Sunday, May 17, 2009

அப்பா எனும் அஸ்திவாரம் ....



அப்பா......
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

சமூகத்து சொல்லம்புகள்
எனை காயப்படுத்தும்போது
என்னை கேடயமாய் காத்தீர்

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!





வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்........

அம்மாவின் ஆன்மிக கருத்துக்களும்
உங்களின் கம்யூனிசமும் பெரியாரிசமும்
என் அறிவுக்கண்னை திறந்தது எனலாம்
புலம் பெயரும் வரை.......
மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்

இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை..

இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...

100 comments:

Anonymous said...

அப்பா........
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்\\


எனக்கும் தான்

Anonymous said...

\\தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
\\

மிகை என்றாலும்

உங்கள் அன்பின் ஆழம் விளங்குகிறது.

gayathri said...

hey photo nalla iruku

Anonymous said...

\\நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது
\\

மிகவும் இரசித்தேன் ...

Anonymous said...

\\இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை..
\\

மிக அருமை ...

gayathri said...

என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என

mmm nalla iruku da

Sanjai Gandhi said...

ச்சூப்பர்... :)

//தடுமாறும் போது தோள் குடுத்து//
இதுக்கு எதோ சொல்லனும் போல இருக்கு. ஆனா உணர்ச்சிப் பூர்வமான் இடத்துல கும்மி அடிக்க விரும்பலை. தப்பிச்சிட்டிங்க. :)

தமிழ் said...

/காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!


வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்......../

அருமை

Anonymous said...

உயிர் கொடுத்த தாய் உயர்வு கொடுத்த தந்தை....இவர்களுக்கு நீ மகளாய்...இந்த கவிதை கடமை அல்ல உறவின் வெளிப்பாடு....உன்னை ஏற்றி விட்டு போற்றி விட்ட தந்தைக்கு பரிசு....வளர்க உங்கள் உறவு வாழட்டும் உங்கள் நேசம் வாழ்த்துக்கள்....

மண்குதிரை said...

நல்ல உணர்வு சக்தி

S.A. நவாஸுதீன் said...

அப்பா......
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

பெரும்பாலும் எல்லோருக்கும், அதோடு முதல் ஆசானும் கூட

S.A. நவாஸுதீன் said...

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்

தாய்மைக்கு நிகர் இல்லை என்றாலும் அது தந்தைக்கும் பொருந்தும்

S.A. நவாஸுதீன் said...

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!

தந்தையின் மேல் நீங்கள் கொண்ட அளவில்லாத பாசம் தெரிகிறது. கொடுத்துவைத்தவர் அவரும்!

S.A. நவாஸுதீன் said...

காயுவின் - அம்மா
சக்தியின் - அப்பா
இது பெற்றோர்கள் வாரம்!!!

Revathyrkrishnan said...

அப்பா என் முதல் தோழன்... மிக நல்லா இருந்தது... உணர்ந்து ரசித்தேன்

ஆதவா said...



அருமைங்க சக்தி.. குறைந்த அளவே இருக்கும் அப்பா கவிதைகளுல் உங்களுடையதும் அருமையாகவே இருக்கிறது. அப்பா நம் உயர்வுக்கு மறைமுக டானிக்... பலருக்கு அது தெரிவதில்லை. முக்கியமாக பசங்களுக்கு!!!

நீங்கள் அப்பாவைப் பற்றி மிளகுக் கவிதைகள் எழுதியதுண்டா?? கொஞ்சம் எழுதிப் பாருங்கள். மாற்றம் உணர்வீர்கள்!!!

(மிளகு - காரம், ஆனால் உடலுக்கு நலம்...)

அப்துல்மாலிக் said...

இன்று பெற்றோர்வாரமா அல்லது வரமா

ரொம்ப அருமையா உணர்ந்து எழுதிருக்கீங்க சக்தி

அப்துல்மாலிக் said...

//என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
/
முழு முதல் உண்மையே

அப்துல்மாலிக் said...

//தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
//

இந்த வரிகள் அருமைப்பா சிந்திக்கவைத்தது

அப்துல்மாலிக் said...

//காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது
//

இது அப்பாக்களாலேமட்டும் முடியும்

அப்துல்மாலிக் said...

//இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை..
/

ரசித்தேன் இந்த வரியை

அப்பாக்களை பற்றி கொஞ்சம் குறைவாகவே வரும் வரிகளுக்கு மத்தியில் இது ஒரு புது டானிக்

உங்களுக்கிடையேயான அன்பு நன்கு வளர என் வாழ்த்துக்கள் சக்தி

http://buafsar.blogspot.com/2009/01/blog-post_14.html

இது என் அப்பாவைப்பற்றி எழுதிய பதிவு

Bala said...

Vazhga... Ni Pulamai... Thamaikku inaiyai.. thandhaiyin pasam...

rose said...

அப்பா......
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்
\\
தாயின் மறு உருவம் தந்தை

rose said...

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
\\
ஒருவேளை தந்தையின் பெயர்தானோ தன்னம்பிக்கை?

rose said...

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!
\\
உண்மையான வார்த்தை

rose said...

மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்
\\
சில நாட்களுக்கு மட்டுமே

rose said...

இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...
\\
ரசித்த வரிகள் சக்தி

S.A. நவாஸுதீன் said...

தாய்பாலுக்கு நிகராய்

சக்தி நீங்கள் உங்கள் தந்தையின் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பு வெளிப்பட்டாலும் நான் உங்கள் அந்த வரிகளில் முரண்படுகிறேன்.

தாய்க்கும் தாய்மைக்கும் நிகராக எதுவும் இல்லை. அதன் காரணத்தை விளக்கமாக சொல்வதை விட நான் என்றோ படித்த கவிதை அழுத்தமாக விளக்க முடியும்.

வாந்தி முதலாய்
வலியால் துடித்து
முனகி…
முக்கி…
மலமும் கழிந்து,
ஜோனி கிழிந்து
குருதி வழிந்து…

இவ்வளவு நிகழ்வும்
நடந்து முடிந்தது.

தாதி ஒருத்தி
சேதி சொன்னாள்
„சுகப் பிரசவம்“.

நானும் எனது பங்களிப்புக்காய்,
இனிப்புப் பெட்டியுடன்
நண்பனைத் தேடி….
கேட்டான்
சொன்னேன் „சுகப்பிரசவம்“

நண்பனும் சொன்னான்
„எனது ஐந்து குழந்தைகளும்
சுகப்பிரசவம் தான்“.

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அப்பா........
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்\\


எனக்கும் தான்

வாங்க ஜமால் அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
\\

மிகை என்றாலும்

உங்கள் அன்பின் ஆழம் விளங்குகிறது

நன்றி ஜமால் அண்ணா புரிந்துகொண்டமைக்கு

Anonymous said...

நவாஸ் என் பதிலை பாறேன் ...

sakthi said...

gayathri said...

hey photo nalla iruku

நன்றி காயத்ரி

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது
\\

மிகவும் இரசித்தேன்

நீண்ட நாட்களுக்கு பின் முதல் பின்னூட்டத்திற்கு

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை..
\\

மிக அருமை ...

ரசித்தமைக்கு நன்றி

sakthi said...

gayathri said...

என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என

mmm nalla iruku da

நன்றி காயத்ரி

sakthi said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ச்சூப்பர்... :)

//தடுமாறும் போது தோள் குடுத்து//
இதுக்கு எதோ சொல்லனும் போல இருக்கு. ஆனா உணர்ச்சிப் பூர்வமான் இடத்துல கும்மி அடிக்க விரும்பலை. தப்பிச்சிட்டிங்க. :)

தப்பிச்சவரை சரி
நன்றி சஞ்சய அண்ணா

sakthi said...

திகழ்மிளிர் said...

/காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!


வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்......../

அருமை

நன்றி திகழ்மிளிர்

sakthi said...

தமிழரசி said...

உயிர் கொடுத்த தாய் உயர்வு கொடுத்த தந்தை....இவர்களுக்கு நீ மகளாய்...இந்த கவிதை கடமை அல்ல உறவின் வெளிப்பாடு....உன்னை ஏற்றி விட்டு போற்றி விட்ட தந்தைக்கு பரிசு....வளர்க உங்கள் உறவு வாழட்டும் உங்கள் நேசம் வாழ்த்துக்கள்....

