
வானம் முழுவதையும் தன் வசப்படுத்த நினைத்த
வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்
சிறையில் அடைத்துவிட்டார்கள்....
ஜந்தும் பத்துமாய் அவள் சேர்த்து வாங்கிய
ஆக்ஸ்போர்டு அகராதி இப்போது
காகிதக்கப்பலாகி அவள் கண்ணீரில் மிதக்கின்றது....
பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த
சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி
அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....
கால் பவுன் தங்கத்தாலும்
சிறு கயிற்றாலும் அவளின்
கல்லூரி கனவுகள் கலைக்கப்பட்டது
கற்பனைகள் சிதறடிக்கப்பட்டது....
இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை....