
அந்த வாகனக்காற்று
அளாவியதில்
தொங்குநிலைஎன் உடல் அசைந்தது
விழிப்புற்றேன்
சோம்பல் முறிய
கொதிக்கும் தார் மணத்தால்
சூழப்பட்டிருந்தேன்
காற்றின் வெக்கை
கை கால் உதைத்தேன் காற்றுவெளியில்
அழத்தொடங்கினேன்
எங்கே அவள் ?
என் உணர்ச்சி புரியாதவளா ?
இல்லையே ?!
என்னுயிரின் வலியையே உணர்பவளாயிற்றே ?!
வருகிறாள் வருகிறாள்
அவளுக்கு இடம் மாற்றப்பட்டேன்
ஊசி முனைத்துவாரவழி
முறிந்த இரத்தத்தை
என்னுள் புகட்டும் ஆயத்தம்
ஆமாம் !
என்னுள் புதைந்த
சுரபி வழி
அவள் உயிர் குடிக்கும் முயற்சியில் நான் !!!!!!!!!
அடிப்பாவி !!!!!!!
உன் வறுமையின் சாரத்தை எல்லாம்
இங்கேயா இறக்கி வைத்திரு க்கிறாய் !!!!!!!!!!!!!!!????????????????????????
சண்டாளி !!!!!!
திரவமே இல்லையேடி
அவளுக்கு எட்டவில்லை
என்னவோ முணுமுணுக்கிறாள் !
"பாவி பயலுவோ இத கூட
கண்ணு வாங்காம "
நான் உயிர் குடிக்கும்
முயற்ச்சியில் தீவிரமாய் இருந்தேன் ...பி.கு : சில கவிதைகள் மனதை விட்டு அகலாது இது நான் மிகவும் ரசித்த கவிதை இந்த வலையுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய என் உடன் பிறவா சகோதரர் பாலாவின் கவிதை.
அவர் வலைத்தளம் கடல் புறா