Monday, June 15, 2009

இவர்களா இறைவனின் அவதாரங்கள்???

ஒரு சில மனிதர்கள் தாங்கள் தான் கடவுளின் அவதாரங்கள்
என பிதற்றுவதையும் அவர்களை நம்பி
லட்சோபலட்சம் மக்கள் தங்கள் பணத்தையும் பொருட்களையும்
வாரியிறைக்கும் முட்டாள்தனத்தையும் கண்டு மனம் வெதும்பி கேட்கிறேன்

யார் இறைவனின் அவதாரங்கள்???
தங்களை ஆண்டவனின் அடுத்தவாரிசு என கூறும்
இவர்கள் எல்லாம் இத்தனை வருடங்களாய் எங்கிருந்தனர்??

இவர்களுக்கு அத்தனை வலிமையுண்டென்றால்
இவர்களால் ஏன் நிறுத்தமுடியவில்லை
பெருகிவரும் கொலைகளை, கொள்ளைகளை
தொடரும் கற்பழிப்புகளை, லட்சக்கணக்கில் புதைக்குழிக்குள்ளும்
போரிலும் செத்துக்கொண்டிருக்கும் என் இனமக்களை???

ஆழிதனது அகலவாயை திறந்து
ஆயிரமாயிரம் உயிர்களை உள்வாங்கியதே
அப்பொழுது எங்கிருந்தார்கள் இந்த
அவதாரபுருஷர்கள் ஒரு அபாயமணி கூட அடிக்காமல் ???

ஏழைக்கு இரங்காது இரும்பு மனம் கொண்டு
ஏதோ ஒரு மடாதிபதிக்கும் போலிச்சாமியாருக்கும்
சாமரம் வீசுபவர்களே புறந்தள்ளுங்களேன் இந்த போலிகளை!!!

நமக்குபின் தோன்றிய எத்தனையோ மதங்கள்
மனித நேயமும் , மக்கள் சேவையும் என உயர்ந்துகொண்டுள்ளது
நாம் மட்டும் இறைவனை உணர்வதற்கு
இன்னமும் இடைதரகர்களை நம்பிக்கொண்டிருக்கின்றோம்
நாம் வெட்கித்தலைகுனியவேண்டிய வெட்கக்கேடல்லவா இது???

யோசித்துபாருங்கள் படங்களிலிருந்து
விபூதியும் குங்கும மழையும் பொழிகின்றதாம்!!!!
அதற்கு பதிலாய் அவர்களை
பொற்காசுகளும் நவமணிகளுமாய் பொழியச்சொல்லுங்கள்
உங்கள் பொருளாதாரமாவது உயரட்டும்!!!!!

நான் நாத்திகவாதி அல்ல ஆனால் இவர்களை வழிபட்டால் தான்
நான் ஆத்திகவாதி என்றால் நான் ஆத்திகவாதியும் அல்ல

உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!

56 comments:

வினோத்கெளதம் said...

அருமை..ஒரு வாரம் கழித்து அருமையான தலைப்போடு வந்து இருக்கிறிர்கள்..

S.A. நவாஸுதீன் said...

தலைப்பு ரொம்ப சூடா இருக்கே, உள்ள போயிட்டு வர்ரேன்பா

S.A. நவாஸுதீன் said...

மூட நம்பிக்கைக்கும், முட்டாள்தனத்திற்கும் ஒரு சாட்டையடி

S.A. நவாஸுதீன் said...

ஆழிதனது அகலவாயை திறந்து
ஆயிரமாயிரம் உயிர்களை உள்வாங்கியதே
அப்பொழுது எங்கிருந்தார்கள் இந்த
அவதாரபுருஷர்கள் ஒரு அபாயமணி கூட அடிக்காமல் ???

ஏழைக்கு இரங்காது இரும்பு மனம் கொண்டு
ஏதோ ஒரு மடாதிபதிக்கும் போலிச்சாமியாருக்கும்
சாமரம் வீசுபவர்களே புறந்தள்ளுங்களேன் இந்த போலிகளை!!!

மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் ஏஜென்ட் எதற்கு? சரிதான்.