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழரசி

sakthi said...

மண்குதிரை said...

நல்ல உணர்வு சக்தி

நன்றி மண்குதிரை

புதியவன் said...

//தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்//

அருமையான வரிகள் சக்தி...

sakthi said...

@ S.A. நவாஸுதீன் said...

அப்பா......
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

பெரும்பாலும் எல்லோருக்கும், அதோடு முதல் ஆசானும் கூட

ஆம் நவாஸ் அண்ணா

புதியவன் said...

//காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது//

எல்லா அப்பாக்களாலும் முடியாதது...

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்

தாய்மைக்கு நிகர் இல்லை என்றாலும் அது தந்தைக்கும் பொருந்தும்

நன்றி நவாஸ் அண்ணா

புதியவன் said...

//இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என.//

நல்ல வரம்...

ஒரு உன்னதமான தந்தை உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்...

மிகவும் நெகிழ்வான கவிதை சக்தி...

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!

தந்தையின் மேல் நீங்கள் கொண்ட அளவில்லாத பாசம் தெரிகிறது. கொடுத்துவைத்தவர் அவரும்!

ரசித்தமைக்கு நன்றி

sakthi said...

புதியவன் said...

//காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது//

எல்லா அப்பாக்களாலும் முடியாதது...

கண்டிப்பா புதியவன் அண்ணா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

காயுவின் - அம்மா
சக்தியின் - அப்பா
இது பெற்றோர்கள் வாரம்!!!

விடுங்க சோகத்திலிருந்து மாறிட்டோம் தானே

sakthi said...

reena said...

அப்பா என் முதல் தோழன்... மிக நல்லா இருந்தது... உணர்ந்து ரசித்தேன்

நன்றி ரீனா

sakthi said...

ஆதவா said...



அருமைங்க சக்தி.. குறைந்த அளவே இருக்கும் அப்பா கவிதைகளுல் உங்களுடையதும் அருமையாகவே இருக்கிறது. அப்பா நம் உயர்வுக்கு மறைமுக டானிக்... பலருக்கு அது தெரிவதில்லை. முக்கியமாக பசங்களுக்கு!!!

நீங்கள் அப்பாவைப் பற்றி மிளகுக் கவிதைகள் எழுதியதுண்டா?? கொஞ்சம் எழுதிப் பாருங்கள். மாற்றம் உணர்வீர்கள்!!!

(மிளகு - காரம், ஆனால் உடலுக்கு நலம்...)

நன்றி ஆதவா

முயற்சி பண்றேன் தம்பி

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

இன்று பெற்றோர்வாரமா அல்லது வரமா

ரொம்ப அருமையா உணர்ந்து எழுதிருக்கீங்க சக்தி

நன்றி அபு அண்ணா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
/
முழு முதல் உண்மையே

ஆம் அபு அண்ணா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
//

இந்த வரிகள் அருமைப்பா சிந்திக்கவைத்தது

ரசித்தமைக்கு நன்றி அபு அண்ணா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது
//

இது அப்பாக்களாலேமட்டும் முடியும்

கண்டிப்பா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை..
/

ரசித்தேன் இந்த வரியை

அப்பாக்களை பற்றி கொஞ்சம் குறைவாகவே வரும் வரிகளுக்கு மத்தியில் இது ஒரு புது டானிக்

உங்களுக்கிடையேயான அன்பு நன்கு வளர என் வாழ்த்துக்கள் சக்தி

http://buafsar.blogspot.com/2009/01/blog-post_14.html

இது என் அப்பாவைப்பற்றி எழுதிய பதிவு

நன்றி அபு அண்ணா

படித்து பார்தேன் நீங்க காவியமே படைச்சு இருக்கீங்க
யூ ஆர் ரியலி கிரேட்

sakthi said...

Bala said...

Vazhga... Ni Pulamai... Thamaikku inaiyai.. thandhaiyin pasam

நன்றி பாலா

sakthi said...

rose said...

அப்பா......
என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்
தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்
\\
தாயின் மறு உருவம் தந்தை

ஆம் ரோஸ்

sakthi said...

rose said...

