Tuesday, July 28, 2009

மனம் -- மணம்

சீயக்காய் தோய்த்த குழல்
செஞ்சாந்து திலகமிட்ட முகம்
நலங்கு மாவின் நறுமணமும்
சமையலறையின் கலவையான வாசத்துடன்

முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த
அன்னையின் மணம்......

பழுப்பேறிய வெண்மையிலான உடை
உழைப்பின் பரிசான வியர்வை வாசத்துடன்
வாரியணைத்தவரின் அணைப்பில்
நுரையீரலை நிறைத்த அப்பாவின் மணம்.....

மஞ்சள் சரட்டின் சுகந்தத்துடனும்
நெற்றி வகிட்டில் நிறைத்த குங்குமத்துடனும்
அவன் மார்பில் சாய்ந்திருக்கும் வேளையில்

என் சுவாசத்தில் சங்கமிக்கும்

அவனுக்கேயுரிய பிரத்யேகமான மணம்......

என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்...... .

73 comments:

Suresh Kumar said...

சொல்லி முடிக்க முன்னால இவ்வளவு ஒரு அருமையான கவிதியாயி போட்டுட்டீங்களே . கவிதை சூப்பர்

Suresh Kumar said...

என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்...... .//////////////////////////

பெண்ணுக்கு தாய்மை என்பது வாழ்வின் முக்கியமான கட்டம் , பெண்மைக்கே அழகு சேர்க்கும் கட்டம் .

Anbu said...

கலக்கல் அக்கா...கவிதை..

Anonymous said...

தாய்மைக்கு இணை இந்த உலகில் ஏதுமில்லை அந்த உணர்வு ஒரு சுகம்..அதை அப்படியே உணர்வுக்குள் செலுத்தியது உன் கவிதை சக்தி...
இதற்கு எல்லாம் சக்தி நிகர் சக்தி தான்,,,,,,,

ஈரோடு கதிர் said...

//தாய்மையின் மணமே தனி மணம்//

என்னவென்று சொல்லி பாராட்டுவது.. இந்த இதமான வரிகளை...

அழகு... அருமை.... சக்தி

S.A. நவாஸுதீன் said...

சீயக்காய் தோய்த்த குழல்
செஞ்சாந்து திலகமிட்ட முகம்
நலங்கு மாவின் நறுமணமும்
சமையலறையின் கலவையான வாசத்துடன்
முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த அன்னையின் மணம்......

அன்னையின் மண(ன)ம் அற்புதமான மண(ன)ம். அதனால்தான் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்கிறோம்

நேசமித்ரன் said...

இதை எழுத சக்தியால் மட்டும் முடியும் நேசமித்ரனால் முடியுமா?
அருமை..! நல்ல சொற் பிரயோகங்கள்

S.A. நவாஸுதீன் said...

என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்......

தாய்மையின் மணம் - பாராட்ட வார்த்தை கிடைக்கவில்லை சக்தி. ரொம்ப நல்லா இருக்கு.

அகநாழிகை said...

கவிதை நன்றாக இருக்கிறது.

//என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்//

இவ்வரிகளை மட்டும் வேறு வார்த்தைகளில் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

வழிப்போக்கன் said...

கடைசில டச் பண்ணீட்டீங்க...
:)))

vasu balaji said...
This comment has been removed by the author.
வெற்றி-[க்]-கதிரவன் said...

//வழிப்போக்கன் said...
கடைசில டச் பண்ணீட்டீங்க...
:)))
//

ரிப்பீட்டு

vasu balaji said...

தாய்மையின் இன்னொரு பரிமாணம். இதமாய். மணமாய். பாராட்டுகள் சக்தி.

*இயற்கை ராஜி* said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

கலையரசன் said...

நாங்கள் உணர்ந்திருக்கிறோம்...

நீங்கள் வடித்திருக்கிறீர்கள்...

அப்துல்மாலிக் said...

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு, பிரவசத்தின் போது மறுபிறவி எடுத்தல் என்பது நம்பத்தகுந்த உண்மை, சற்று நாட்களுக்குமுன் நேரில் அனுபவித்தேன்...

அந்த குழந்தையின் திருமுகத்தைப்பார்த்து அதன் மன(ண)த்தை நுகர்ந்தவுடன் பிரவசத்தின் வேதனை முற்றிலும் மறக்கடிக்கும், அருமையான கவிதையில் வடித்துள்ளீர் சக்தி...

வினோத் கெளதம் said...

தாய்மையை உணர்த்தும் வரிகள்..அழகு..

Admin said...

நல்ல கவிதை அத்தனை வரிகளும் மனதை தொட்டு விட்டன..... வாழ்த்துக்கள்.....

ப்ரியமுடன் வசந்த் said...

ஃபெண்டாஸ்டிக் சக்திக்கா

தாய்க்கும் மணம்
அவள் பெற்ற
சேய்க்கு அது குணம்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல மனங்களின் மணம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அ.மு.செய்யது said...

//சீயக்காய் தோய்த்த குழல்
செஞ்சாந்து திலகமிட்ட முகம்
நலங்கு மாவின் நறுமணமும்
சமையலறையின் கலவையான வாசத்துடன்
முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த அன்னையின் மணம்......//

மேனி பராம‌ரிப்புக்கு என்றென்றும் சிந்தால்...

அ.மு.செய்யது said...

//மஞ்சள் சரட்டின் சுகந்தத்துடனும்
நெற்றி வகிட்டில் நிறைத்த குங்குமத்துடனும்
அவன் மார்பில் சாய்ந்திருக்கும் வேளையில்
என் சுவாசத்தில் சங்கமிக்கும்
அவனுக்கேயுரிய பிரத்யேகமான மணம்......//

எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு....நல்லா எழுதியிருக்கீங்க..!

அ.மு.செய்யது said...

//என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்...... . //

அசத்திட்டீங்க சக்தியக்கா...

என்ன சொல்றதுன்னு தெரியல...ஆனா நல்லா இருக்கு...

sakthi said...

Suresh Kumar said...

சொல்லி முடிக்க முன்னால இவ்வளவு ஒரு அருமையான கவிதியாயி போட்டுட்டீங்களே . கவிதை சூப்பர்

நன்றி சுரேஷ் குமார்

sakthi said...

Suresh Kumar said...

என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்...... .//////////////////////////

பெண்ணுக்கு தாய்மை என்பது வாழ்வின் முக்கியமான கட்டம் , பெண்மைக்கே அழகு சேர்க்கும் கட்டம் .

ஆம் உண்மை தான்

sakthi said...

Anbu said...

கலக்கல் அக்கா...கவிதை.

நன்றி அன்பு

sakthi said...

தமிழரசி said...

தாய்மைக்கு இணை இந்த உலகில் ஏதுமில்லை அந்த உணர்வு ஒரு சுகம்..அதை அப்படியே உணர்வுக்குள் செலுத்தியது உன் கவிதை சக்தி...
இதற்கு எல்லாம் சக்தி நிகர் சக்தி தான்,,,,,,,

நன்றி தமிழரசியாரே

sakthi said...

கதிர், ஈரோடு said...

//தாய்மையின் மணமே தனி மணம்//

என்னவென்று சொல்லி பாராட்டுவது.. இந்த இதமான வரிகளை...

அழகு... அருமை.... சக்தி

நன்றி கதிர் சார்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

சீயக்காய் தோய்த்த குழல்
செஞ்சாந்து திலகமிட்ட முகம்
நலங்கு மாவின் நறுமணமும்
சமையலறையின் கலவையான வாசத்துடன்
முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த அன்னையின் மணம்......

அன்னையின் மண(ன)ம் அற்புதமான மண(ன)ம். அதனால்தான் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்கிறோம்

ஆம் அண்ணா

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

நேசமித்ரன் said...

இதை எழுத சக்தியால் மட்டும் முடியும் நேசமித்ரனால் முடியுமா?
அருமை..! நல்ல சொற் பிரயோகங்கள்

உங்கள் பாராடுகளுக்கு நன்றி நேசமித்ரரே ஆனாலும் உங்கள் கவிதை என்னை பொறுத்தவரை உயர்வு தான் சந்தேகமேயில்லை

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்......

தாய்மையின் மணம் - பாராட்ட வார்த்தை கிடைக்கவில்லை சக்தி. ரொம்ப நல்லா இருக்கு.

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

திகழ்மிளிர் said...

அருமை

நன்றி திகழ்மிளிராரே

sakthi said...

"அகநாழிகை" said...

கவிதை நன்றாக இருக்கிறது.

//என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்//

இவ்வரிகளை மட்டும் வேறு வார்த்தைகளில் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

தங்கள் கருத்துக்கு நன்றி வாசு சார்

அடுத்தமுறை முயற்சி செய்து பார்கிறேன்

sakthi said...