பொறி பறக்கிறது சக்தி

S.A. நவாஸுதீன் said...

யோசித்துபாருங்கள் படங்களிலிருந்து
விபூதியும் குங்கும மழையும் பொழிகின்றதாம்!!!!
அதற்கு பதிலாய் அவர்களை
பொற்காசுகளும் நவமணிகளுமாய் பொழியச்சொல்லுங்கள்
உங்கள் பொருளாதாரமாவது உயரட்டும்!!!!!

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். திருடனாய்ப் பார்த்து திருந்தப் போவதில்லை. இவர்களும் திருந்தப்போவதில்லை.

புதியவன் said...

//நான் நாத்திகவாதி அல்ல ஆனால் இவர்களை வழிபட்டால் தான்
நான் ஆத்திகவாதி என்றால் நான் ஆத்திகவாதியும் அல்ல
உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!//

கவிதை முழுதும் மூடநம்பிக்கைகளுக்கு
கொடுக்கும் சாட்டையடிகளாக இருந்தாலும்
எனக்கு இந்த வரிகள் தான் பிடித்திருக்கிறது சக்தி...

S.A. நவாஸுதீன் said...

நான் நாத்திகவாதி அல்ல ஆனால் இவர்களை வழிபட்டால் தான்
நான் ஆத்திகவாதி என்றால் நான் ஆத்திகவாதியும் அல்ல
உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!

ரொம்ப அருமையா சொல்லிடேப்பா. ஒரு வாரமா அடக்கி வச்சிருந்த கோவமெல்லாம் வரிகளில் தெரி(க்)கிறது. உணர்ச்சிகரமான கவிதை.

நட்புடன் ஜமால் said...

உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!\\

விரக்த்தியின் உச்சம்

ஆளவந்தான் said...

சக்தி மறுபடியும் நெற்றிகண்ணை திறந்து விட்டார் :)

கடைக்குட்டி said...

சாட்டையடி...

ஆனா இத எல்லா மக்களுக்கும் புரியனுமே???

இறைவனின் அவதாரங்கள் முதலில் செய்வது இவர்களின் மூளையைக் களட்டுவது மட்டுமே...

அனைத்து மனிதர்களையும் அடைய வேண்டிய கருத்துக்கள்.

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

சுரேஷ் குமார் said...

இது கேரளாவைச்சேர்ந்த அமிர்தானந்தமயி பற்றினதா..?

சுரேஷ் குமார் said...

இல்லை சென்னைக்கு அருகில் உள்ள "ஆதிபராசக்தி சித்தர் பீடம் அடிகளார்" சம்பந்தப்பட்டதா..?

நசரேயன் said...

இடைவெளி விட்டு வந்தாலே சக்தியின் வேகத்துக்கு சக்தியே துணை, வழி மொழிகிறேன் அனைத்தையும்

sakthi said...

வினோத்கெளதம் said...

அருமை..ஒரு வாரம் கழித்து அருமையான தலைப்போடு வந்து இருக்கிறிர்கள்..

நன்றி வினோத்கெளதம்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

ஆழிதனது அகலவாயை திறந்து
ஆயிரமாயிரம் உயிர்களை உள்வாங்கியதே
அப்பொழுது எங்கிருந்தார்கள் இந்த
அவதாரபுருஷர்கள் ஒரு அபாயமணி கூட அடிக்காமல் ???

ஏழைக்கு இரங்காது இரும்பு மனம் கொண்டு
ஏதோ ஒரு மடாதிபதிக்கும் போலிச்சாமியாருக்கும்
சாமரம் வீசுபவர்களே புறந்தள்ளுங்களேன் இந்த போலிகளை!!!

மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் ஏஜென்ட் எதற்கு? சரிதான்.

பொறி பறக்கிறது சக்தி

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

புதியவன் said...

//நான் நாத்திகவாதி அல்ல ஆனால் இவர்களை வழிபட்டால் தான்
நான் ஆத்திகவாதி என்றால் நான் ஆத்திகவாதியும் அல்ல
உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!//

கவிதை முழுதும் மூடநம்பிக்கைகளுக்கு
கொடுக்கும் சாட்டையடிகளாக இருந்தாலும்
எனக்கு இந்த வரிகள் தான் பிடித்திருக்கிறது சக்தி...