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
\\
ஒருவேளை தந்தையின் பெயர்தானோ தன்னம்பிக்கை?
சரி தான் ரோஸ்

sakthi said...

rose said...

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!
\\
உண்மையான வார்த்தை

நன்றி மா

sakthi said...

rose said...

மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்
\\
சில நாட்களுக்கு மட்டுமே

ஆம் ரோஸ்

sakthi said...

rose said...

இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...
\\
ரசித்த வரிகள் சக்தி

ரொம்ப ரசிச்சிருப்பீங்க போல நன்றி ரோஸ்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

தாய்பாலுக்கு நிகராய்

சக்தி நீங்கள் உங்கள் தந்தையின் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பு வெளிப்பட்டாலும் நான் உங்கள் அந்த வரிகளில் முரண்படுகிறேன்.

நவாஸ் அண்ணா இது என் கருத்து அவ்வள்வே மாற்று கருத்திற்கு நன்றி

sakthi said...

புதியவன் said...

//தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்//

அருமையான வரிகள் சக்தி...

நன்றி புதியவன் அண்ணா

sakthi said...

புதியவன் said...

//இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என.//

நல்ல வரம்...

ஒரு உன்னதமான தந்தை உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்...

மிகவும் நெகிழ்வான கவிதை சக்தி...

ரசித்தமைக்கு நன்றி புதியவன் அண்ணா

SUBBU said...

வாவ் சூப்பரா இருக்கு :)))))))))))

sakthi said...

SUBBU said...

வாவ் சூப்பரா இருக்கு :)))))))))))


நன்றி சுப்பு

SUBBU said...
This comment has been removed by a blog administrator.
அப்துல்மாலிக் said...

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்?" எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் "உம்முடைய தாய்" என்று கூறினார்கள். "அதற்கடுத்து யார்?" என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் "உம்முடைய தாய்" என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக "அதற்கடுத்து யார்?" என கேட்ட போது இறைதூதர் அவர்கள் "உம்முடைய தாய்" என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் "அதற்கடுத்து யார்?" எனக் கேட்ட போது "உம்முடைய தந்தை" என்றும் படிப்படியாக "நெருங்கிய உறவினர்களும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

S.A. நவாஸுதீன் said...

தந்தைக்கு செய்யவேண்டிய கடமைகளைப் பற்றி இஸ்லாத்திலும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணதிற்கு,

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன" வென்று கேட்டார். அதற்கு நபி "அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள்" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி

குமரை நிலாவன் said...

//இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகனாக வேண்டும் என.//


இந்த வரமே நானும் கேட்பேன்

ஆளவந்தான் said...

தந்தையின் சிறப்பை சொல்றபடியா சொற்ப படங்களும் ( வாரணம் ஆயிரம், தேவர் மகன், தவமாய் தவமிருந்து, வசீகரா) க்விதையும் தான் இருக்கு..

கவிதை அருமை சக்தி :)

ஆளவந்தான் said...

வந்ததுக்கு ஒரு ரவுண்டு :)

ப்ரியமுடன் வசந்த் said...

//வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்........//


அதனால்தானோ என்னவோ உங்கள் பெயரும் சக்தியோ

அசத்துங்க சக்தி.....

sakthi said...

குமரை நிலாவன் said...

//இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகனாக வேண்டும் என.//


இந்த வரமே நானும் கேட்பேன்

நன்றி குமரை நிலாவன்

sakthi said...

ஆளவந்தான் said...

தந்தையின் சிறப்பை சொல்றபடியா சொற்ப படங்களும் ( வாரணம் ஆயிரம், தேவர் மகன், தவமாய் தவமிருந்து, வசீகரா) க்விதையும் தான் இருக்கு..

கவிதை அருமை சக்தி :)

நன்றி ஆளவந்தார்

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

//வாழ்கையின் எனை நோக்கிவரும்
எல்லா இன்னலும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என தைரியத்தில்........//


அதனால்தானோ என்னவோ உங்கள் பெயரும் சக்தியோ

அசத்துங்க சக்தி.....

ஆம் வசந்த்

நன்றி வசந்த் தங்கள் வருகைக்கு

sakthi said...

