Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Thursday, July 2, 2009

உனக்காய் ஒரு அழகிய பிரபஞ்சம்......


எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!

என் விரல் தொடும் தூரத்தில் விண்மீண்கள் காத்திருக்க
அங்கும் என் விரல் படா தூரத்திலேயே நீ இருக்கின்றாய்!!!

மொட்டவிழ்கின்ற மலர்களை நான் ரசித்திட்டபோதும்
மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்
சத்தமின்றி நீ சிரித்த சிரிப்பின் ஞாபகத்தில்
சிக்கி சித்தம் மறந்து சிலிர்க்கின்றேன்!!!!

நீள் விசும்பினிடை நீந்தும்
நிலவின் மொழியும்
நட்சத்திரங்களின் முணுமுணுப்பும் கேட்டு
நிம்மதியிழந்து தவிக்கின்றேன்
உன் நேசமுகம் காணாத போழ்துகளில்!!!!

உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!