Friday, July 1, 2011

காலாதி காலங்களாய்....




பிரக்ஞையற்று திரிந்தலைந்த
கிரெளஞ்சப் பட்சியொன்று
மனவெளியில் தரையிறங்கியது
மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு
தீரா வேட்கையுடன் உயிர்த்தலின்
ஆதாரத்தை அலைகிழிக்கின்றது
கூர்ந்த நகங்களால்....

காலாதி காலங்களாய்
தொடர்ந்த மெளனம்
களைந்தெறிந்து
ஊழியின் உருவமாய்
மெய் சிவந்து நின்றேன்
எதிர்கொள்ளவியலாது
சிறகின் தூவிகள் பொசுங்க
ரத்தமும் மாம்சமும் கருக
வெந்தொழிந்தது.....

நன்றி : திண்ணை

14 comments:

சத்ரியன் said...

//தீரா வேட்கையுடன் உயிர்த்தலின்
ஆதாரத்தை அலைகிழிக்கின்றது
கூர்ந்த நகங்களால்....//

சக்தி,

நாம் தளர்வுற்றிருந்தால்.... கண்டதுகளும் இப்படித்தான்.

சத்ரியன் said...

//ஊழியின் உருவமாய்
மெய் சிவந்து நின்றேன்
எதிர்கொள்ளவியலாது
...............
வெந்தொழிந்தது.....//

இடுக்கண் இடும்பை தந்துவிட்டது போல!

சத்ரியன் said...

சக்திங்க ஒரு சந்தேகமுங்க. அதென்ன அந்த கூண்டுக்குள்ள இருக்கிற கிளி, வெளிய பறந்து போற குருவிகளை ஒரு ஏக்கத்தோட பாத்துக்கிட்டிருக்கு?!

வினோ said...

செல்வி,

கவிதையை ரெண்டு தடவை படிக்க வேண்டியதாயிற்று... வர வர புரிய கஷ்டப்படனும் போல...

கவி அழகன் said...

கன காலத்துக்கு பிறகு புறா முற்றத்தில்
ஆடும் வரிகளுடன் கவி
வாசிக்க வாசிக்க புரிகிறது

நட்புடன் ஜமால் said...

கிரெளஞ்சப் - நெம்ப நாளாச்சு இப்படியெல்லாம் படிச்சி

புரியும் நிலை மாறிவிட்டது

இப்பல்லாம் புரிய மாட்டேங்குது

ஹேமா said...

சக்தி...கிரெளஞ்சப் பறவையின் இயலாமை சொல்லும் வார்த்தைகளின் வெறுமையில் நிரம்பிக்கிடக்கிறது !

Yaathoramani.blogspot.com said...

கருத்தூன்றிப் படிக்கையில் வார்த்தைகள்
அர்த்தமற்றுப்போய் விடுகின்றன
கவியின் உணர்வு உள்ளமெங்கும் பரவி
என்னென்னவோ செய்கிறது
அருமையான் பதிவு
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி said...

ஓடும்வரைதான் துரத்தல்களுக்கு வாய்ப்பு. எதிர்த்து நின்றால் துரத்தும் வாய்ப்பேது? என்றோ கலைத்திருக்கவேண்டிய மெளனம் அது! இன்றேனும் கலைந்ததே... மனம் கொத்திய பறவையழித்ததே... கவிதை மிக நன்று, ஷக்தி.

Anonymous said...

இதுபோல கவிதைகளை புரிந்துகொள்ள முயற்சிப்பதில் எப்போதும் எனக்கு தோல்வியே கிட்டுகிறது..

கவிதையின் வார்த்தைகளில் சில மிக பிரமிக்க வைத்தன

(கிரெளஞ்சப் பட்சியொன்று)
(காலாதி காலங்களாய்)
(சிறகின் தூவிகள் பொசுங்கரத்தமும்)

வாழ்த்துக்கள்!

rajamelaiyur said...

அருமையான kavithai

அன்புடன் நான் said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

ஏன் இப்போது எழுதவில்லை?

வாருங்கள் எழுத்துலகிற்கு!

Unknown said...

அருமையான கவிதை....