Sunday, August 1, 2010

யாருமற்ற வான் பொய்கையில் வெறுமையுற்ற நிலா !!!


அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த
வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!!

அக்கினிப்பூவாய் தகிக்கும் மஞ்சத்தில்
தோகையெனத் துவள்கிறாள்
அமைதியின் கரிய காலடியில்
மனுஷர்களின் பேராசையினால்
காயப்பட்ட பூஞ்சிறகாய் அவள் மனம்!!!!

இதுவரை அழுந்தித் துயர் தரும்
வலிகளை பிடுங்கியெறிய
அவள் ஓடிக்கொண்டிருக்கிறாள்
பாத மணற்கற்றைகள் எரிய!!!!

கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்....

யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!

45 comments:

சௌந்தர் said...

அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!!///

அருமையான வரிகள்....

நேசமித்ரன். said...

//அதென்னவோ தெரியலை வர வர பின்னூட்ங்கள் ரொம்ப நல்லா போட பழகிட்டாங்க எல்லோரும் தகுதிக்கு மீறி புகழ்வது எனக்கு என்னவோ தவறாகபடுகின்றது இதனால் கண்டிப்பாக தலைகனம் கொள்ளக்கூடும் அது நானாக இருந்தாலும்//

அதனால நோ கமெண்ட்ஸ்

(கருத்து சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கனும் தங்கச்சி )

:)))))

பத்மா said...

ஷக்தி ,தழைக்கட்டும் அன்பின் கிளைகள் ...
தழைத்து தரட்டும் அன்பின் அக்ஷயம் ..
களவாடினாலும் தீராது ..கண்ணீரும் வராது ..

அருமை யான கவிதைங்க

Sivatharisan said...

மிகவும. அருமையாக உள்ளது ( வரிகள், கவிதை) வாழ்த்துக்கள்

பாலா said...

இக்கவிதையின் பாடு பொருளாய் யான மென்னிதயத்தின் வெந்நீரூற்றில் வாழ் சூழ்நிலைக்கென்றே சிரபுஞ்சிகளாய்
இனிவரும் காலங்கள் நிறையட்டும் .
கவிதைக்கும் சேர்த்துமான வாழ்த்துகள் , கவிதை நல்கிய இதயத்திற்கும்
--

shakthikumar said...

romba nallaa irukku sakthi akkaa

shakthikumar said...

கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்....


யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!
super lines romba pidichiru

நேசமித்ரன். said...

பெய்யா முகிலென்று பெருவிசும்பி லேதுமில்லை
செய்தவம் உய்த்துவக்கும் தாரகைகள் தூரமில்லை
தன்னையறிந்து தாயொப்ப பிலிற்றும் பேரன்பில் நெகிழும் உலகு
இன்னலறுத்து இன்மை ததும்பிப் பெருகப் பெறுக

*******************

ஓர் உளம் சுட்டிச் செய்த கவியா
வேறு கனாத் தொட் டெழுதிய மொழியா
எட்டாதிருப்பினும் சொன்னவரை
தூய சுருதி


தங்காய் நீ
தொடர்க முனைப்பை
துயரல்ல நலமே ஆகட்டும்
கவிதையின் கருப்பை

சீமான்கனி said...

//அக்கினிப்பூவாய் தகிக்கும் மஞ்சத்தில்
தோகையெனத் துவள்கிறாள்
அமைதியின் கரிய காலடியில்
மனுஷர்களின் பேராசையினால்
காயப்பட்ட பூஞ்சிறகாய் அவள் மனம்!!!!//


நஞ்சு உண்ட பிஞ்சு மனத்தின் வலியாய்... வரிகள் வாழ்த்துகள் சக்திக்கா

தாரணி பிரியா said...

அந்த பொண்ணுக்கிட்ட கேட்டேன் செல்வி அந்த பொண்ணு சந்தோஷமாதான் இருந்ததாம். ஆனா இப்ப கவிதை படிச்சவுடனே ஒரே சோகம் ஆகி போச்சாம் போங்க‌

தாரணி பிரியா said...

மிரட்டி கமெண்ட் போட சொன்னா ஒண்ணுமே எழுத வரலை செல்வி :(

தாரணி பிரியா said...

//யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்//

யாருமற்ற வலைப்பதிவில் என்ன செய்வது கும்மியடிக்க யாராவது வந்தால பரவாயில்லை

தாரணி பிரியா said...

ஒகேய் சீரியஸ் :). நல்லா இருக்கு அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும் நல்லா இருக்கும் நம்புவோம்.

//கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்....

யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!//

இந்த வரிகள் நல்லா இருக்குப்பா :)

நட்புடன் ஜமால் said...

அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!]]

அவனிடம் இருந்த மகிழ்ச்சியான வார்த்தைகளை விட அவளிடம் இருந்த மகிழ்ச்சியான வார்த்தைகள் அவனுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கும் ...

