என்ன இது சின்னபிள்ளைத்தனமான கேள்வின்னு நினைக்கலாம் நீங்க???
ஆனால் இது நாளை நடைபெறபோகும் இடைத்தேர்தலுக்கான கேள்வி
யார் ஜெயிக்க போவது???
சமபலம் உள்ள எதிர்கட்சி தோல்விக்கு பயந்து ஒளிந்து கொள்ள
ஆளும்கட்சிக்கு அடிக்கப்போகின்றது ஜாக்பாட்
கூடவே அக்கட்சியின் தொண்டர்கள்
ஆற்றியிருக்கும் களப்பணி அத்தனை அற்புதமானது. வீடு வீடாக ஒருஓட்டிற்கு
ரூபாய் 200 வினியோகித்துள்ளார்கள் . மேலும் கடந்த 15 நாளாக சும்மா
பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வாக்காளர்களை போதை மழையில்
நனைத்து உள்ளனர் .அவ்வப்போது விருந்து வேறு கனஜோராய்
இது போதாதா இவர்கள் ஜெயிப்பதற்கு???
இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் எதிர்கட்சியின் முக்கிய
பொறுப்பாளர் வீட்டிற்கு சென்று ஓட்டை விலைபேசி தர்ம அடி வாங்கி
திரும்பிள்ளனர் சிலர் பாவம் பரிதாபத்துக்குரிய தொண்டர் குழாம்.
ஒரு ரூபாய்க்கு அரிசி என பெரிதாய் பெருமையுடன் கூறியவர்கள். இப்பொழுது
விண்ணை தொடும் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் விலை வாசி
உயர்வுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்???
சிலர் கூறலாம் விலைவாசி உயர்வுக்கு இவர்கள் என்ன செய்யமுடியும் என்று
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பதுக்கல்களை கட்டுக்குள் கொண்டு
வந்தாலே போதும். ஆனால் கள்ள சந்தை மத்தியில் உள்ளவர்களின்
பேராதரவோடு அல்லவா நடக்கின்றது. இவர்களிடம் காசை வாங்கிக்கொண்டு
ஓட்டளித்த நம் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
உலகளவில் உயர்வாக பேசப்பட்ட இந்திய ஜனநாயக முறைக்கு இப்படி ஒரு
அவல நிலை ஏற்பட்டிருக்க வேண்டாம்.
பணத்திற்கு ஓட்டுரிமையை விற்கும் கேவலமான நிலை. எப்பொழுது தான்
நாம் திருந்த போகின்றோம் என தெரியவில்லை????
காமராஜர், அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் இருந்த நாடு ஆனால்
இப்பொழுது பாவம் பதவி வெறி பிடித்த சிலரால் படாத பாடு
பட்டுக்கொண்டிருக்கின்றது.....
என்று கிடைக்கும் இவர்கள் அனைவரிடமிருந்து மீண்டும் ஒரு சுதந்திரம்???
21 comments:
//வீடு வீடாக ஒருஓட்டிற்கு
ரூபாய் 200 வினியோகித்துள்ளார்கள் //
இதுக்கு அவர்கள் மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம்
என்னக்கா கவிதைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா?
இல்லை நேரமின்மையா?
//என்று கிடைக்கும் இவர்கள் அனைவரிடமிருந்து மீண்டும் ஒரு சுதந்திரம்???//
மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டால்...
ஜெயிப்பது யாராகிலும்
தோற்பது நாம் தான்
உங்கள் கோபம், ஆதங்கம் நியாயம்தான்
ஆனாலும் சக்தி...
இந்த நிலையும் ஒரு நாள் மாறும்
மாற்றத்திற்கான விதையை தொடர்ந்து ஊன்ற வேண்டும்.
என்று கிடைக்கும் இவர்கள் அனைவரிடமிருந்து மீண்டும் ஒரு சுதந்திரம்?? Supper
நட்புடன் ஜமால் said...
ஜெயிப்பது யாராகிலும்
தோற்பது நாம் தான்
//
ஜமால் சரியாக சொல்லியிருக்கிறhர்.
விண்ணை தொடும் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் விலை வாசி
உயர்வுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்???
//
இதப்பத்தியெல்லாம் நம்ம மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஓட்டுக்கு எவ்வுளவு கொடுப்பீங்க... இது தான் இப்போம் ஜனநாயகமாக மாறிக்கிட்டு இருக்கு.
