
இருப்பிலும் இல்லாமையிலும்
காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!!
நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே
நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!!
தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில்
கிளைக்கும் அதன் தீனமான குரலில் தெரிகின்றது
பொங்கிகொண்டும் பெருகிக்கொண்டும்
இருக்கும் அதன் வேட்கைகள்!!!
நிம்மதியற்ற பயணங்களும் துரத்தல்களும்
மனதின் மென்மைகளைஉருமாற்றியதால்
மழை நாட்களை போல்
மனமும் புகையோடி போய் இருக்கின்றது!!!!
பல சமயங்களில்
வியூக சூட்சமம் அமைத்தும்
சில சமயங்களில் வெடவெடப்பும்
மெலிவும் கொண்டு மடிந்து சுருள்கிறது
ஆனாலும் மீண்டும் உயிர்த்து நிற்கிறது!!!!