நன்றி புதியவன் அண்ணா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நான் நாத்திகவாதி அல்ல ஆனால் இவர்களை வழிபட்டால் தான்
நான் ஆத்திகவாதி என்றால் நான் ஆத்திகவாதியும் அல்ல
உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!

ரொம்ப அருமையா சொல்லிடேப்பா. ஒரு வாரமா அடக்கி வச்சிருந்த கோவமெல்லாம் வரிகளில் தெரி(க்)கிறது. உணர்ச்சிகரமான கவிதை.

கவிதை தானா???

எனக்கே கொஞ்சம் சந்தேகம் தான்...

sakthi said...

நட்புடன் ஜமால் said...

உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!\\

விரக்த்தியின் உச்சம்

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

கடைக்குட்டி said...

சாட்டையடி...

ஆனா இத எல்லா மக்களுக்கும் புரியனுமே???

இறைவனின் அவதாரங்கள் முதலில் செய்வது இவர்களின் மூளையைக் களட்டுவது மட்டுமே...

அனைத்து மனிதர்களையும் அடைய வேண்டிய கருத்துக்கள்.

நன்றி கடைக்குட்டி

sakthi said...

சுரேஷ் குமார் said...

இது கேரளாவைச்சேர்ந்த அமிர்தானந்தமயி பற்றினதா

இல்லை சென்னைக்கு அருகில் உள்ள "ஆதிபராசக்தி சித்தர் பீடம் அடிகளார்" சம்பந்தப்பட்டதா..?

என்ன சுரேஷ் இவுங்க 2 மட்டும் தானா???

எத்தனை பேர் இன்னும் இருக்காங்க

sakthi said...

நசரேயன் said...

இடைவெளி விட்டு வந்தாலே சக்தியின் வேகத்துக்கு சக்தியே துணை, வழி மொழிகிறேன் அனைத்தையும்

நன்றி நசரேயன் அண்ணா

கலையரசன் said...

கவித எழுதுறது "ஈசி" ன்னு ஏவன்டா சொன்னான்?

பிரியமுடன்.........வசந்த் said...
This comment has been removed by the author.
பாலா said...

innikku "ivan "maattikkittan pola irukku ???????????

mmmmmmmmmmmmmmmm

polam right

நிலாவும் அம்மாவும் said...

சக்தி எப்படி இருக்கீங்க

பதிவு நல்லா இருக்கு...நானும் இறைவனின் அவதாரம் தான்...ஹி ஹி

ஆ.ஞானசேகரன் said...

//அதற்கு பதிலாய் அவர்களை
பொற்காசுகளும் நவமணிகளுமாய் பொழியச்சொல்லுங்கள்
உங்கள் பொருளாதாரமாவது உயரட்டும்!!!!!//

எல்லொராலும் கேட்கப்படும் கேள்விதான், ஆசைகளின் அவதனிப்பால்தான் இப்படிபட்ட முடநம்பிக்கைகள் வாழ்ந்துகொண்டுள்ளது

அ.மு.செய்யது said...

பல நாட்களாக எழுத வேண்டுமென்று நான் நினைத்த சப்ஜெக்ட் இது.

"கடவுள் இல்லன்னு சொல்றவன‌ நம்பிரலாம்.

கடவுள் இருக்கிறான்னு சொல்றான் பாரு..அவனையும் நம்பிரலாம்.

ஆனா நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு..அவன மட்டும் நம்பாத..பூட்ட கேஸ் ஆயிடுவ !!"

இத யார் சொன்னது நான் சொல்லத்தான் வேணுமா ??

உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் சக்தி...( ஐய் !! உங்க பேரும் சக்தின்னு இருக்கே..அப்ப நீங்களும் ??)

sakthi said...

கலையரசன் said...

கவித எழுதுறது "ஈசி" ன்னு ஏவன்டா சொன்னான்?

என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலைங்கோ...

sakthi said...

ஆளவந்தான் said...

