மனம் எனும் மாயை அதன்
இருப்பிலும் இல்லாமையிலும்
காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!!
நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே
நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!!
தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில்
கிளைக்கும் அதன் தீனமான குரலில் தெரிகின்றது
பொங்கிகொண்டும் பெருகிக்கொண்டும்
இருக்கும் அதன் வேட்கைகள்!!!
நிம்மதியற்ற பயணங்களும் துரத்தல்களும்
மனதின் மென்மைகளைஉருமாற்றியதால்
மழை நாட்களை போல்
மனமும் புகையோடி போய் இருக்கின்றது!!!!
பல சமயங்களில்
வியூக சூட்சமம் அமைத்தும்
சில சமயங்களில் வெடவெடப்பும்
மெலிவும் கொண்டு மடிந்து சுருள்கிறது
ஆனாலும் மீண்டும் உயிர்த்து நிற்கிறது!!!!
33 comments:
மனம் எனும் மாயை அதன்
இருப்பிலும் இல்லாமையிலும்
காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!!
அது வேலையே அதுதானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல கவிதையோடு வந்த தங்கை சக்திக்கு வாழ்த்துக்கள்
நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே
நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!!
சூப்பர்
***********************************
பல சமயங்களில்
வியூக சூட்சமம் அமைத்தும்
சில சமயங்களில் வெடவெடப்பும்
மெலிவும் கொண்டு மடிந்து சுருள்கிறது
ஆனாலும் மீண்டும் உயிர்த்து நிற்கிறது!!!!
கவிதை அருமையா வந்திருக்கு சக்தி.
// நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே
நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!! //
அற்புதமான வரிகள்..வார்த்தைச் செறிவு..
நரம்புகளை அவிழ்'க்க'ச் செய்கின்றன என்று தானே வர வேண்டும்.
Passive voice ?
//பல சமயங்களில்
வியூக சூட்சமம் அமைத்தும்
சில சமயங்களில் வெடவெடப்பும்
மெலிவும் கொண்டு மடிந்து சுருள்கிறது
ஆனாலும் மீண்டும் உயிர்த்து நிற்கிறது!!!!//
குவாலிட்டி !!!
இத்தன நாள் எங்க போயிருந்தீங்க ??
azhamaana karuthu arputhamaana varigal ethai merkol kaattuvathu
muzhuvathume arputhamaana varigal
superbbbbbbbbb akkaa
எங்க போயிட்டீங்க இவ்வளவு நாளா?
களத்தில் இறங்கியதுமே பின்றீங்க சக்தி!!
பேக் டூ பெவிலியன்!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கியளே யக்கோவ்
(பயமா இருக்கே நாலாம் கொஞ்சம் யோசிக்கணும் போல இருக்கே)
Welcome bac..:)
welcome back.. enga poitingaa aalaye kaanom,,, tamil pathivulagatthula kavithai pancham vandhuducchi...-:)
//சில சமயங்களில் வெடவெடப்பும்
மெலிவும் கொண்டு மடிந்து சுருள்கிறது
ஆனாலும் மீண்டும் உயிர்த்து நிற்கிறது!!!//
என்ன சக்தி இது? காணாமல் போய் எங்களை வெட வெடுக்கப் பண்ணி விட்டு, இப்போ சாவகாசமாக உயிர்த்தெழுந்து வந்திருக்கிறிர்கள். வாழ்த்துக்கள் தோழி.
கவிதை நல்லாயிருக்கு சக்தி!!என் ப்ளாக்கை பார்க்கவும்.உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்.ஏற்கவும்.
யக்கோவ்...நலமா...
உங்களை இங்கு காண்பதும் மாயையா?
அதுதான் கவிதையா வந்துருக்கா?
நல்லா வந்துருக்கு......
கவிதை அருமை!
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க...?
வணக்கம் சக்தி,... வழக்கம் போல அழகு...
மீட்னும் கவிதை எழுதியதில் மிக்க மகிழ்ச்சி . அருமையான வரிகள் எல்லாம் மாயையே
//மழை நாட்களை போல்
மனமும் புகையோடி //
மிக அற்புதமான கவிதையோடு வந்திருக்கிறீர்கள் . இடை வெளியின் காரணம் புரிந்தாலும் தோட்டத்தில் ஒரு தொட்டிச் செடி இடம் மாறி விட்டது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை சகோதரி
உங்கள் கவிதைகளிலேயே இது தான் மிகப் பிடித்தது என்று சொல்வேன் . அடுத்த கவிதை இதை பிடிக்காமல் செய்ய வரட்டும் சீக்கிரம்
:)
நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே
நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!!]]
அருமை.
அருமையான கவிதை சக்தி.
நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டதே!! தொடர்ந்து எழுதுங்கள்!!
நீண்ட நாட்களுக்குபிறகு அருமையான கவிதை
Welcome Back
தாங்களின் புண்ணியம் கிடைக்கப்பெறாமல் இந்த வலைதளங்கள் காய்ந்து கிடக்கிறது
தொடருங்கள்
நல்ல கவிதைங்க அக்கா.. :)
ஒ.. அப்படியா
நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!
நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!
nalla iruku da kavithai rompa naal kalichi vanthu iurka
விருது வாங்க, வாங்க அக்கா,
http://enadhu-ularalgal.blogspot.com/2009/10/blog-post_15.html
உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html
வாங்க அம்மணி! நலமா? கவிதை ஜூப்பரோ ஜூப்பர்:-))
மிக மிக அருமையான வரிகள்..
மனதை பற்றி நிறைய கவிதைகள்
படித்தாலும்...இதில் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கும்
வரிகளும், வலிகளும்.. உணர்ச்சிகளும் முற்றிலும் புதிதானவை....
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
என் மனம்விட்ட மாயைதான்
இந்த வலையத்துக்குள் நான்...
நன்றாக இருக்கிறது...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment