Monday, July 26, 2010

பிஞ்சுகள் துயின்றிடும் பொழுதில்!!!

மெல்லிய விரல்களால்
என் நரம்பு வயல்களில்
நடவு நட்டு....

என் வெப்பத்தை
போர்த்துக் கொண்டு
உறங்கவேண்டுமென
உப்பு மலர்களை
உதிர்க்கின்ற குட்டி நட்சத்திரம் ஒன்று!!!

ஊற்றாய் சந்தோஷம் பொங்கிட
உள்ளார்ந்த குறும்பில்
உதட்டோரம் சிறு குழிவுடன்
செம்பஞ்சுக்குழம்பில் தோய்த்த
பிஞ்சப்பாதங்களுடனும்

செல்லச்சிணுங்கலும்
மெல்லிய மினுங்கலுமாய்
என் மார்போடணைத்து
மடி மீது அமர்ந்து
சிறு கதை சொல்ல
கேட்டு கண்ணயரும்
பட்டுத்தென்றல் மற்றொன்று!!!!

இவர்களின்
மோகனப்புன்னகையில்
மயங்கி நின்றதில்
என் கவிதைகள் யாவும்
முற்றுப்பெறாமல் முடிந்துவிடுமின்று.....

43 comments:

ஈரோடு கதிர் said...

இயற்கையாய் இருக்கும் கவிதைகளிடம் எழுதும் கவிதை தோற்றுத்தானே போகும்

நட்புடன் ஜமால் said...

மெல்லிய விரல்களால் என் நரம்பு வயல்களில் நடவு நட்டு..]]

கலக்கல்ஸ்

இங்கே கேட்குது மீட்டல் சத்தம்

நட்புடன் ஜமால் said...

முற்று பெறாமல் முடிந்துவிடும்

எப்படியோ!!!

தமிழ் அமுதன் said...

;)

தாரணி பிரியா said...

ஒகேய் கார்த்தி & பாலாஜி எங்க வீட்டுக்கு வாங்கப்பா. அம்மா கவிதை எழுதட்டும் :)

நல்லா இருக்கு சக்தி

சீமான்கனி said...

//செம்பஞ்சுக்குழம்பில் தோய்த்த
பிஞ்சப்பாதங்களுடனும்//

//மெல்லிய விரல்களால் என் நரம்பு வயல்களில் நடவு நட்டு//

அழகான உவமையில் பிஞ்சுக் கவிதை...அழகு சக்திக்கா... வாழ்த்துகள்...

நேசமித்ரன் said...

ஒரு நெகட்டிவ் விஷயம் சொல்லியே ஆகனும் சாரி தங்கச்சி

போன கவிதையும் சரி இதுவும் சரி கடைசியில ஏன் சொதப்புறீங்க

அருமையா எழுதிட்டு முடிக்கும் போது போது மட்டும் ஏன் மூர்ச்சை ஆகிறது மொழி

ஆதவா said...

பிஞ்சுகளின் ஸ்பரிசத்தில் உலகமே மறந்துவிடும்பொழுது கவிதை எம்மாத்திரம்/?

வாழ்த்துக்கள் சகோதரி!

gayathri said...

செல்லச்சிணுங்கலும்
மெல்லிய மினுங்கலுமாய்
என் மார்போடணைத்து
மடி மீது அமர்ந்து
சிறு கதை சொல்ல
கேட்டு கண்ணயரும்
பட்டுத்தென்றல் மற்றொன்று!!!!

nalla iruku da

Anonymous said...

ingu kathal malargalum azhagu kavithai arumbum azhagey.....sakthiyin yennam yaavum vannam thettapattu azhago azhagu,,,,,,

Mugilan said...

// என் வெப்பத்தை
போர்த்துக் கொண்டு
உறங்கவேண்டுமென
உப்பு மலர்களை
உதிர்க்கின்ற குட்டி நட்சத்திரம் ஒன்று!!!//
தாய்மையின் மெல்லிய உணர்வுகளை அற்புதமாய் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் சக்தி! வாழ்த்துக்கள்! :)

sakthi said...

ஈரோடு கதிர் said...
இயற்கையாய் இருக்கும் கவிதைகளிடம் எழுதும் கவிதை தோற்றுத்தானே போகும்

நன்றி கதிர் அண்ணா

வருகைக்கு

sakthi said...

நட்புடன் ஜமால் said...
மெல்லிய விரல்களால் என் நரம்பு வயல்களில் நடவு நட்டு..]]

கலக்கல்ஸ்

இங்கே கேட்குது மீட்டல் சத்தம்

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

நன்றி தமிழமுதன்

அனுப்பி வைக்கவா தாபி

sakthi said...

சீமான்கனி said...
//செம்பஞ்சுக்குழம்பில் தோய்த்த
பிஞ்சப்பாதங்களுடனும்//

//மெல்லிய விரல்களால் என் நரம்பு வயல்களில் நடவு நட்டு//

அழகான உவமையில் பிஞ்சுக் கவிதை...அழகு சக்திக்கா... வாழ்த்துகள்...

நன்றி சீமான் வருகைக்கு

sakthi said...

நேசமித்ரன் said...
ஒரு நெகட்டிவ் விஷயம் சொல்லியே ஆகனும் சாரி தங்கச்சி

போன கவிதையும் சரி இதுவும் சரி கடைசியில ஏன் சொதப்புறீங்க

அருமையா எழுதிட்டு முடிக்கும் போது போது மட்டும் ஏன் மூர்ச்சை ஆகிறது மொழி

கவிதைன்னு ஒத்துகிட்ட வரை மகிழ்ச்சி நேசன் அண்ணா!!!

வெகு நாட்களுக்கு பிறகு எழுதுவதால் இருக்கலாம்!!!

இனி மொழி மூர்ச்சையடையாது பார்த்து கொள்ள முயல்கிறேன் !!!

sakthi said...

ஆதவா said...
பிஞ்சுகளின் ஸ்பரிசத்தில் உலகமே மறந்துவிடும்பொழுது கவிதை எம்மாத்திரம்/?

வாழ்த்துக்கள் சகோதரி!

நன்றி ஆதவா வருகைக்கும் வாழ்த்திற்கும்!!!

sakthi said...

gayathri said...
செல்லச்சிணுங்கலும்
மெல்லிய மினுங்கலுமாய்
என் மார்போடணைத்து
மடி மீது அமர்ந்து
சிறு கதை சொல்ல
கேட்டு கண்ணயரும்
பட்டுத்தென்றல் மற்றொன்று!!!!

nalla iruku da

நன்றி காயா

sakthi said...

தமிழரசி said...
ingu kathal malargalum azhagu kavithai arumbum azhagey.....sakthiyin yennam yaavum vannam thettapattu azhago azhagu,,,,,,

நன்றி அரசியாரே என் எண்ணத்தை புரிந்து கொண்டமைக்கு

sakthi said...

Mugilan said...
// என் வெப்பத்தை
போர்த்துக் கொண்டு
உறங்கவேண்டுமென
உப்பு மலர்களை
உதிர்க்கின்ற குட்டி நட்சத்திரம் ஒன்று!!!//
தாய்மையின் மெல்லிய உணர்வுகளை அற்புதமாய் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் சக்தி! வாழ்த்துக்கள்! :)

நன்றி முகிலன் தங்களின் முதல் வருகைக்கு

சிட்டுக்குருவி said...

அருமையா எழுதியிருக்கீங்க

:)))

சே.குமார் said...

பிஞ்சுகளின் ஸ்பரிசத்தில் உலகமே மறந்துவிடும்பொழுது கவிதை எம்மாத்திரம்/?

வாழ்த்துக்கள் சகோதரி!

அப்துல்மாலிக் said...

வரிகளில் மெருகேற்றிருக்கிறது நீண்ட நாள் இடைவெறி

குழந்தைகளின் ஸ்பரிசம் அழகு கவிதை

rk guru said...

மிகவும் அழகான கவிதை வரிகள்......வாழ்த்துகள்

சி. கருணாகரசு said...

கவிதைக்கு கவிதை மிக அருமை பாராட்டுக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//இவர்களின்
மோகனப்புன்னகையில்
மயங்கி நின்றதில்
என் கவிதைகள் யாவும்
முற்றுப்பெறாமல் முடிந்துவிடுமின்று.//

அருமை அருமை....
நெஞ்சில் புதைந்த வரிகள்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ப்ரியமுடன் வசந்த் said...

arumai sago!!!

திகழ் said...

அருமை

ஹேமா said...

சக்தி...இந்தக் கவிதைகள் எப்பவும் நிறைக்க - நிறைவு பெறாதவை.எம்மை நிறைத்துக்கொண்டேயிருக்கும் கவிதைகள்.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு சக்தி.

எப்படி, இவ்வளவு அழகை/பிரவாகத்தை அடக்கி வச்சுக்கிட்டு இருந்தீங்க மக்கா?

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

குடந்தை அன்புமணி said...

அப்படியா... அதனால்தான் எழுதுவதில்லையோ... நன்றாக இருக்கிறது தோழி.

சத்ரியன் said...

//மெல்லிய விரல்களால்
என் நரம்பு வயல்களில்
நடவு நட்டு....//

அசத்தும் ஆரம்ப வரிகள்....!

சத்ரியன் said...

//உப்பு மலர்களை
உதிர்க்கின்ற குட்டி நட்சத்திரம் ஒன்று!!!//

இப்போதுதான் முதன்முதலாய் வாசிக்கிறேன். உப்பு மலர்கள் என்ற சொல்லாடலை...!

அழகு.

rk guru said...

கவிதை அருமை

shakthikumar said...

sakthi ka nijamaa naan ethirpaarkalai eppadi ?
superb akkaa, nice wordings.

அபி அப்பா said...

அட நல்லா இருக்கே கவிதை! இருங்க நான் பேப்பரில் எழுதி நட்ராஜுக்காக நான் எழுதினதுன்னு காலையிலே கிருஷ்ணா கிட்ட காமிக்கனும்:-))

கடைக்குட்டி said...

கவிதையைப் பற்றி கவிதையா???

முன்னது ஜெயிக்குது...

sakthi said...

சிட்டுக்குருவி said...
அருமையா எழுதியிருக்கீங்க

:)))

நன்றி சிட்டு

sakthi said...

நன்றி குமார்
நன்றி அப்துல் அண்ணா
நன்றி குரு
நன்றி கருணாகரசு
நன்றி சேகரன்

sakthi said...

நன்றி வசந்த்
நன்றி ஹேமா
நன்றி திகழ்

sakthi said...

நன்றி ராஜாண்ணா
நன்றி சத்ரியன்
நன்றி சக்திகுமார்
நன்றி அபி அப்பா
நன்றி கடைக்குட்டி