிற துப்பாக்கியின் குழல் உங்கள் கவிதை முன்வைக்கும் கேள்விகள் . தொடர்ந்து எழுதுங்கள் .தீர்ந்து போய்விடவில்லை உதிரத்தில் உஷ்ணம் .மாண்டு போய் விடவில்லை மரணங் கண்டு உயிர்த் திமிரும் தீ ..!

நன்றி நேசமித்ரரே

sakthi said...

ஜெஸ்வந்தி said...

''ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்''
அப்பட்டமான உண்மையிது. ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் குமுறுவதைக் காண மனதுக்கு ஆறுதலாகவிருக்கிறது சகோதரி.

நன்றி ஜெஸ்

sakthi said...

சந்ரு said...

//''ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்''//

நெஞ்சைத் தொட்ட வரிகள்.....
ஈழத்து மக்களின் ஏக்கங்களை அழகாக சொல்லியுள்ளிளீர்கள் நன்றிகள்..

நன்றி சந்ரு

sakthi said...

நட்புடன் ஜமால் said...

நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்]]

ஓலமிட்ட அழத்தோன்றுகிறது ...

முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு]]

வார்த்தைகள் அருமை என்று இரசிக்க இயலவில்லை அதன் வலி கண்டு ...

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்

மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்//

படிக்கும்போழுது மனம் நடுங்குகின்றது...

/போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது//

உண்மைதான் சக்தி....

நன்றி சேகரன்

sakthi said...

லவ்லிகர்ல் said...

ரொம்ப கஷ்ட்டமா இருக்குங்க.

நன்றி லவ்லிகர்ல்

sakthi said...

அ.மு.செய்யது said...

அனைத்து கவிதைகளுமே உணர்ச்சி பெருக்காக அமைந்திருக்கிறது.

மீள்பதிவுக்கு நன்றி. நிறைய புதிய தமிழ் வார்த்தைகளை கற்று கொள்ள முடிந்தது.

நன்றி செய்ய்து

sakthi said...

தமிழரசி said...

வலிகளுக்கு மீண்டும் வாழ்க்கை...மறந்து விடாதீர்கள் இந்த மரணங்களின் அவலத்தை என நினைவூட்டுவதைப் போல இருக்கிறது..இது சரித்திரம் பேசும் ஆனால் மீட்காது இந்த வதைகளை

நன்றி தமிழரசியாரே

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

நெஞ்சு கனக்கும் வரிகள்
நன்றி வசந்த்

sakthi said...

gayathri said...

கஷ்ட்டமா இருக்கு.

நன்றி காயா

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

///முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு///

யுத்த பூமியின் கவி வரிகள் வித்தியாசமாய் இருந்தது.

வாழ்த்துக்கள்.....

நன்றி அபூ

sakthi said...

தேவன் மாயம் said...

தற்போதும் தினமும் தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவதாக இலங்கையிலிருந்து வந்த நண்பர் சொன்னார்...

நன்றி மருத்துவரே

sakthi said...

கலையரசன் said...

துயரத்தை மீண்டும் நினைவுபடுத்தும்... மீல்ஸ்!

நன்றி கலையரசன்

sakthi said...

பா.ராஜாராம் said...

பலகீன படுத்துகிறது வலியும்..இயலாமையும்

நன்றி ராஜாராம் தங்கள் முதல் வருகைக்கு

sakthi said...

[பி]-[த்]-[த]-[ன்] said...

-:(

நன்றி பித்தன்

sakthi said...

Suresh Kumar said...

ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவ‌து??? ///////////////

இத்தனை உயிர்கள் இழந்தும் நம் உரிமைகளை இழந்து விட்டோமே ( இழக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டோம் )

நன்றி சுரேஷ் குமார்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

//நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்

மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்//

வரிகள் ஒரு விதமான படபடப்பை உண்டு பண்ணுகிறது

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

மனவலியை உண்டாக்கிய வரிகள்

புரட்சி தெரிகிறது சக்தி

ஏன் அண்ணா இதை எல்லாம் புரட்சின்னு சொல்லி பாலா கிட்ட திட்டு வாங்கி வைக்கறீங்க

sakthi said...

இதயத்தின் ஓசைகள் said...

கேளுங்கள் தரப்படும் என்றான்
கேட்காமலே எடுக்கப்படுகின்றன
ஈழத் தமிழர் உயிர்கள்

வலி வலி வலி வலி
போர் நடக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மனிதாபிமான நிறுவன ஊழியன்
இலங்கையில் இருந்து யாதவன்

உள்ளிருப்பதை உருக உருக வாசித்து
உற்சாக கூத்தாடி உணர்ந்து அழவேண்டும்
சொந்தங்களை விட்டுவருகிறேன் என கூறக்கூட
சந்தர்ப்பமின்றி வந்துவிட்டேன்

நன்றி தங்கள் முதல் வருகைக்கு

sakthi said...

SUBBU said...

:(((((((((

நன்றி சுப்பு

sakthi said...

ஹேமா said...

//''ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்''//

வார்தையே ஆயுதமாய் தோழி நீ.
ஆவதற்கு ஒன்றுமில்லை இப்போது வந்த செய்தியைத் தொடர்ந்து!
அழுது புலம்புவதைத் தவிர.
எதிரி தன் வழியில் போய்க்கொண்டே இருக்கிறான்.

ஆம் அழுது புலம்ப மட்டுமே நம்மால் முடியும்

நன்றி ஹேமா

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

//பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்து
இறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு//

மிக ரசித்தேன். அனைத்து வரிகளிலும் அனல் தெரிகிறது.

நன்றி உழவரே