Tuesday, July 21, 2009

தொப்பூள் கொடி சொந்தங்களை நம்பாதீர்கள்....

ஆண்களின் ரத்தத்தால் இந்த கடல் சிவப்பாகட்டும்
பெண்களின் கற்பு எங்கள் வீரர்களுக்கு விருந்தாகட்டும்
என சிங்களவன் கொக்கரித்தபோது
கொப்பளித்த என் கோபத்தை
கொட்டிவைக்க இடமின்றி குமறித்தான் போனேன்....

அங்கே கொட்டியிருக்கும் ரத்தத்தை மண் உறியவே
இன்னும் எத்தனையோ நாட்களாகும் என கூறுகின்றனரே
அந்த மண்ணின் ரத்தவெறி தீர்ந்ததா????
இல்லை இன்னும் முகாம்களில் வெறிபிடித்த மிருகங்களால்
வதைக்கப்பட்டு சிதைக்கப்படுவோரின் ரத்தமும் வேண்டுமா???

அவர்களின் கொடூர செய்கைகளை கண்டு
வேதனையில் வெம்பியபடி
எங்கள் நாட்டில் உங்கள் நிலையை
சற்றே யோசித்துபார்க்கிறேன்...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....

ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அங்கு நடக்கும் கொடுமைகளை கண்டு
கவிதை வடிப்போம், கதை எழுதுவோம்
கட்டுரைகளில் கிழி கிழியென கிழிப்போம் ....

அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூள் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....

94 comments:

ஆ.ஞானசேகரன் said...

///அங்கே கொட்டியிருக்கும் ரத்தத்தை மண் உறியவே
இன்னும் எத்தனையோ நாட்களாகும் என கூறுகின்றனரே
அந்த மண்ணின் ரத்தவெறி தீர்ந்ததா????//

ம்ம்ம்ம்ம்???????

ஆ.ஞானசேகரன் said...
This comment has been removed by the author.

//ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

எப்படி உண்மையை ஒத்துக்கொள்ள முடிந்தது

ஆ.ஞானசேகரன் said...

//தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....//

அதுதான் தமிழனுக்கு தலையெழுத்து என்று நினைக்கின்றேன்...

நட்புடன் ஜமால் said...

தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்...]]

வேதனையளிக்கும் உண்மை.

நட்புடன் ஜமால் said...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....]]

நிதர்சணம்

நட்புடன் ஜமால் said...

வாய் சொல்லில் வீரர்களடா ...

Admin said...

//ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

அத்தனை வரிகளுக்கு மனதை நெகிழ வைத்தன..... வாழ்த்துக்கள் தொடருங்கள்...

வினோத் கெளதம் said...

என்ன சக்தி பண்ணுவது எல்லாம் நம் நேரம்..

gayathri said...

தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....//

sariya sonna da

Anonymous said...

முதலில் வீட்டுக்குள் உறவுகள் விளங்கட்டும்.....

//அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்

பட்டவர்தனமான உண்மை....இன்னும் நமக்கே அகதிகள் நிலை விடவில்லை....

அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் அன்பையும் ஆதரவையும் எதிர் நோக்கும் அப்பாவித்தனம் நன்கே இங்கு பேசப்பட்டுள்ளது...

பாலா said...

மு.................தனமான கோபம் (மன்னிக்க )
இதுவும் இறக்கி வைத்தவுடன் வடிந்துவிடும்

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

கோவமும் தாக்குதல்களும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.....

கபிலன் said...

"அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்.... "

மிகவும் உண்மை!

அனைவர் மனதில் இருக்கும் கோபத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

Suresh Kumar said...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்..... /////////////////////////

உணர்வற்று ஜடமாகி போனோமே

Suresh Kumar said...

உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....//////////////////////////////////

நாளை தமிழ் நாட்டு தமிழர்களுக்கும் ( நமக்கும் ) இந்த நிலை வரலாம்

SUFFIX said...

//அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....//

மறுக்க முடியாத உண்மை, நாம் பேசுவதில் தான் கில்லாடிகள், செயளில்? ஆனால் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் இயன்றதை செய்ய முன் வரவேண்டும்.

SUBBU said...

ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல :((((((((((((((

சப்ராஸ் அபூ பக்கர் said...

///ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அங்கு நடக்கும் கொடுமைகளை கண்டு
கவிதை வடிப்போம், கதை எழுதுவோம்
கட்டுரைகளில் கிழி கிழியென கிழிப்போம் ....////

இனி நடக்கப் போவதெல்லாம் இது தான்.....

அ.மு.செய்யது said...

//உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..//

அதுவும் திறந்த வெளிச் சிறையில் அடைத்து கொடுமை படுத்துவோம்.

நிதர்சன வரிகள்.

அ.மு.செய்யது said...

////ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

உண்மை தான்.அதுவும் தமிழ்நாட்டில் மட்டுந்தான்.

ஆனால் 20 20 உலக கோப்பையில் இலங்கை விளையாடிய அனைத்து மைதானங்களின்
வெளிப்புறமும் தமிழர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள்.

அ.மு.செய்யது said...

தொப்புள் கொடி என்று தான் வர வேண்டும்.மாற்றி விடுங்கள்.

மற்றபடி, கவிதை நெருடல் கலந்த அதிரடி.

ஆதவா said...
This comment has been removed by the author.
ஆதவா said...

உங்கள் உணர்வுகளுக்கு வந்தனங்கள்.

போரோடு முடிந்துவிடாமல், போருக்குப் பிந்தைய அமைதி வாழ்வுக்கு தக்க ஏற்பாடுகளைச் செய்ய இனி அரசு முயலவேண்டும்!!

சட்டெனப் பொட்டில் அறைந்தமாதிரி இருக்கிறது. கிரிக்கெட் குறித்த உங்களது வரிகள்

அன்புடன்
ஆதவா

ஈரோடு கதிர் said...

//உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..//

வலிக்கிறது சக்தி

Admin said...

உங்கள் உணர்வு பூர்வமான வரிகள் அத்தனையும் எல்லா தமிழர்களுக்கும் இந்த சிந்தனை வர வேண்டும். வந்திருந்தாள் நம் தமிழினம் இப்படி இருந்திருக்கவேண்டியதில்லை உங்களை மீண்டும் மீண்டும் பாராட்டுகிறேன் உங்கள் தமிழ் பற்றுக்காக...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நிதர்சனமான கவிதை. யாராலும் இதை மறுக்க முடியாது. சபாஸ் சக்தி.

அஹோரி said...

//ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

உண்மையான வரிகள் அல்ல ...

இதோ அந்த இடத்திற்கான வரிகள் ,

"கேட்ட பதவிகளை டெல்லி கொடுக்கவில்லையே
என சற்று அதீதமாய் அழுதோம்"

கலையரசன் said...

:-(

போர் அடிக்குதுங்க சக்தி..
எத்தனை நாள்தான் நல்லாயிருக்குன்னு
சொல்றது?
எதாவது சண்டை போட்டுகுற மாதிரி மேட்டர் போடுங்க :-)

குடந்தை அன்புமணி said...

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இன்னமும் நான் நம்பவில்லை தோழி...

உண்மைகள் இங்கு உறங்கிக் கொண்டிருக்கின்றன...

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

எதையும் காலப்போக்கில் நாம் மறந்துவிடுவோமே..?

logu.. said...

\\அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..\\

Manasu valikkirathu.

S.A. நவாஸுதீன் said...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....

நிதர்சனம். வேறு வழியில்லை ஒத்துக்கொள்வதைத் தவிர

S.A. நவாஸுதீன் said...

ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அங்கு நடக்கும் கொடுமைகளை கண்டு
கவிதை வடிப்போம், கதை எழுதுவோம்
கட்டுரைகளில் கிழி கிழியென கிழிப்போம் ....

அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....

ரொம்ப வேதனையான விஷயம்.

Admin said...

குடந்தை அன்புமணி said...
போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இன்னமும் நான் நம்பவில்லை தோழி...

உண்மைகள் இங்கு உறங்கிக் கொண்டிருக்கின்றன...

ம்ம்ம்ம்ம்ம்

Anbu said...

Super

rose said...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்
\\
சக்தியோட கவிதைனாலே எப்போதுமே ஒரு புரட்சி இருக்கும்

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

///அங்கே கொட்டியிருக்கும் ரத்தத்தை மண் உறியவே
இன்னும் எத்தனையோ நாட்களாகும் என கூறுகின்றனரே
அந்த மண்ணின் ரத்தவெறி தீர்ந்ததா????//

ம்ம்ம்ம்ம்???????

நன்றி சேகரன்

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

எப்படி உண்மையை ஒத்துக்கொள்ள முடிந்தது

உண்மையை ஒத்துக்கொள்ளதானே வேண்டும்

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....//

அதுதான் தமிழனுக்கு தலையெழுத்து என்று நினைக்கின்றேன்...

நினைக்க வேண்டாம் அது தான் நம் நிலை

sakthi said...

நட்புடன் ஜமால் said...

கவிதை வடிப்போம், கதை எழுதுவோம்
கட்டுரைகளில் கிழி கிழியென கிழிப்போம் ....

அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்...]]

வேதனையளிக்கும் உண்மை.

நன்றி அண்ணா

அப்துல்மாலிக் said...

இதுவும் காலப்போக்கில் மறந்துபோகும் சக்தி

அதை மக்களிடம் ஞாபகப்படுத்த அவ்வப்போது உங்களை மாதிரி யாராவது இது மாதிரி எடுத்துச்சொன்னால் கொஞ்சமாவது அந்த ஞாபகம் இருக்கும்.. இதை தான் நான் என் பதிவில் "தமிழர்களின் நிலை" என்று எழுதிருப்பேன்.

மீண்டும் இந்த ஆயுதத்தை கையிலெடுத்து முள்ளால் குத்திக்காட்டியது நன்று...

டிஸ்கி: இப்போதெல்லாம் ஈழச்செய்தி 10 பக்க பத்திரிக்கையில் ஒரு சிறு மூலையில்கூட வருவது இல்லை?????

सुREஷ் कुMAர் said...

//
ஆண்களின் ரத்தத்தால் இந்த கடல் சிவப்பாகட்டும்
பெண்களின் கற்பு எங்கள் வீரர்களுக்கு விருந்தாகட்டும்
//
முதல் இரண்டு வரிகளை கண்டதும் அதிர்ந்துவிட்டேன்..
ஏதோ வில்லங்கமா இருக்கேன்னு..

அடுத்த மூன்று வரிகளை படித்தபின்புதான் தெளிவானேன்..

सुREஷ் कुMAர் said...

//ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அங்கு நடக்கும் கொடுமைகளை கண்டு
கவிதை வடிப்போம், கதை எழுதுவோம்
கட்டுரைகளில் கிழி கிழியென கிழிப்போம் ....

அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்...
//
ஸ்ஸ்ஸ்ஸ்.. சைலன்ஸ்..
உண்மைய எல்லாம் இப்டி பிராங்கா சொல்லப்பிடாது..

இங்க இருக்கறவங்களபத்தி எல்லாருக்கும் தெரிஞ்சுடுமோல்லியோ..

vasu balaji said...

/அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..../

ஊமைக்காயமாய் நிரந்தரமாய் வலிக்கும் உண்மை.

Mouthayen Mathivoli said...

(வெட்கங்கெட்ட) தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு! அது மாறாது!
"முத்தையன் மதிவொளி, சிங்கப்பூர்"

ஹேமா said...