சக்தி மறுபடியும் நெற்றிகண்ணை திறந்து விட்டார் :)

காமெடி கீமெடி செய்திடலையே ஆளவந்தாரே...

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
வாழ்த்துக்கள்

ஓட்டுக் குத்தியாச்சு//

பத்து நாளைக்கு பிறகு

புதிய கவிதை ஜொளிக்கிறது

பிளாக்கர் டெம்ப்லேட் நல்லாயிருக்கு

பின்னூட்டத்த கொஞ்சம் படிச்சி பாருங்க வசந்த் தம்பி...

sakthi said...

பாலா said...

innikku "ivan "maattikkittan pola irukku ???????????

mmmmmmmmmmmmmmmm

polam right

ரொம்ப மொக்கைபோல இருக்கோ பாலா

sakthi said...

நிலாவும் அம்மாவும் said...

சக்தி எப்படி இருக்கீங்க

பதிவு நல்லா இருக்கு...நானும் இறைவனின் அவதாரம் தான்...ஹி ஹி

குட் குட்

நன்றி நிலாவும் அம்மாவும்

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//அதற்கு பதிலாய் அவர்களை
பொற்காசுகளும் நவமணிகளுமாய் பொழியச்சொல்லுங்கள்
உங்கள் பொருளாதாரமாவது உயரட்டும்!!!!!//

எல்லொராலும் கேட்கப்படும் கேள்விதான், ஆசைகளின் அவதனிப்பால்தான் இப்படிபட்ட முடநம்பிக்கைகள் வாழ்ந்துகொண்டுள்ளது

நன்றி ஞானசேகரன்

sakthi said...

அ.மு.செய்யது said...

பல நாட்களாக எழுத வேண்டுமென்று நான் நினைத்த சப்ஜெக்ட் இது.

"கடவுள் இல்லன்னு சொல்றவன‌ நம்பிரலாம்.

கடவுள் இருக்கிறான்னு சொல்றான் பாரு..அவனையும் நம்பிரலாம்.

ஆனா நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு..அவன மட்டும் நம்பாத..பூட்ட கேஸ் ஆயிடுவ !!"

இத யார் சொன்னது நான் சொல்லத்தான் வேணுமா ??

உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் சக்தி...( ஐய் !! உங்க பேரும் சக்தின்னு இருக்கே..அப்ப நீங்களும் ??)

என்ன ஒரு சந்தேகம்

எப்ப அட்வைஸ் செய்ய ஆரம்பித்தோமோ அப்பவே நானும்....

ஹி ஹி ஹி ஹி

திகழ்மிளிர் said...

/நான் நாத்திகவாதி அல்ல ஆனால் இவர்களை வழிபட்டால் தான்
நான் ஆத்திகவாதி என்றால் நான் ஆத்திகவாதியும் அல்ல
உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!/

என்னை உள்ளத்தைத தொட்ட வரிகள்

ஏன் என்றால் நான் நாத்திகவாதியுமில்லை, ஆத்திவாதியுமில்லை

இதையும் படித்துப் பாருங்கள்

1.அன்பே சிவம்

2.இயற்கையும் இறைவனும்

நன்றி திகழ்மிளிராரே...

உங்கள் பதிவு மிக மிக அருமை
படித்து பார்த்தேன் சும்மா வார்த்தைகளில் புகுந்து விளையாடியுள்ளீர்கள்...

SUBBU said...

நல்லா இருக்கு :))))))

Anonymous said...

ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்...இவர்களை படிக்காதவர் நம்புவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் இந்த படித்தவர்கள் பணக்காரர் கூட்டம் தான் இவர்களை ஏற்றி வைப்பது...விஞ்ஞான மாற்றத்தின் உச்சத்தில் இருந்தும் இது போன்ற கிரியா ஊக்கிகளை ஊக்கப்படுத்துபவர்கள் திருந்தனும்.... நல்லபதிவு சக்தி....

SUBBU said...

//கலையரசன் said...
கவித எழுதுறது "ஈசி" ன்னு ஏவன்டா சொன்னான்?
//

அதானே :))))))))))))))))

sakthi said...

SUBBU said...

