பின்னிரவில் எனக்குள்
எழும் மிருகம் ஒன்று
தன்னிரு கரங்களுடன்
எனை அழிக்கவேண்டுமென்று....
என்னால் ஒரு கட்டத்தில் நேசிக்கப்பட்டது
என் மடி மேல் அமர்ந்து
என் தசைகளை தின்றழிக்கும் இன்று....
முப்பதுக்கு மேல் அதை நான்
மூர்ச்சையாக்க எண்ண
ஏனோ அது உயிர்தெழுந்து தொலைகின்றது....
இம்மிருகம் நான் கொல்வேனோ??
இல்லை மிருகம் எனை கொல்லுமோ?
37 comments:
உண்மையாவே எனக்கு எதுவுமே புரியல
இம்மிருகம் நான் கொல்வேனோ??
இல்லை மிருகம் எனை கொல்லுமோ///////////////
யார் கொல்ரான்களோ ?
சிலநேரம் நாமும் சிலநேரம் மிருகமும்
கொன்றும்
கொல்லப்பட்டும் ...
ஒன்றை இன்று தின்று
இரண்டும் வாழும்
ஆஹா ஒண்ணும் புரியமாட்டேங்குதே
அண்ணா ஜமால் அண்ணா
சக்திக்கா உங்க கட்சில சேந்துட்டாங்களா உங்க தக்காளிக்கவிதைக்கே இன்னும் மண்டைய பிச்சுகிட்டு இருக்கேன்..இந்த வரிசையிலே இதுவுமா? போச்சுடா இன்னைக்கு தூக்கம்.......
ஓண்ணும் புரியல அக்கா :((((
மனிதனக்குள்ள இருக்குற மிருகத்த பத்தி சொல்றிங்க-னு நினைக்கிறேன் :))
முதிர் கன்னி பற்றிய கவிதையா...?
//இம்மிருகம் நான் கொல்வேனோ??
இல்லை மிருகம் எனை கொல்லுமோ?//
இருவருக்குமே மரணமில்லை!!
(இது கவிஞர்களுக்கு மட்டும்)
புரியுது...ஆனா புரியல!!
ஒன்று நிச்சயம். கொல்லப்படவேண்டும் இல்லையேல் கொல்லும்
ஹலோ சக்தி, புதிர் எல்லாம் வேண்டாம். விளக்கம் சொல்லுங்கோ. நேசமித்திரன் கவிதை படிச்சுட்டேனோ என்று எனக்கு சந்தேகம் வந்திடிச்சு.
அவரிடம் தனியாய் பாடம் ஏதும் படிக்கிறீர்களோ? ஹா ஹா ஹா
10 முறை படிச்சிட்டேங்க சக்தி...
என் புத்திக்கு சரியா புரியலிங்க..
கொஞ்சம் விளக்குங்கோ...
periyavangaluke puriyala
aparam epaadi intha kozanthaikku purium
ஆஹா...சக்தி,அற்புதம்!
உங்கள் master piece இது...
அய்யோ.. கொல்றீங்களே:-))
சிலநேரம் நாமும்...
சிலநேரம் மிருகமும்....
சிலநேரம் இரண்டுமே...
இதுதான் இயற்க்கை அல்லவா..!!!!!
Suresh Kumar said...
உண்மையாவே எனக்கு எதுவுமே புரியல
அதான் வேணும் சுரேஷ்
tamilnadunews said...
சிலநேரம் நாமும் சிலநேரம் மிருகமும்
நன்றி tamilnadunews
நட்புடன் ஜமால் said...
கொன்றும்
கொல்லப்பட்டும் ...
புரிஞ்சிடுச்சா ஜமால் அண்ணா
கதிர் - ஈரோடு said...
ஒன்றை இன்று தின்று
இரண்டும் வாழும்
ஆம் இரண்டும் வாழும்
பிரியமுடன்...வசந்த் said...
ஆஹா ஒண்ணும் புரியமாட்டேங்குதே
அண்ணா ஜமால் அண்ணா
சக்திக்கா உங்க கட்சில சேந்துட்டாங்களா உங்க தக்காளிக்கவிதைக்கே இன்னும் மண்டைய பிச்சுகிட்டு இருக்கேன்..இந்த வரிசையிலே இதுவுமா? போச்சுடா இன்னைக்கு தூக்கம்.......
அய்யோ உன் தூக்கம் கெட்டுவிட்டதா மன்னிச்சுக்கோ பா வசந்த்
kanagu said...
ஓண்ணும் புரியல அக்கா :((((
மனிதனக்குள்ள இருக்குற மிருகத்த பத்தி சொல்றிங்க-னு நினைக்கிறேன் :))
ஆம் கனகு மனிதனுக்குள் இருக்கும் மிருகம் தான்
ஜீவன் said...
//இம்மிருகம் நான் கொல்வேனோ??
இல்லை மிருகம் எனை கொல்லுமோ?//
இருவருக்குமே மரணமில்லை!!
(இது கவிஞர்களுக்கு மட்டும்)
நன்றி ஜீவன் அண்ணா
ஷஃபிக்ஸ் said...
புரியுது...ஆனா புரியல!!
ஆஹா
நன்றி ஷஃபிக்ஸ்
S.A. நவாஸுதீன் said...
ஒன்று நிச்சயம். கொல்லப்படவேண்டும் இல்லையேல் கொல்லும்
ஆம் நவாஸ் அண்ணா
ஜெஸ்வந்தி said...
ஹலோ சக்தி, புதிர் எல்லாம் வேண்டாம். விளக்கம் சொல்லுங்கோ. நேசமித்திரன் கவிதை படிச்சுட்டேனோ என்று எனக்கு சந்தேகம் வந்திடிச்சு.
அவரிடம் தனியாய் பாடம் ஏதும் படிக்கிறீர்களோ? ஹா ஹா ஹா
அப்படி எல்லாம் இல்லை அதிகம் அவர் கவிதைகளை படித்து இப்படி ஒரு கவிதை அவர் அளவு இல்லை
என்றாலும் ஏதோ என்னால் முடிந்தது ஜெஸ்
நன்றி ஜெஸ் தொடர் ஆதரவுக்கு
கபிலன் said...
10 முறை படிச்சிட்டேங்க சக்தி...
என் புத்திக்கு சரியா புரியலிங்க..
கொஞ்சம் விளக்குங்கோ...
மனிதனுக்குள் இருக்கும் உணர்வுகளை பற்றி தான் கபிலன்
gayathri said...
periyavangaluke puriyala
aparam epaadi intha kozanthaikku purium
சரி குழந்தை விளக்கமா மெயிலுகிறேன்
பா.ராஜாராம் said...
ஆஹா...சக்தி,அற்புதம்!
உங்கள் master piece இது
நன்றி ராஜாராம் சார்
உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி
இயற்கை said...
அய்யோ.. கொல்றீங்களே:-))
:)))
நன்றி இயற்கை
கொலை வெறி கவிதைக்கு பின்னூட்டமிட்டதற்கு
seemangani said...
சிலநேரம் நாமும்...
சிலநேரம் மிருகமும்....
சிலநேரம் இரண்டுமே...
இதுதான் இயற்க்கை அல்லவா..!
நன்றி சீமான்
ஏன் இரண்டில் ஒன்று மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள் . மிருகத்தை அப்படியே புரிந்து கொண்டு ஏற்று கொள்ளுங்கள். அதை தவிர வேறு வழி இல்லை.
சக்தி,இந்தக் கருவில் நானும் ஒரு கவிதை சமைத்திருக்கிறேன்.விரவில் பதிவில் இடுவேன்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் மிருகங்கள் சிலசயங்களில் தங்களையறியாமலே வெளிவந்து விடுகிறது.
K from KK said...
ஏன் இரண்டில் ஒன்று மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள் . மிருகத்தை அப்படியே புரிந்து கொண்டு ஏற்று கொள்ளுங்கள். அதை தவிர வேறு வழி இல்லை.
நன்றி K from KK
ஹேமா said...
சக்தி,இந்தக் கருவில் நானும் ஒரு கவிதை சமைத்திருக்கிறேன்.விரவில் பதிவில் இடுவேன்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் மிருகங்கள் சிலசயங்களில் தங்களையறியாமலே வெளிவந்து விடுகிறது.
காத்திருக்கின்றோம் ஹேமா
சக்தி உங்களின் ஆகச்சிறந்த கவிதை இது
அற்புதம்
Post a Comment