Tuesday, November 9, 2010

வீசும் தூறலிடை....


மண்ணை முத்தமிட்டு
துள்ளிகுதித்து தாளலயத்துடன்
சங்கீதம் கற்றுக்கொடுக்கும்
வெள்ளிமலர்த்தூவல்...

வீசும் தூறலிடை
மழை நூலில் கோர்த்த
நீர்ப்பூக்கள் நம்மேல் விழ....

மழையின் சீண்டலுக்கு ஒளிந்து
நாம் மரத்தடியில் ஒதுங்க.....

நீள்விசும்பினிடை நீந்தும்
நிலவும் நட்சத்திரங்களும்
நமை கண்டு நகைக்க.....

அரும்புகள் கண்சிமிட்ட
இலைகளெல்லாம்
வீழ்கின்றன அடுத்தடுத்து.....

கண்களில் நேசம் கொண்டு
நீ எனை பருகும் இக்கணத்தில்
மெளனத்தின் பொருட்டு
இதழ் மூடியிருப்பின்
இம்மழைக்காலத்தின்
மாலைப்பொழுதில்
தப்பித்துக்கொள்வேன்
உன்னிடமிருந்து...









24 comments:

எல் கே said...

மழை எப்படி எல்லாம் சிந்திக்க வைக்குது பாருங்க

ப்ரியமுடன் வசந்த் said...

//மண்ணை முத்தமிட்டு
துள்ளிகுதித்து தாளலயத்துடன்
சங்கீதம் கற்றுக்கொடுக்கும்
வெள்ளிமலர்த்தூவல்...//

ஆஹா !

கற்பனையையும் மழையையும் சங்கீதத்தையும்.... ம்ம்ம்ம்

ப்ரியமுடன் வசந்த் said...

//வீசும் தூறலிடை
மழை நூலில் கோர்த்த
நீர்ப்பூக்கள் நம்மேல் விழ....//

ஓஹ் அப்போ மழைத்தூரல் பூக்களா?
சொய்யென்று பெய்யும் மழை மாலையா?

ரொம்ப ரசனையான வரிகள்!

எல் கே said...

படமும் அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

//நீள்விசும்பினிடை நீந்தும்
நிலவும் நட்சத்திரங்களும்
நமை கண்டு நகைக்க.....//

நிலாவும் நட்சத்திரமும் சிரிச்சா எப்படியிருக்கும்ன்னு கற்பனை செய்ய வச்சுட்டீங்களேக்கா!

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசி பத்தி காதல்மழை...!

படம் பார்த்ததும் பிடிச்சது!

கலகலப்ரியா said...

நல்லாருக்கு சக்தி.. சாரல்..

ரோகிணிசிவா said...

cute

Paul said...

ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.. மிக மிக அழகாக செதுக்கியிருகிறீர்கள் அழகான வார்த்தைகள் கொண்டு.. தலைப்பு மிக மிக அருமை.. மிகவும் ரசித்தேன்!!

வினோ said...

arumai sakthi...

Chitra said...

படமும் கவிதையும் - அழகு. ரசித்தேன்.

சுசி said...

காதல் காதல்..

சீமான்கனி said...

உயிர்க் காதலும்...
மழைப் பூக்களும்...
விழிகள் உயிர் கொண்டெழுந்த படமும் மொத்தமாய் அழகு நன்றி சக்திக்கா

Anonymous said...

//மழை நூலில் கோர்த்த
நீர்ப்பூக்கள் //
மிக அழகான உருவகம்.. சூப்பர்!

காதல் மழை பொழியுது.. அருமை சக்தி :)

கவி அழகன் said...

அருமை அருமை அருமை வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

கற்பனையும்... மழையையும்...

ஆஹா..!
ஆஹா..!!
ஆஹா..!!!

தமிழ் அமுதன் said...

ஜில்லென்ற சாரல்...!

படம் அருமை...!

"உழவன்" "Uzhavan" said...

//மழை நூலில் கோர்த்த
நீர்ப்பூக்கள்//
 
சூப்பர் :-)

பத்மா said...

ஹாய் ஷக்தி
மழைக்கு பயந்து மரத்தடி போணுமா என்ன?
கவிதை மழையில் நனைந்து
காதல் மிகும் படிப்போர் எல்லாருக்கும்

நிலாமதி said...

படமும் கவிதையும் அழகு .பாராட்டுக்கள

Anonymous said...

காதலோடான கவிதை அழகு...

ஆனால் காதலை கூட ஏங்க வலிமை கொண்ட அமைப்பினால் ஆன வார்த்தைகளால் சொல்றீங்க...

logu.. said...

mmm.. eppothu vanthalum mannukku ithamai thooral..

eppothu padithaalum manathukku ithamai..

verenna unga varigalthan.

logu.. said...

picturellam engernthu

amukkureenganu oru mail pannunga..


ungaluku punniyama pogum.

ஹேமா said...

மெல்லிய மழைத்தூரலில் காதலின் ரசனையும் உணர்வும்...அப்பாடி !