நல்லா இருக்கு :))))

nandri subbu

sakthi said...

தமிழரசி said...

ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்...இவர்களை படிக்காதவர் நம்புவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் இந்த படித்தவர்கள் பணக்காரர் கூட்டம் தான் இவர்களை ஏற்றி வைப்பது...விஞ்ஞான மாற்றத்தின் உச்சத்தில் இருந்தும் இது போன்ற கிரியா ஊக்கிகளை ஊக்கப்படுத்துபவர்கள் திருந்தனும்.... நல்லபதிவு சக்தி....

nandri arasiyare

sakthi said...

SUBBU said...

//கலையரசன் said...
கவித எழுதுறது "ஈசி" ன்னு ஏவன்டா சொன்னான்?
//

அதானே :))))))))))))))))

enna athane onnume puriyala enaku

SUBBU said...

//sakthi said...
SUBBU said...

//கலையரசன் said...
கவித எழுதுறது "ஈசி" ன்னு ஏவன்டா சொன்னான்?
//

அதானே :))))))))))))))))

enna athane onnume puriyala enaku
//

புரியாம இருப்பதே நல்லது :))))))))))

வழிப்போக்கன் said...

சிட்டுவேஷன் சாங்...

”எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே???”
:)))

shakthi kumar said...

marubadiyum soodaana kavithayaa?
nallaa irukku

பிரியமுடன்.........வசந்த் said...

akkaa ennoda pinnuuttaththai copy pannittu ungkaLukku vanthuduccukkaa sorry kkaa...pls....

sakthi said...

வழிப்போக்கன் said...

சிட்டுவேஷன் சாங்...

”எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே???”
:)))

நன்றி வழிபோக்கன்

sakthi said...

shakthi kumar said...

marubadiyum soodaana kavithayaa?
nallaa irukku

நன்றி சக்திகுமார்

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

akkaa ennoda pinnuuttaththai copy pannittu ungkaLukku vanthuduccukkaa sorry kkaa...pls...

இதுக்கு போய் ப்ளீஸ் கேட்கனுமா என்னப்பா இது

kanagu said...

ரொம்ப நல்ல பதிவுங்க... :)

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்...

" உழவன் " " Uzhavan " said...

//பொற்காசுகளும் நவமணிகளுமாய் பொழியச்சொல்லுங்கள்
உங்கள் பொருளாதாரமாவது உயரட்டும்!!!!!//

சரியாகச் சொன்னீர்கள்.

sakthi said...

kanagu said...

ரொம்ப நல்ல பதிவுங்க... :)

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்...

நன்றி கனகு

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

//பொற்காசுகளும் நவமணிகளுமாய் பொழியச்சொல்லுங்கள்
உங்கள் பொருளாதாரமாவது உயரட்டும்!!!!!//

சரியாகச் சொன்னீர்கள்.

நன்றி உழவரே

குமரை நிலாவன் said...

ஆழிதனது அகலவாயை திறந்து
ஆயிரமாயிரம் உயிர்களை உள்வாங்கியதே
அப்பொழுது எங்கிருந்தார்கள் இந்த
அவதாரபுருஷர்கள் ஒரு அபாயமணி கூட அடிக்காமல் ???

யோசித்துபாருங்கள் படங்களிலிருந்து
விபூதியும் குங்கும மழையும் பொழிகின்றதாம்!!!!
அதற்கு பதிலாய் அவர்களை
பொற்காசுகளும் நவமணிகளுமாய் பொழியச்சொல்லுங்கள்
உங்கள் பொருளாதாரமாவது உயரட்டும்!!!!!

நான் நாத்திகவாதி அல்ல ஆனால் இவர்களை வழிபட்டால் தான்
நான் ஆத்திகவாதி என்றால் நான் ஆத்திகவாதியும் அல்ல
உங்களை பொறுத்தவரை நான் விதண்டாவாதியாகவே இருந்துவிடுகிறேன்!!!!

என்னத்த சொல்ல
மக்கள் என்னைக்குத்தான் திருந்தபோராங்கனே தெரியல

கபிலன் said...

இந்த பதிவுக்கு நம்ம attendance மட்டும்!