வழிப்போக்கன் said...

கடைசில டச் பண்ணீட்டீங்க...
:)))

நன்றி வழிபோக்கன்

sakthi said...

[பி]-[த்]-[த]-[ன்] said...

//வழிப்போக்கன் said...
கடைசில டச் பண்ணீட்டீங்க...
:)))
//

ரிப்பீட்டு

நன்றி பித்தன்

sakthi said...

பாலா... said...

தாய்மையின் இன்னொரு பரிமாணம். இதமாய். மணமாய். பாராட்டுகள் சக்தி

நன்றி பாலா

sakthi said...

இய‌ற்கை said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

தங்கள் விருதுக்கு நன்றி இயற்கை

sakthi said...

கலையரசன் said...

நாங்கள் உணர்ந்திருக்கிறோம்...

நீங்கள் வடித்திருக்கிறீர்கள்.

நன்றி கலையரசன்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு, பிரவசத்தின் போது மறுபிறவி எடுத்தல் என்பது நம்பத்தகுந்த உண்மை, சற்று நாட்களுக்குமுன் நேரில் அனுபவித்தேன்...

அந்த குழந்தையின் திருமுகத்தைப்பார்த்து அதன் மன(ண)த்தை நுகர்ந்தவுடன் பிரவசத்தின் வேதனை முற்றிலும் மறக்கடிக்கும், அருமையான கவிதையில் வடித்துள்ளீர் சக்தி...

நன்றி அபு அண்ணா

sakthi said...

வினோத்கெளதம் said...

தாய்மையை உணர்த்தும் வரிகள்..அழகு..

நன்றி வினு

sakthi said...

சந்ரு said...

நல்ல கவிதை அத்தனை வரிகளும் மனதை தொட்டு விட்டன..... வாழ்த்துக்கள்.....

நன்றி சந்ரு

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

ஃபெண்டாஸ்டிக் சக்திக்கா

தாய்க்கும் மணம்
அவள் பெற்ற
சேய்க்கு அது குணம்

நன்றி வசந்த்

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல மனங்களின் மணம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நன்றி சேகரன்

sakthi said...

அ.மு.செய்யது said...

//சீயக்காய் தோய்த்த குழல்
செஞ்சாந்து திலகமிட்ட முகம்
நலங்கு மாவின் நறுமணமும்
சமையலறையின் கலவையான வாசத்துடன்
முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த அன்னையின் மணம்......//

மேனி பராம‌ரிப்புக்கு என்றென்றும் சிந்தால்...

ஹே என்னை வைத்தி காமெடி கீமடி பண்ணலை தானே

sakthi said...

அ.மு.செய்யது said...

//மஞ்சள் சரட்டின் சுகந்தத்துடனும்
நெற்றி வகிட்டில் நிறைத்த குங்குமத்துடனும்
அவன் மார்பில் சாய்ந்திருக்கும் வேளையில்
என் சுவாசத்தில் சங்கமிக்கும்
அவனுக்கேயுரிய பிரத்யேகமான மணம்......//

எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு....நல்லா எழுதியிருக்கீங்க..!

நன்றி செய்ய்து

sakthi said...

அ.மு.செய்யது said...

//என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்...... . //

அசத்திட்டீங்க சக்தியக்கா...

என்ன சொல்றதுன்னு தெரியல...ஆனா நல்லா இருக்கு...

நிஜமா தான் சொல்றியளா

நன்றி பா

நட்புடன் ஜமால் said...

முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த அன்னையின் மணம்......]]

நுரையீரலை நிறைத்த அப்பாவின் மணம்.....]]

என் சுவாசத்தில் சங்கமிக்கும்
அவனுக்கேயுரிய பிரத்யேகமான மணம்......]]

உறவுகளை அழகாக வாக்கியமாக்கியிருக்கீங்க.

நட்புடன் ஜமால் said...

என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்]]

நினைவுக்குமிழ்களாய் - நல்ல சொல்லாடல்.

எத்தனையோ நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றது குமிழ்களாய்

நட்புடன் ஜமால் said...

பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்...... .]]

நெகிழ்ந்தேன் சகோதரி.

இந்த மணம் உணரவே இயலாத அறிந்து கொள்ளும் மணம்.

இந்த மணம் அறிந்து நெகிழுது
எம் மனம்
இக் கனம்.

பாலா said...