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் பாராவிலே டிஸ்ட்ரக்‌ஷன்

அதனால மீதி பாரா முழுதும் அந்த நிலாவின் வாழ்க்கையை அமைப்பியல்(ஸ்ட்ரக்சரலிசம்) மூலமா சொல்லிட்டீங்கன்ன்னு நினைக்கிறேன்..!

அருமை சகோ ஒவ்வொரு கவிதையிலும் படிப்படியான வளர்ச்சி

வினோ said...

அழகான கவிதை.. மிக்க நன்றி சகோ...

அறிமுகப்படுத்திய பாலாவுக்கும் என் நன்றிகள்...

சிட்டுக்குருவி said...

அருமையான கவிதை அக்கா

:))))

Anonymous said...

//கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்...//

நிரம்ப பிடிச்சிருக்கு சக்தி :)

sakthi said...

சௌந்தர் said...
அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!!///

அருமையான வரிகள்...

நன்றி செளந்தர் முதல் வருகைக்கு

sakthi said...

NESAMITHRAN said...
//அதென்னவோ தெரியலை வர வர பின்னூட்ங்கள் ரொம்ப நல்லா போட பழகிட்டாங்க எல்லோரும் தகுதிக்கு மீறி புகழ்வது எனக்கு என்னவோ தவறாகபடுகின்றது இதனால் கண்டிப்பாக தலைகனம் கொள்ளக்கூடும் அது நானாக இருந்தாலும்//

அதனால நோ கமெண்ட்ஸ்

(கருத்து சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கனும் தங்கச்சி )

:)))))

சரிதானுங்க அண்ணா

sakthi said...

பத்மா said...
ஷக்தி ,தழைக்கட்டும் அன்பின் கிளைகள் ...
தழைத்து தரட்டும் அன்பின் அக்ஷயம் ..
களவாடினாலும் தீராது ..கண்ணீரும் வராது ..

அருமை யான கவிதைங்க

நன்றி பத்மா முதல் வருகைக்கு

sakthi said...

sivatharisan said...
மிகவும. அருமையாக உள்ளது ( வரிகள், கவிதை) வாழ்த்துக்கள்

நன்றி சிவதரிசன் தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்!!!!

sakthi said...

பாலா said...
இக்கவிதையின் பாடு பொருளாய் யான மென்னிதயத்தின் வெந்நீரூற்றில் வாழ் சூழ்நிலைக்கென்றே சிரபுஞ்சிகளாய்
இனிவரும் காலங்கள் நிறையட்டும் .
கவிதைக்கும் சேர்த்துமான வாழ்த்துகள் , கவிதை நல்கிய இதயத்திற்கும்

நன்றி சகோ உன் வாழ்த்திற்கு

இனிவரும் காலம் ஒளியுடன் திகழ வேண்டும் என்பதே என் ஆவல்!!!!

sakthi said...

shakthikumar said...
கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்....


யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!
super lines romba pidichiru

நன்றி சக்திகுமார்

sakthi said...

NESAMITHRAN said...
பெய்யா முகிலென்று பெருவிசும்பி லேதுமில்லை
செய்தவம் உய்த்துவக்கும் தாரகைகள் தூரமில்லை
தன்னையறிந்து தாயொப்ப பிலிற்றும் பேரன்பில் நெகிழும் உலகு
இன்னலறுத்து இன்மை ததும்பிப் பெருகப் பெறுக

*******************

ஓர் உளம் சுட்டிச் செய்த கவியா
வேறு கனாத் தொட் டெழுதிய மொழியா
எட்டாதிருப்பினும் சொன்னவரை
தூய சுருதி


தங்காய் நீ
தொடர்க முனைப்பை
துயரல்ல நலமே ஆகட்டும்
கவிதையின் கருப்பை

நன்றி நேசன் அண்ணா உங்கள் வாழ்த்துக்கள் என் கவிதை பெண்ணிற்கு போய் சேரட்டும் !!!!!

sakthi said...

சீமான்கனி said...
//அக்கினிப்பூவாய் தகிக்கும் மஞ்சத்தில்
தோகையெனத் துவள்கிறாள்
அமைதியின் கரிய காலடியில்
மனுஷர்களின் பேராசையினால்
காயப்பட்ட பூஞ்சிறகாய் அவள் மனம்!!!!//


நஞ்சு உண்ட பிஞ்சு மனத்தின் வலியாய்... வரிகள் வாழ்த்துகள் சக்திக்கா

நன்றி சீமான் தொடர் ஆதரவிற்கு

sakthi said...

தாரணி பிரியா said...
ஒகேய் சீரியஸ் :). நல்லா இருக்கு அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும் நல்லா இருக்கும் நம்புவோம்.

//கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்....

யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!//

இந்த வரிகள் நல்லா இருக்குப்பா :)


அந்த பொண்ணு நல்லா இருக்கும் இருக்கனும் அதான் என் பிரார்த்தனை தாரணி

sakthi said...

நட்புடன் ஜமால் said...
அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!]]

அவனிடம் இருந்த மகிழ்ச்சியான வார்த்தைகளை விட அவளிடம் இருந்த மகிழ்ச்சியான வார்த்தைகள் அவனுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கும் ..

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

ப்ரியமுடன் வசந்த் said...
முதல் பாராவிலே டிஸ்ட்ரக்‌ஷன்

அதனால மீதி பாரா முழுதும் அந்த நிலாவின் வாழ்க்கையை அமைப்பியல்(ஸ்ட்ரக்சரலிசம்) மூலமா சொல்லிட்டீங்கன்ன்னு நினைக்கிறேன்..!

அருமை சகோ ஒவ்வொரு கவிதையிலும் படிப்படியான வளர்ச்சி

நன்றி வசந்த் தொடர் ஆதரவிற்கு

sakthi said...

வினோ said...
அழகான கவிதை.. மிக்க நன்றி சகோ...

அறிமுகப்படுத்திய பாலாவுக்கும் என் நன்றிகள்...

நன்றி வினோ முதல் வருகைக்கு அறிமுகப்படுத்திய பாலாவிற்கும்

sakthi said...

சிட்டுக்குருவி said...
அருமையான கவிதை அக்கா

:))))

நன்றி சிட்டு

sakthi said...

இனியவள் புனிதா said...
//கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்...//

நிரம்ப பிடிச்சிருக்கு சக்தி :)



நன்றி புனிதா

Anonymous said...

சக்தி கொஞ்சம் புரியா கொஞ்சம் புரியா மறுக்கிறது..இதனை பேருக்கு புரிந்தது எனக்கு புரியலை என்று நெனைக்கும் போது தெரிகிறது நான் மண்டு என்று...

sakthi said...

தமிழரசி said...
சக்தி கொஞ்சம் புரியா கொஞ்சம் புரியா மறுக்கிறது..இதனை பேருக்கு புரிந்தது எனக்கு புரியலை என்று நெனைக்கும் போது தெரிகிறது நான் மண்டு என்று...

ஹலோ மேடம் நீங்க ஒரு ஜீனியஸ் எனக்குத் தெரியும் சும்மா சொல்லாதீங்க இனி கொஞ்சம் எளிமையாகவே எழுத்றேன்!!!

Thenammai Lakshmanan said...

யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!
//
அட அருமை சக்தி..

நசரேயன் said...

//அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!!//

ரெம்ப நல்லது ..

ஹேமா said...

மனதைக் களவாடிச் சென்றவன் மீண்டும் வந்து சொல்லும் ஒற்றைச் சொல்லில் அரும்பித் தளைக்கும் அவள் காதல் !

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

க.பாலாசி said...

தலைப்பிலேயே கவிதையை இடிச்சி புதைச்சிட்டீங்க... வறுமையைவிட இந்த வெறுமைக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்க...

நல்லாயிருக்குங்க...

sakthi said...

thenammailakshmanan said...
யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!
//
அட அருமை சக்தி..

நன்றி தேனம்மை தங்களின் முதல் வருகைக்கு

sakthi said...

நசரேயன் said...
//அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!!//

ரெம்ப நல்லது ..

என்ன நல்லது நசர் அண்ணா

சொல்லிட்டு போங்க!!!

sakthi said...

ஹேமா said...
மனதைக் களவாடிச் சென்றவன் மீண்டும் வந்து சொல்லும் ஒற்றைச் சொல்லில் அரும்பித் தளைக்கும் அவள் காதல் !

தளைக்கட்டும் ஹேம்ஸ்

sakthi said...

க.பாலாசி said...
தலைப்பிலேயே கவிதையை இடிச்சி புதைச்சிட்டீங்க... வறுமையைவிட இந்த வெறுமைக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்க...

நல்லாயிருக்குங்க..

நன்றி பாலாசி தங்களின் முதல் வருகைக்கு

ஆதவா said...

உங்கள் வலைத்தளத்தை எப்படி தவறவிட்டேன் என்றுதான் தெரியவில்லை!!!
கவிதையில்
சில வார்த்தைகள் ரொம்பவும் பிடித்திருக்கிறது.

பாத மணற்கற்றைகள் எரிய!!!!

மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்.


மென்னகையின் இலைகள்

அமைதியின் கரிய காலடி


நிலவு மாத்திரமல்ல.... எல்லாமே சூன்யமாகத்தான் இருக்கிறது!!!!

தொடருங்க:ள் சகோதரி!

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. said...

அருமை அருமை அருமையான கவிதை