Monday, May 25, 2009

என் கண்ணீரின் ஓசை


நிலமே உன்னில் அவர் பதித்த
பாதச்சுவடுகளை பத்திரமாய்
ஒளித்துவை இனி அவைகளை
மீண்டும் நான் காணப்போவதேயில்லை

ஹே காற்றே அவரின் கடைசி சுவாசக்காற்றை
எங்கு ஓளித்துவைத்திருக்கின்றாய்
சொல்லிவிட்டு போயேன்

செந்தீயே நீ அவர் தேகம்
தின்றழித்தபோழ்து வலித்ததா
அவரின் வலிகளின் போது
எங்கள் பெயரை உச்சரித்தாரா???

எங்கோ அலைந்து திரிந்து என் பாதம் வருடி செல்லும்
நதியின் சிற்றலையே எங்கே அடித்து செல்கின்றாய்
உன்னில் கரைத்துவிட்ட அவர் அங்கங்களை

ஆகாயமே உன்னிடம் தான் இருக்கிறாரா??
பத்திரமாய் பார்த்துகொள் அவரை
நான் அங்கு வருகின்ற நாள் வரை

இருக்கின்றபோது தெரிவதில்லை
இழந்தபின் இழப்பின் வலி
தெரிந்தும்பயனில்லை

பஞ்சபூதங்களில் கலந்துவிட்டீரா
இவை கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்கின்றனர்

என்ன ஆறுதல் யார் கூறினாலும்
இதயத்தின் இடுக்குகளில்
இன்னமும் இருக்கின்றது வலி
எனக்குள் கண்ணீர் ஊறும் ஓசை
உங்கள் காதுகளில் கேட்கின்றதா???

பி.கு: சென்ற வாரம் எங்களை
விட்டு பிரிந்த மாமானாருக்கு
என் கண்ணீர் அஞ்சலி

26 comments:

shakthikumar said...

எங்கோ அலைந்து திரிந்து என் பாதம் வருடி செல்லும்
நதியின் சிற்றலையே எங்கே அடித்து செல்கின்றாய்
உன்னில் கரைத்துவிட்ட அவர் அங்கங்களை
arputhamaana varigal akkaa unmaiyaana valigalin velippaadu

SUBBU said...

கண்ணீர் அஞ்சலி :((((((((

shakthikumar said...

பஞ்சபூதங்களில் கலந்துவிட்டீரா
இவை கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்கின்றனர்
unnmaithaan meikkul adaipattirukkum panja poothamum meyyai karai serkkum oru naal maatra mudiyaathu thetra vaarthaigal illai onne onnu sollurean nammai pidichavangalukku naama azharathu pidikkaathu ok

நட்புடன் ஜமால் said...

உங்களுக்கும்

உங்கள் குடும்பத்தினருக்கும்

சாந்தியும் சமாதானமும் வேண்டி

பிரார்த்திக்கின்றேன்

கபிலன் said...

"செந்தீயே நீ அவர் தேகம்
தின்றழித்தபோழ்து வலித்ததா
அவரின் வலிகளின் போது
எங்கள் பெயரை உச்சரித்தாரா???"


"இருக்கின்றபோது தெரிவதில்லை
இழந்தபின் இழப்பின் வலி
தெரிந்தும்பயனில்லை"

கண் கலங்க வைத்தது உங்கள் கவிதை!
உணர்ச்சியின் வெளிப்பாடு அருமை!

புதியவன் said...

//நட்புடன் ஜமால் said...
உங்களுக்கும்

உங்கள் குடும்பத்தினருக்கும்

சாந்தியும் சமாதானமும் வேண்டி

பிரார்த்திக்கின்றேன்//

எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை
எனவே ஜமால் சொன்னதையே நானும் சொல்லிக்கொள்கிறேன்...

S.A. நவாஸுதீன் said...

சக்தி நீங்கள் வைத்திருந்த அன்பும் பாசமும் வலியுள்ள வரிகளாய் மாறி இருக்கிறது. கவலை வேண்டாம்.