ஒரு வோட்டுக்கு வெறும் 200 தானா? இதுலயும் ஊழல்...! கட்சியினர் ஒரு வோட்டுக்கு ஒதுக்கும் தொகை 500-700 வரை ஆனால் வந்து சேர்வது வெறும் 200 மட்டும்! என்ன அநியாயம்! மதுரை,திருமங்கலத்தில் கட்சியினரிடம் இருந்த ''நேர்மை'' இங்கே இல்லை!!!
பணத்திற்கு ஓட்டுரிமையை விற்கும் கேவலமான நிலை. எப்பொழுது தான்
நாம் திருந்த போகின்றோம் என தெரியவில்லை????
//
வாய்ப்பே இல்லை சக்தி. இப்போம் எல்லாம் இடைத்தேர்தல் வராதா என்று மக்கள் கேட்கிறhர்கள். அடுத்த இடைத்தேர்தல் திருஞ்செந்தர். இன்னும் வரும்...
இப்பொழுது பாவம் பதவி வெறி பிடித்த சிலரால் படாத பாடு
பட்டுக்கொண்டிருக்கின்றது.....
என்று கிடைக்கும் இவர்கள் அனைவரிடமிருந்து மீண்டும் ஒரு சுதந்திரம்???
//
விடுங்க சக்தி. திருந்தாத ஜென்மங்களை பற்றி ஏன் பேச வேண்டும்,
என்று கிடைக்கும் இவர்கள் அனைவரிடமிருந்து மீண்டும் ஒரு சுதந்திரம்???
நேத்து மெகா டிவியில தங்கபாலு சொல்றார், "அழகிரியே சொல்லிட்டார் நாங்க பெருவாரியான வாக்கு வித்தியாசத்துல ஜெயிப்போம்னு. அதனால எங்களுக்கு கவலை இல்லை. கண்டிப்பா நாங்கதான் ஜெயிப்போம்னு".
இந்த ஒரு ஸ்டேட்மென்ட் போதுமே.
சக்தி அக்கா !!!
உங்க வீட்டுக்கு ஆட்டோ வரப்போவது உறுதி என்பதால் பார்த்து சூதானமாக இருக்கவும்.
மீத எஸ்கேப்பு !!!
ஓட்டுக்கு காசு வாங்க வேணாம்னு சொன்னா யாரும் கேக்க மாட்டாங்க...அதனால காசு வாங்கிக்கட்டும்...ஆனா நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டு போடட்டும்...அவங்க இஷ்டப்படி...கை நீட்டி காசு வாங்கினவனுக்கு திரோகம் பண்ணக் கூடாது என்ற நிலையை இந்த ஓட்டி விஷயத்துல மாற்றி ஆகணும். அடிப்படை ஜனநாயக கொள்கையே காலி ஆயிடும் போல இருக்குங்க..!
அவர்களும் நம்மில் ஒருவர் தான், ஆனால் எப்போதும் அவர்களே ஜெயிக்கிறார்கள்!! அது ஏனோ? தொடருட்டும் சக்தியின் சாட்டையடிகள்.
காமராஜர், அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் இருந்த நாடு ஆனால்
இப்பொழுது பாவம் பதவி வெறி பிடித்த சிலரால் படாத பாடு
பட்டுக்கொண்டிருக்கின்றது.....
என்று கிடைக்கும் இவர்கள் அனைவரிடமிருந்து மீண்டும் ஒரு சுதந்திரம்???
\\
நெத்தியடி சூப்பர் சக்தி
அனைவருக்கும் இலவச சுதந்திரம்னா என்னான்னே தெரியாம எங்களுக்கு தரலையேன்னு சாலை மறியல் பண்ணுறவங்க நாம. சிலது அத வித்து காசாக்கிடும் கூட. தேவையில்லாம் தேர்தல் செலவு நம்ம வரிப்பணம்.
photo super -:)
:(
Same thoughts here too
சுதந்திரம் வாக்கி தந்தோரை நன்றியுடன் நினைத்து விஸ்வாச உணர்வை மனதில் எழுப்பும் நேரம் மனிதனுடைய வாழ்வில் மிக உயர்ந்த நேரம்.
புரட்சிக்கருத்துக்கள் இந்த பதிவில்
Post a Comment