"அதற்கடுத்து யார்?" எனக் கேட்ட போது "உம்முடைய தந்தை" என்றும் படிப்படியாக "நெருங்கிய உறவினர்களும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

நன்றி அபு அண்ணா தங்கள் நெடிய விளக்கத்துக்கு

sakthi said...

தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி

நன்றி நவாஸ் அண்ணா

vasu balaji said...

அதிசயமாய் அப்பாவுக்கும் ஓர் கவிதை. அழகான உணர்வுகள்.

நசரேயன் said...

நல்லா இருக்கு

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
காயுவின் - அம்மா
சக்தியின் - அப்பா
இது பெற்றோர்கள் வாரம்!!!


sariya sonnnega anna

सुREஷ் कुMAர் said...

கவிதையை கண்டாலே காத தூரம் ஓடும் எனக்கே புரியும்படி எளியநடை மிக அருமை..
//
அப்பா......
என் முதல் கதாநாயகன்
//

எனக்கும் தான்..

//
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...
//

ரசித்தேன் (மேலே குறிப்பிட்ட வரிகளை மட்டுமல்ல.. முழு படைப்பையும்)..
வாழ்த்துக்கள்..

thamizhparavai said...

உணர்வை எழுத்தில் கொட்டியுள்ளீர்கள்...
//எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!//
கொடுத்து வைத்தவர் நீங்கள்...

படங்கள் பொருத்தம்...

வினோத் கெளதம் said...

Sakthi,

I lost my blog..

tis is my new1..

htpp://julykaatril.blogspot.com

ப்ரியமுடன் வசந்த் said...

தொடர் பதிவுக்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள் வரவும் சக்தி

கபிலன் said...

"தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்"

நல்லா இருக்குங்க

sakthi said...

பாலா... said...

அதிசயமாய் அப்பாவுக்கும் ஓர் கவிதை. அழகான உணர்வுகள்

nandri bala

sakthi said...

நசரேயன் said...

நல்லா இருக்கு

nandri nasreyan anna

sakthi said...

சுரேஷ் குமார் said...

கவிதையை கண்டாலே காத தூரம் ஓடும் எனக்கே புரியும்படி எளியநடை மிக அருமை..
//
அப்பா......
என் முதல் கதாநாயகன்
//

எனக்கும் தான்..

//
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...
//

ரசித்தேன் (மேலே குறிப்பிட்ட வரிகளை மட்டுமல்ல.. முழு படைப்பையும்)..
வாழ்த்துக்கள்..

nandri suresh kumar

sakthi said...

தமிழ்ப்பறவை said...

உணர்வை எழுத்தில் கொட்டியுள்ளீர்கள்...
//எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!//
கொடுத்து வைத்தவர் நீங்கள்...

படங்கள் பொருத்தம்...

nandri tamilparavai

sakthi said...

vinoth gowtham said...

Sakthi,

I lost my blog..

tis is my new1..

htpp://julykaatril.blogspot.com

ok vinoth

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

தொடர் பதிவுக்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள் வரவும் சக்தி

nandri vasanth

sakthi said...

கபிலன் said...

"தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என் சிந்தனை விரிந்தது உங்களால்"

நல்லா இருக்குங்க

nandri kapilan

kanagu said...

arumayana kavidhai :)
super ah ezhuthi irukeenga :)

ungalathu 50-vathu padhivirku vazhthukkal :)

மேவி... said...

super naina

sakthi said...

kanagu said...

arumayana kavidhai :)
super ah ezhuthi irukeenga :)

ungalathu 50-vathu padhivirku vazhthukkal :)

nandri kanagu

sakthi said...

MayVee said...

super naina

nandri mayvee

uma said...

இன்று கர்லானும் ட்யுராவிளக்சும்
எனக்கு உங்கள் அருகில் உறங்கிய
நிறைவை தருவதில்லை..

rasithen ma

uma said...

இறைமை என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்
மறுமையில் எனக்கு நம்பிக்கை இல்லை
இறையே அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என...

arumai sakthi

uma said...

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம்
தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்ககூடும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!


ur really lucky

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் சக்தி. நான் இப்பதான் பார்த்தேன்

http://youthful.vikatan.com/youth/sakthipoem26052009.asp