Sunday, August 30, 2009

சுழற்புதிர்!!!





தயக்கங்களும் தவிப்புகளும்
வேடிக்கைகளும் வினோதங்களும்!!!


வலிகளும் வதைகளும்

பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!!

அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!




கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்

போய் விழுந்து விடுகின்றது!!!


காலமெனும் விசை
யாவையும்
சுற்றிவிடுகின்றது!!!

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்

சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!


ஆனாலும் பாதையின் தொலைவு

விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!

72 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!//

சே ஏன் இப்டியிருக்கு

அதனாலதான் சுவார்ஸ்யமா நாளைக்கு என்ன நடக்குன்னு தெரியாமலே செல்கிறதோ வாழ்க்கை...

கவிதை ரொம்ப யோசிக்க வைக்குது சகோ......

sakthi said...

பிரியமுடன்...வசந்த் said...

//அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!//

சே ஏன் இப்டியிருக்கு

அதனாலதான் சுவார்ஸ்யமா நாளைக்கு என்ன நடக்குன்னு தெரியாமலே செல்கிறதோ வாழ்க்கை...

கவிதை ரொம்ப யோசிக்க வைக்குது சகோ......

நன்றி வசந்த் தங்களின் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும்

ஹேமா said...

சக்தி,வாழ்வே ஒரு புதிர்தான்.
அவிழ்க்க முடியாமல் இருக்கிறது.கவனமாக அவிழ்த்துவிட்டாலோ சுகமாகத்தான் இருக்கிறது.நிறைந்த பொறுமை தேவை தோழி.

பாலா said...

இடையிடையே புதிருக்கான சின்ன க்ளு க்களும் வந்து போகுமே அதயேன் சொல்ல வுட்டுடீங்க

kanagu said...

/*காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!

ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!*/

உண்மை அக்கா..

அது நிண்டு கொண்டே தான் செல்கிறது... :))

மிகவும் அர்த்தம் பொதிந்த கவிதை :))

Anonymous said...

//அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!//

உண்மை எச்சரிக்கை என்னும் உணர்வை மறந்ததால் சந்திக்க நேர்ந்த அவலம்.. நமக்கு எதிரிகள் நம் பலவீனங்களே...

Anonymous said...

//அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!

ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!//

ஆம் எல்லை அறிவிக்காமல் நம்மை அரவணைக்கும் கொடிய நெடிய பாதை..பயனுற்றவர் யாரும் பண்பாளர் இல்லை போலும் கடந்த பாதையை திரும்பி பார்க்கவில்லை...வாழ்க்கை பாடத்தில் ஒரு பகுதி..வெல்வோம் நம்மால் இயலும்.....

நட்புடன் ஜமால் said...

கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்
போய் விழுந்து விடுகின்றது!!!]]

அதன் இயல்பு அதுதானே...

நட்புடன் ஜமால் said...

வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!]]

பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!]]

ஹேமா சொல்லியதை நானும் சொல்லிக்கிறேன்.

thiyaa said...

"ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!"

அருமையான கவிதை
யதார்த்தமான வரிகள் வாழ்த்துகள்

அ.மு.செய்யது said...

//அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!
//

புதிய இரண்டு வார்த்தைகளை கற்று கொண்டேன்.

சான்ஸே இல்ல...இவ்வளவு சூப்பரா கவிதை எழுத ஆரம்பிச்சிடீங்க

இலக்கிய இதழ்களில் அனுப்பலாம் ரேஞ்சுக்கு எழுத்தின் தரம் கூடியிருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள் !!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சக்தி,

கலக்கல். வாழ்க்கை புதிர் தாங்க. முடிச்சுகளை அவிழ்க்க அவிழ்க்க வந்து கொண்டே இருக்கும்:)

நல்ல வார்த்தைத் தேர்வு, படங்களும் அருமை.

ஈரோடு கதிர் said...

//கடந்த காலமெனும் தாழியில் //

எங்கே பிடிக்கிறீகள்
இந்த வார்த்தைகளை

அற்புதம்

கலையரசன் said...

//காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!! //

அப்படி சுத்திவிட்டுதான், துபாய்ல வந்து மாட்டிக்கிட்டேன்...
அருமையா, எதார்த்தமா, இயல்பா சொல்லிட்டீங்க சக்தி!

ஆ.ஞானசேகரன் said...

//ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!//

உண்மைதான் சக்தி,... நல்ல வரிகளில் நல்ல படைப்பு

S.A. நவாஸுதீன் said...

அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!

அதுதானே வாழ்க்கை. முடிச்சு முன்பே அவிழ்ந்து விட்டால் வாழ்க்கை வெறுமை ஆகிவிடும்.

S.A. நவாஸுதீன் said...

கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்
போய் விழுந்து விடுகின்றது!!!

அதன் இடமும் அதே

S.A. நவாஸுதீன் said...

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!

ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது

அருமையான வரிகள் சக்தி. செய்யது சொன்ன மாதிரி "இலக்கிய இதழ்களில் அனுப்பலாம் ரேஞ்சுக்கு எழுத்தின் தரம் கூடியிருக்கிறது" என்பது உண்மைதான்

gayathri said...

nalla iruku da kavithai

SUFFIX said...

//ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!//

வாழ்க்கையே ஒரு சேஸிங் தானே!!

ரெட்மகி said...

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!

//
எப்படிங்க இப்படியெல்லாம் ...

ரொம்ப ரசித்தேன்...

Vidhoosh said...

அருமையான கவிதைங்க.

-வித்யா

vasu balaji said...

நல்லா சொல்லி இருக்கீங்க சகோதரி. பாராட்டுக்கள்.

sakthi said...

ஹேமா said...

சக்தி,வாழ்வே ஒரு புதிர்தான்.
அவிழ்க்க முடியாமல் இருக்கிறது.கவனமாக அவிழ்த்துவிட்டாலோ சுகமாகத்தான் இருக்கிறது.நிறைந்த பொறுமை தேவை தோழி.

ஆம் சகோதரி பொறுமை தேவை தான் மிக அதிகமாகவே

நன்றி ஹேமா

sakthi said...

பாலா said...

இடையிடையே புதிருக்கான சின்ன க்ளு க்களும் வந்து போகுமே அதயேன் சொல்ல வுட்டுடீங்க

அப்படியா தெரியலை பா இனி அடுத்து எதாவது எழுதினால் கண்டிப்பாக சொல்றேன்

sakthi said...

kanagu said...

/*காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!

ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!*/

உண்மை அக்கா..

அது நிண்டு கொண்டே தான் செல்கிறது... :))

மிகவும் அர்த்தம் பொதிந்த கவிதை :))

நன்றி கனகு அர்த்தம் புரிந்தால் சரி

sakthi said...

அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!//

உண்மை எச்சரிக்கை என்னும் உணர்வை மறந்ததால் சந்திக்க நேர்ந்த அவலம்.. நமக்கு எதிரிகள் நம் பலவீனங்களே..

ஆம் சகோதரி நமது பலவீனங்கள் தான் நமது மிகப்பெரும் எதிரிகள்

நன்றி தங்களின் வருகைக்கு

கபிலன் said...

காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது

அருமைங்க!

sakthi said...

நட்புடன் ஜமால் said...

கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்
போய் விழுந்து விடுகின்றது!!!]]

அதன் இயல்பு அதுதானே

ஆம் அண்ணா அதன் இயல்பு அது தான்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!]]

பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!]]

ஹேமா சொல்லியதை நானும் சொல்லிக்கிறேன்.

நன்றி ஜமால் அண்ணா தங்களின் வருகைக்கும்

sakthi said...

தியாவின் பேனா said...

"ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!"

அருமையான கவிதை
யதார்த்தமான வரிகள் வாழ்த்துகள்

நன்றி தியாவின் பேனா

sakthi said...

அ.மு.செய்யது said...

//அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!
//

புதிய இரண்டு வார்த்தைகளை கற்று கொண்டேன்.

சான்ஸே இல்ல...இவ்வளவு சூப்பரா கவிதை எழுத ஆரம்பிச்சிடீங்க

இலக்கிய இதழ்களில் அனுப்பலாம் ரேஞ்சுக்கு எழுத்தின் தரம் கூடியிருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள் !!


நன்றி செய்ய்து நல்லா எழுதியிருக்கீங்கன்னு உங்ககிட்ட பேர் வாங்கியதில் மிக்க மகிழ்ச்சி பா

தங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள்

sakthi said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

சக்தி,

கலக்கல். வாழ்க்கை புதிர் தாங்க. முடிச்சுகளை அவிழ்க்க அவிழ்க்க வந்து கொண்டே இருக்கும்:)

நல்ல வார்த்தைத் தேர்வு, படங்களும் அருமை.


நன்றி செந்தில் வேலன் தொடர்ந்து வருகை தருவதற்கு

sakthi said...

கதிர் - ஈரோடு said...

//கடந்த காலமெனும் தாழியில் //

எங்கே பிடிக்கிறீகள்
இந்த வார்த்தைகளை

அற்புதம்

நிறைய புத்தகங்கள் படியுங்கள் கதிர்

வார்த்தைகள் உங்கள் வசமாக வாழ்த்துக்கள்

Anonymous said...

:)))



:((((


:))))


:((((


that's all

sakthi said...

கலையரசன் said...

//காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!! //

அப்படி சுத்திவிட்டுதான், துபாய்ல வந்து மாட்டிக்கிட்டேன்...
அருமையா, எதார்த்தமா, இயல்பா சொல்லிட்டீங்க சக்தி!

நன்றி கலையரசன்

தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!//

உண்மைதான் சக்தி,... நல்ல வரிகளில் நல்ல படைப்பு

நன்றி சேகரன்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!

அதுதானே வாழ்க்கை. முடிச்சு முன்பே அவிழ்ந்து விட்டால் வாழ்க்கை வெறுமை ஆகிவிடும்.

ஆமா அண்ணா

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!

ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது

அருமையான வரிகள் சக்தி. செய்யது சொன்ன மாதிரி "இலக்கிய இதழ்களில் அனுப்பலாம் ரேஞ்சுக்கு எழுத்தின் தரம் கூடியிருக்கிறது" என்பது உண்மைதான்

நன்றி நவாஸ் அண்ணா

முயற்சிக்கிறேன்

sakthi said...

gayathri said...

nalla iruku da kavithai
நன்றி காயா

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

//ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!//

வாழ்க்கையே ஒரு சேஸிங் தானே!!


கண்டிப்பாக

நன்றி தங்கள் ஆதரவுக்கும்

sakthi said...

ரெட்மகி said...

அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!

//
எப்படிங்க இப்படியெல்லாம் ...

ரொம்ப ரசித்தேன்...

நன்றி ரெட்மகி

sakthi said...

Vidhoosh said...

அருமையான கவிதைங்க.

-வித்யா

நன்றி வித்யா

sakthi said...

வானம்பாடிகள் said...

நல்லா சொல்லி இருக்கீங்க சகோதரி. பாராட்டுக்கள்.

நன்றி வானம்பாடிகள் உங்களின் வருகைக்கும் பாராட்டுகளுக்கும்

sakthi said...

கபிலன் said...

காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது

அருமைங்க!

நன்றி கபிலன் உங்களின் தொடர் ஆதரவிற்கு

sakthi said...

mayil said...

:)))



:((((


:))))


:((((


that's all

நன்றி சகோதரி விஜி

*இயற்கை ராஜி* said...

நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்

சத்ரியன் said...

//காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!//

சக்தி,
நிறைய யோசிக்கறீங்கப்பா. நமக்குத்தான் மண்டைக்குள்ள கரையான் கூடு கட்டிருச்சிப் போல!

சிந்திக்க வைக்கும் சொற்கள்.

சீமான்கனி said...

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைததுதனே வழக்கை ..
அருமையான பதிவு.....
வாழ்த்துகள்..

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு

எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வரும்

அருமையான எழுத்துக்கள்

தொடருங்க சக்தி

sakthi said...

இய‌ற்கை said...

நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்

சரி டா சொல்லாதே சரியா

மெயில் அனுப்பு

மறக்காதே

sakthi said...