சக்தி,மனசின் வேதனையைக் கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள்.முடிந்தது இவ்வளவும்தான் சக்தி.

தாரணி பிரியா said...

:(

நேசமித்ரன் said...

சக்தி

பிசாசின் சூதாட்டம் இது
யார் பகடைக்காய் யார் சோழி உருட்டியது என்பதெல்லாம் காலம் சொல்லும் நல்ல உணர்ச்சி வெளிப்பாடு வாழ்த்துக்கள்

அகரம் அமுதா said...

////அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூள் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..../////

சிங்களவர் செய்யும் திருவில் செயலதனால்
எங்களவர் சிந்துகிறார் செங்குருதி! -இங்குள்ள
எந்தமிழ்த் நாடே! எழுச்சியுறா தின்னுமேன்
இந்தியத்தை நம்புகிறார் இங்கு?

"உழவன்" "Uzhavan" said...

என்னைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டேன் இதுவரை என்ன செய்தாய் என்று :-(
அருமை!

கார்த்திக் said...

நம் போராட்டங்கள் தொடரும்..

sakthi said...

சந்ரு said...

//ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

அத்தனை வரிகளுக்கு மனதை நெகிழ வைத்தன..... வாழ்த்துக்கள் தொடருங்கள்...

நன்றி சந்ரு

sakthi said...

வினோத்கெளதம் said...

என்ன சக்தி பண்ணுவது எல்லாம் நம் நேரம்..

கெட்ட நேரம்னு சொல்லுங்க

நன்றி வினு

sakthi said...

gayathri said...

தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....//

sariya sonna da

நன்றி காயா

sakthi said...

தமிழரசி said...

முதலில் வீட்டுக்குள் உறவுகள் விளங்கட்டும்.....

//அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....//

பட்டவர்தனமான உண்மை....இன்னும் நமக்கே அகதிகள் நிலை விடவில்லை....

அரசியல் ஆதாயம் தேடுவோரிடம் அன்பையும் ஆதரவையும் எதிர் நோக்கும் அப்பாவித்தனம் நன்கே இங்கு பேசப்பட்டுள்ளது...

நன்றி கவியரசியாரே

sakthi said...

பாலா said...

மு.................தனமான கோபம் (மன்னிக்க )
இதுவும் இறக்கி வைத்தவுடன் வடிந்துவிடும்

நீங்க சொன்னால் சரி ஆசிரியரே

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

//ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

கோவமும் தாக்குதல்களும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.....

நன்றி வசந்த்

sakthi said...

கபிலன் said...

"அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்.... "

மிகவும் உண்மை!

அனைவர் மனதில் இருக்கும் கோபத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி கபிலன்

Anonymous said...

ரொம்ப வேதனையான விஷயம்.

kanagu said...

/*அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூள் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்...*/

உண்மை உண்மை.. :(

அப்படியே சரியா சொல்லி இருக்கீங்க அக்கா

sakthi said...

Suresh Kumar said...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்..... /////////////////////////

உணர்வற்று ஜடமாகி போனோமே

நன்றி சுரேஷ்

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

//அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....//

மறுக்க முடியாத உண்மை, நாம் பேசுவதில் தான் கில்லாடிகள், செயளில்? ஆனால் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் இயன்றதை செய்ய முன் வரவேண்டும்.

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

sakthi said...

SUBBU said...

ம்ம்ம்ம்ம் என்னத்த சொல்ல :((((((((((((((

நன்று சுப்பு

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

///ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அங்கு நடக்கும் கொடுமைகளை கண்டு
கவிதை வடிப்போம், கதை எழுதுவோம்
கட்டுரைகளில் கிழி கிழியென கிழிப்போம் ....////

இனி நடக்கப் போவதெல்லாம் இது தான்.....

நன்றி சப்ராஸ் அபூ பக்கர்

sakthi said...

அ.மு.செய்யது said...

//உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..//

அதுவும் திறந்த வெளிச் சிறையில் அடைத்து கொடுமை படுத்துவோம்.

நிதர்சன வரிகள்.

நன்றி செய்யது

sakthi said...

ஆதவா said...

உங்கள் உணர்வுகளுக்கு வந்தனங்கள்.

போரோடு முடிந்துவிடாமல், போருக்குப் பிந்தைய அமைதி வாழ்வுக்கு தக்க ஏற்பாடுகளைச் செய்ய இனி அரசு முயலவேண்டும்!!

சட்டெனப் பொட்டில் அறைந்தமாதிரி இருக்கிறது. கிரிக்கெட் குறித்த உங்களது வரிகள்

அன்புடன்
ஆதவா

வருகைக்கு நன்றி ஆதவா

sakthi said...

கதிர் said...

//உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..//

வலிக்கிறது சக்தி

நன்றி கதிர்

sakthi said...

சந்ரு said...

உங்கள் உணர்வு பூர்வமான வரிகள் அத்தனையும் எல்லா தமிழர்களுக்கும் இந்த சிந்தனை வர வேண்டும். வந்திருந்தாள் நம் தமிழினம் இப்படி இருந்திருக்கவேண்டியதில்லை உங்களை மீண்டும் மீண்டும் பாராட்டுகிறேன் உங்கள் தமிழ் பற்றுக்காக...

நன்றி சந்ரு

sakthi said...

ஜெஸ்வந்தி said...

நிதர்சனமான கவிதை. யாராலும் இதை மறுக்க முடியாது. சபாஸ் சக்தி.

நன்றி ஜெஸ்வந்தி

sakthi said...

அஹோரி said...

//ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....//

உண்மையான வரிகள் அல்ல ...

இதோ அந்த இடத்திற்கான வரிகள் ,

"கேட்ட பதவிகளை டெல்லி கொடுக்கவில்லையே
என சற்று அதீதமாய் அழுதோம்"

ஆமாம் அதுவும் நிஜம் தான்

நன்றி அஹோரி

sakthi said...

கலையரசன் said...

:-(

போர் அடிக்குதுங்க சக்தி..
எத்தனை நாள்தான் நல்லாயிருக்குன்னு
சொல்றது?
எதாவது சண்டை போட்டுகுற மாதிரி மேட்டர் போடுங்க :-)

சீக்கிரமே போடறேன்

sakthi said...

குடந்தை அன்புமணி said...

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இன்னமும் நான் நம்பவில்லை தோழி...

உண்மைகள் இங்கு உறங்கிக் கொண்டிருக்கின்றன...

சீக்கிரம் உறக்கம் தெளிய வேண்டும்

sakthi said...

தமிழ் வெங்கட் said...

எதையும் காலப்போக்கில் நாம் மறந்துவிடுவோமே..

அது நம் தலையெழுத்து போலும்

நன்றி தமிழ் வெங்கட்

sakthi said...

logu.. said...

\\அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..\\

Manasu valikkirathu.

நன்றி லோகு

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....

நிதர்சனம். வேறு வழியில்லை ஒத்துக்கொள்வதைத் தவிர

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

Anbu said...

Super

நன்றி அன்பு

sakthi said...

rose said...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்
\\
சக்தியோட கவிதைனாலே எப்போதுமே ஒரு புரட்சி இருக்கும்

நன்றி ரோஸ்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

இதுவும் காலப்போக்கில் மறந்துபோகும் சக்தி

அதை மக்களிடம் ஞாபகப்படுத்த அவ்வப்போது உங்களை மாதிரி யாராவது இது மாதிரி எடுத்துச்சொன்னால் கொஞ்சமாவது அந்த ஞாபகம் இருக்கும்.. இதை தான் நான் என் பதிவில் "தமிழர்களின் நிலை" என்று எழுதிருப்பேன்.