எனக்கு யாரும் காப்பி ரைட்டு கொடுக்காததால் வழக்கு தொடரும் எண்ணத்தில் இருக்கிறேன்
சகோதரி என்ன செய்வது என்று முடிவு செய்து கொள்ளவும்
கோர்ட்டில் சந்திப்பதா இல்லை காப்பி ரைட்டு கொடுத்து விடுவதா என்று

பாலா

தேவன் மாயம் said...

முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த அன்னையின் மணம்..///

அனுபவித்ததை அழகாகச்சொல்லி இருக்கீங்க!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சபாஸ் சக்தி,கவிதை கலக்குது. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
படம் நல்லா இருக்குது.

logu.. said...

hayyoooooooooo..

choooooo sweeeeeeeet.

rose said...

என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்......
\\
kalakkal sakthi

gayathri said...

hey eppadi da ippadi ellam super da

இளைய கவி said...

ரொம்ப அருமையா இருக்கு...

கார்த்திக் said...

நெஞ்சைத்தொடும் கவிதை... அருமை..

sakthi said...

நட்புடன் ஜமால் said...

முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த அன்னையின் மணம்......]]

நுரையீரலை நிறைத்த அப்பாவின் மணம்.....]]

என் சுவாசத்தில் சங்கமிக்கும்
அவனுக்கேயுரிய பிரத்யேகமான மணம்......]]

உறவுகளை அழகாக வாக்கியமாக்கியிருக்கீங்க.

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்...... .]]

நெகிழ்ந்தேன் சகோதரி.

இந்த மணம் உணரவே இயலாத அறிந்து கொள்ளும் மணம்.

இந்த மணம் அறிந்து நெகிழுது
எம் மனம்
இக் கனம்.

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

பாலா said...

எனக்கு யாரும் காப்பி ரைட்டு கொடுக்காததால் வழக்கு தொடரும் எண்ணத்தில் இருக்கிறேன்
சகோதரி என்ன செய்வது என்று முடிவு செய்து கொள்ளவும்
கோர்ட்டில் சந்திப்பதா இல்லை காப்பி ரைட்டு கொடுத்து விடுவதா என்று

பாலா

கண்டிப்பா நீ தான் இந்த கவிதைக்கு காப்பிரைட்டு பெற்றவ்ர் பாலா

sakthi said...

தேவன் மாயம் said...

முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த அன்னையின் மணம்..///

அனுபவித்ததை அழகாகச்சொல்லி இருக்கீங்க!!

ஆமாம் தேவன் சார்

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

ஜெஸ்வந்தி said...

சபாஸ் சக்தி,கவிதை கலக்குது. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
படம் நல்லா இருக்குது.

நன்றி ஜெஸ்வந்தி மா

sakthi said...

logu.. said...

hayyoooooooooo..

choooooo sweeeeeeeet.

நன்றி லோகு

sakthi said...

rose said...

என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்......
\\
kalakkal sakthi

நன்றி ரோஸ்

sakthi said...

gayathri said...

hey eppadi da ippadi ellam super da

நன்றி காயா

sakthi said...

இளைய கவி said...

ரொம்ப அருமையா இருக்கு...

நன்றி இளைய கவி

sakthi said...

கார்த்திக் said...

நெஞ்சைத்தொடும் கவிதை... அருமை..

நன்றி கார்த்திக்

"உழவன்" "Uzhavan" said...

//தாய்மையின் மணமே தனி மணம்...... . //

நல்லாருக்கு சக்தி மேடம் :-)

kanagu said...

அற்புதமான கவிதை அக்கா.. மிக சிறப்பா ஒவ்வோரு மணத்தை பற்றியும் சொல்லிட்டீங்க :)

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

//தாய்மையின் மணமே தனி மணம்...... . //

நல்லாருக்கு சக்தி மேடம் :-)

நன்றி உழவரே

sakthi said...

kanagu said...

அற்புதமான கவிதை அக்கா.. மிக சிறப்பா ஒவ்வோரு மணத்தை பற்றியும் சொல்லிட்டீங்க :)

நன்றி கனகு

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

காயத்ரி. உங்கள் பெயரை பார்த்தவுடன் நா.முத்துக்குமார் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. இன்னும் உங்களை முழுமையாக வாசிக்கவில்லை.. வீடு புறா அருமையாக இருந்தது. நேரம் கிடைக்கும் போது முழுமையாக வாசிக்க வேண்டும் என நினைக்கிறன். வாழ்த்துக்கள்