Wednesday, March 9, 2011

நீளும் இகற்போர்...


.

சிநேகத்தின் வேர்கள்
கருகுவதை கண்டு
உயிர்ப்பின் தாளலயம்
ஸ்வரம் தப்பிடும்...

நிகழ்கால நிஜத்திற்கும்
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம்
வெகுவாய் அலைப்புறும்....

பொய் என தெரிந்தும்
மெய் அன்பின் வாசனையை
விரும்பும்....

இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழைநெய்யப்படுவதும்
நெய்யப்பட்டஅம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்...

25 comments:

தமிழ் அமுதன் said...

அருமை ..!

எல் கே said...

இதில் குறியீடுகள் எதை குறிக்கின்றன சக்தி .. வர வர உங்க கவிதைகள் புரிவதில்லை.

வசந்தா நடேசன் said...

//இகற்போர்// நான் தமிழ்ல வீக்கு, நட்புக்குள் இகற்போர்?? நட்பின் முரண்கள்??

Chitra said...

நிகழ்கால நிஜத்திற்கும்
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம்
வெகுவாய் அலைப்புறும்....


....அருமையாக சொல்லி இருக்கீங்க.

சீமான்கனி said...

//பொய் என தெரிந்தும்
மெய் அன்பின் வாசனையை
விரும்பும்....//

பொய்யால் மெய் சாற்றும் வாசனை அழகு சக்திக்கா...

எல் கே said...

puraanu pera vechitu headerla kili photo irukku ?>>

Suresh Kumar said...

Nice

sakthi said...

நன்றி தமிழ் அமுதன்

sakthi said...

எல் கே இந்த கவிதையில் குறியீடுகள் எதுவும் இல்லை கொஞ்சம் வார்த்தைகளை கடினப்படுத்தி உள்ளேன் அவ்வளவு தான் நன்றி உங்கள் வருகைக்கு

sakthi said...

வசந்தா நடேசன் நட்பிலும் சண்டைகளும் சச்சரவுகளும் சகஜம் தானே இதில் முரண் எதுவும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை ::))
நன்றி தங்கள் கருத்திற்கு

sakthi said...

நன்றி சித்ரா

sakthi said...

சீமான் கனி நன்றி மக்கா கருத்திற்கு

sakthi said...

நன்றி சுரேஷ் குமார்

குமரை நிலாவன் said...

அருமை

கீறிப்புள்ள!! said...

யாரோ உங்கள ரொம்ப அப்செட் ஆக்கிருகாங்கன்னு மட்டும் நல்லா புரியுது..
\உணர்விழை\\ அப்டின்னா?? முதல் முறையாக படிக்கிறேன்..

வால்பையன் said...

இலக்கியரசம் வழியும் கவிதை

எங்க ஹோட்டலுக்கு கொஞ்சம் சப்ளை பண்ண முடியுங்களா!?

R. Gopi said...

\\நிகழ்கால நிஜத்திற்கும்இறந்தகால நிழலிற்கும் நடுவே மனம் வெகுவாய் அலைப்புறும்....\\

இனி எதிர்காலம் (நாளைய நிகழ்காலம்) சிறப்பாக அமையும் என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்

நட்புடன் ஜமால் said...

பொய் என தெரிந்தும்
மெய் அன்பின் வாசனையை
விரும்பும்....

fact ...

Ashwin-WIN said...

//பொய் என தெரிந்தும்
மெய் அன்பின் வாசனையை
விரும்பும்.//
திடகாத்திரம்..
:அஷ்வின் அரங்கம்:
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.

logu.. said...

\\நிகழ்கால நிஜத்திற்கும்
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம்
வெகுவாய் அலைப்புறும்...\\

ம்ம்ம்...

ஹேமா said...

அன்புக்காக ஏங்கும் மனம் மாய அன்புக்குள் அகப்பட்டுவிடும்.
நிதானிப்பது கஸ்டம் சக்தி !

சுந்தரா said...

//இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழைநெய்யப்படுவதும்
நெய்யப்பட்டஅம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்...//

நட்பின் வலியை வெளிப்படுத்தியிருக்கும்விதம் மிக அருமை!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...:)))

TamilRockzs said...

தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

www.tamilrockzs.com

www.tamilrockzs.blogspot.com

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

உங்கள் கவிதைகள் மிகவும் நன்று வாழ்க வளமுடன் மென் மேலும் உயர்ந்த கவித்தூவம் பெற்றுதிகள வாழ்த்துக்கள்
subburajpiramu