மீண்டும் இந்த ஆயுதத்தை கையிலெடுத்து முள்ளால் குத்திக்காட்டியது நன்று...

டிஸ்கி: இப்போதெல்லாம் ஈழச்செய்தி 10 பக்க பத்திரிக்கையில் ஒரு சிறு மூலையில்கூட வருவது இல்லை?????

நன்றி அபு அண்ணா

sakthi said...

सुREஷ் कुMAர் said...

//
ஆண்களின் ரத்தத்தால் இந்த கடல் சிவப்பாகட்டும்
பெண்களின் கற்பு எங்கள் வீரர்களுக்கு விருந்தாகட்டும்
//
முதல் இரண்டு வரிகளை கண்டதும் அதிர்ந்துவிட்டேன்..
ஏதோ வில்லங்கமா இருக்கேன்னு..

அடுத்த மூன்று வரிகளை படித்தபின்புதான் தெளிவானேன்..

நீங்க அதிர்ந்து போயிட்டிங்கன்னு சொன்னா நம்பிட்டேன் சுரேஷ்

sakthi said...

सुREஷ் कुMAர் said...

//ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அங்கு நடக்கும் கொடுமைகளை கண்டு
கவிதை வடிப்போம், கதை எழுதுவோம்
கட்டுரைகளில் கிழி கிழியென கிழிப்போம் ....

அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்...
//
ஸ்ஸ்ஸ்ஸ்.. சைலன்ஸ்..
உண்மைய எல்லாம் இப்டி பிராங்கா சொல்லப்பிடாது..

இங்க இருக்கறவங்களபத்தி எல்லாருக்கும் தெரிஞ்சுடுமோல்லியோ..

சரி சரி சொல்லலை

நன்றி சுரேஷ்

sakthi said...

பாலா... said...

/அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூழ் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..../

ஊமைக்காயமாய் நிரந்தரமாய் வலிக்கும் உண்மை.

நன்றி பாலா

sakthi said...

Mouthayen said...

(வெட்கங்கெட்ட) தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு! அது மாறாது!
"முத்தையன் மதிவொளி, சிங்கப்பூர்"

நன்றி முத்தையன்

sakthi said...

ஹேமா said...

சக்தி,மனசின் வேதனையைக் கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள்.முடிந்தது இவ்வளவும்தான் சக்தி.

நன்றி ஹேமா

sakthi said...

தாரணி பிரியா said...

:(
நன்றி பிரியா

sakthi said...

நேசமித்ரன் said...

சக்தி

பிசாசின் சூதாட்டம் இது
யார் பகடைக்காய் யார் சோழி உருட்டியது என்பதெல்லாம் காலம் சொல்லும் நல்ல உணர்ச்சி வெளிப்பாடு வாழ்த்துக்கள்

நன்றி நேசமித்ரரே

sakthi said...

அகரம்.அமுதா said...

////அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூள் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்..../////

சிங்களவர் செய்யும் திருவில் செயலதனால்
எங்களவர் சிந்துகிறார் செங்குருதி! -இங்குள்ள
எந்தமிழ்த் நாடே! எழுச்சியுறா தின்னுமேன்
இந்தியத்தை நம்புகிறார் இங்கு?

நன்றி அகரம் அமுதா அவர்களே

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

என்னைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டேன் இதுவரை என்ன செய்தாய் என்று :-(
அருமை!

நன்றி உழவரே

sakthi said...

கார்த்திக் said...

நம் போராட்டங்கள் தொடரும்..

நன்றி கார்த்திக்

sakthi said...

கடையம் ஆனந்த் said...

ரொம்ப வேதனையான விஷயம்.

நன்றி கடையம் ஆனந்த்

sakthi said...

kanagu said...

/*அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூள் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்...*/

உண்மை உண்மை.. :(

அப்படியே சரியா சொல்லி இருக்கீங்க அக்கா

நன்றி கனகு

நாணல் said...

:(