S.A. நவாஸுதீன் said...

உங்களின் வலியை உணர்ந்ததால் வரிகளை என்னால் அதிகம் விமர்சிக்க முடியவில்லை

Anonymous said...

வருந்துகிறோம் உங்கள் அனைத்து நண்பர்களும்.....அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம்.....

rose said...

நட்புடன் ஜமால் said...
உங்களுக்கும்

உங்கள் குடும்பத்தினருக்கும்

சாந்தியும் சமாதானமும் வேண்டி

பிரார்த்திக்கின்றேன்

\\
enna solvathenru theriyavillai sakthi nanum anna sonnathaye solkiren

வினோத் கெளதம் said...

:(

தமிழ் said...

அவரின் ஆன்மா சாந்தி அடையவும்
தங்களுக்கு மன வலிமையை கிடைக்கவும்

எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

Revathyrkrishnan said...

உங்கள் பாசம் நெகிழ வைக்கிறது சக்தி:(((

குமரை நிலாவன் said...

//நட்புடன் ஜமால் said...
உங்களுக்கும்

உங்கள் குடும்பத்தினருக்கும்

சாந்தியும் சமாதானமும் வேண்டி

பிரார்த்திக்கின்றேன்//

எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை
எனவே ஜமால் சொன்னதையே நானும் சொல்லிக்கொள்கிறேன்...

gayathri said...

புதியவன் said...
//நட்புடன் ஜமால் said...
உங்களுக்கும்

உங்கள் குடும்பத்தினருக்கும்

சாந்தியும் சமாதானமும் வேண்டி

பிரார்த்திக்கின்றேன்//

எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை
எனவே ஜமால் சொன்னதையே நானும் சொல்லிக்கொள்கிறேன்...


NAANUM DA

வியா (Viyaa) said...

நட்புடன் ஜமால் said...
உங்களுக்கும்

உங்கள் குடும்பத்தினருக்கும்

சாந்தியும் சமாதானமும் வேண்டி

பிரார்த்திக்கின்றேன்

enakkum enna solvathendru teriyavillai..
jamal sonnathaiye samarpikiren :(

அ.மு.செய்யது said...

//இருக்கின்றபோது தெரிவதில்லை
இழந்தபின் இழப்பின் வலி
தெரிந்தும்பயனில்லை//

இழப்பின் வலியை வார்த்தைகளால் வார்த்தெடுத்திருக்கிறீர்கள்.

உங்கள் மாமனாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியும் உரித்தாக்குகிறோம்.

ஆதவா said...

கண்ணீர் அஞ்சலி!!!!

கவிதையை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழியென்று காயப்படுத்த விரும்பவில்லை!!!

அப்துல்மாலிக் said...

சக்தி... கண்கள் கலங்கின‌

எனக்கும் தெரியும் இந்த வலிகள், நானும் அனுபவித்திருக்கிறேன் கடந்த வருடம்

அவரின் ஆத்மா சாந்தியடை இறைவனிடம் பிராத்திக்கிறேன்

கலையரசன் said...

வார்த்தையில்லை, சமாதானப்படுத்த..
நானும் அழுகிறேன்!

நசரேயன் said...
This comment has been removed by the author.
நசரேயன் said...
This comment has been removed by the author.
நசரேயன் said...

மன்னிக்கவும் நான் பின் குறிப்பை கவனிக்க வில்லை. உங்கள் மாமாவின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்

ஆளவந்தான் said...

கண்ணீர் அஞ்சலி :(

"உழவன்" "Uzhavan" said...

வரிகளில் பிரிவின் வலியை உணரமுடிகிறது. அவரின் ஆன்மாவுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலியும்...

ச. ராமானுசம் said...

ஒவ்வொரு உறவின் மரணமும்
ஒரு வெற்று இடத்தை வாழ்க்கையில் உண்டாக்குகிறது
அதில் தத்துவமும் தன்னை நிரப்பி கொள்கிறது.