சத்ரியன் said...

//காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!//

சக்தி,
நிறைய யோசிக்கறீங்கப்பா. நமக்குத்தான் மண்டைக்குள்ள கரையான் கூடு கட்டிருச்சிப் போல!

சிந்திக்க வைக்கும் சொற்கள்.

நன்றி சத்ரியன்

sakthi said...

seemangani said...

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைததுதனே வழக்கை ..
அருமையான பதிவு.....
வாழ்த்துகள்..

நன்றி சீமான்

sakthi said...

[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

:)))))))

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

நல்ல பதிவு

எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வரும்

அருமையான எழுத்துக்கள்

தொடருங்க சக்தி

நன்றி அபு அண்ணா

சப்ராஸ் அபூ பக்கர் said...

சுழர் புதிர் நன்றாகவே சுழன்றது.

வாழ்த்துக்கள். அருமையாக இருந்தது....

Admin said...

//அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!//

நல்ல வரிகள்.

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

சுழர் புதிர் நன்றாகவே சுழன்றது.

வாழ்த்துக்கள். அருமையாக இருந்தது.

நன்றி சப்ராஸ் அபூ பக்கர்

sakthi said...

சந்ரு said...

//அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!//

நல்ல வரிகள்.

நன்றி சந்ரு

R.Gopi said...

க‌விதை அருமை... அத‌னோடு இணைந்த அந்த‌ ப‌ட‌ங்க‌ள் மிக‌ அருமை...

வாழ்த்துக்க‌ள் ஷ‌க்தி... ந‌ல்ல‌ எழுத‌றீங்க‌... இன்னும் நிறைய‌ எழுதுங்க‌....

sakthi said...

R.Gopi said...

க‌விதை அருமை... அத‌னோடு இணைந்த அந்த‌ ப‌ட‌ங்க‌ள் மிக‌ அருமை...

வாழ்த்துக்க‌ள் ஷ‌க்தி... ந‌ல்ல‌ எழுத‌றீங்க‌... இன்னும் நிறைய‌ எழுதுங்க‌....

நன்றி கோபி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல கவிதைதான் சக்தி. ஆனால் மனதை ஏதோ செய்கிறது. என்றும்போல் என் அன்பு உங்களுக்கு.

Sanjai Gandhi said...

எப்டி தான் யோசிக்கிறிங்களோ.. நல்ல கவிதை..

பா.ராஜாராம் said...

நல்ல கவிதைடா சக்திம்மா..எழுத்தின் மெருகு கூடி வருகிறது.தொடர்ந்து எழுதுங்கள்.நல்ல உயரம் காத்திருக்கிறது.

SUBBU said...

அருமையான கவிதை :))))))))

Anonymous said...

அழகான வரிகளுடன்...கவிதை. வாழ்க்கை ரெயில் பாதை போல நீண்டு கொண்டே இருக்கும். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது போல நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் வேடிக்கை பார்த்து கொண்டே தான் இருக்கிறேhம். சில நிகழ்வுகள் பூச்செண்டாக வரும்... சில நிகழ்வுகள் இதயத்தை சுக்கு சுக்கா நொறுக்கி விட்டு போய் கொண்டே இருக்கும்.


கவிதை வரிகள் அருமை.

குமரை நிலாவன் said...

கவிதை அருமை
படங்கள் மிகவும் அருமை

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

அருமை

வால்பையன் said...

நல்லா வந்துருக்கு!

படத்துடுடன் டெக்ஸ்ட் சேர்க்காமல் தனிதனியா போடுங்க!

sakthi said...

ஜெஸ்வந்தி said...
நல்ல கவிதைதான் சக்தி. ஆனால் மனதை ஏதோ செய்கிறது. என்றும்போல் என் அன்பு உங்களுக்கு.

nandri jeswanthy

Anonymous said...

வலிகள் வார்த்தைகளில் தொக்கி நிற்கிறது...நெடுதூர முட்களை தாண்டிதான் கால் ஈரமண்ணில் பதிகிறது...
மிகவும் நன்று... தொடருங்கள்...

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

கருத்தாழமிக்க கவிதை