Tuesday, August 18, 2009

அக்னி(அன்பு) மழை....


இன்று அழகிய நந்தவனமாய் காட்சியளிக்கும்
இதே வையம் தான் அவ்வப்போது நடுங்கி
பல்லாயிரக்கணக்கான உயிர்களை
பழிவாங்கியது

அமைதியாய் ஆர்ப்பரிக்கும் இந்த ஆழிதான்
அன்று பொங்கி பிராவாகித்து
பலரை கொன்று குவித்தது

நீல நிறத்தில் ரம்யமாய் மிளிரும் இவ்வானம்தான்
சில நேரங்களில் கனமழை பொழிந்து
எத்தனையோ பேரை காவுகொண்டது

தென்றலாய் என் வாசலில் நிற்கும் குளிர்காற்று
தான் ஊழியாய் அன்று ஊரை சூறையாடியது
ஆனால் இவை எதையும்
என்னால் வெறுக்க முடிவதில்லை

அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்.......

44 comments:

S.A. நவாஸுதீன் said...

போட்டோவிற்காக கவிதையா கவிதைக்காக போட்டோவா - இரண்டிலுமே அழகும் இருக்கு, அக்னியும் இருக்கு

நட்புடன் ஜமால் said...

போட்டோ செம சூப்பருங்க ...

நட்புடன் ஜமால் said...

அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்.......]]

கடைசி பத்தி பஞ்ச் ...

rose said...

photo nice sakthi

rose said...

அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்
\\
puriyalama

ஈரோடு கதிர் said...

//ஆனால் இவை எதையும்
என்னால் வெறுக்க முடிவதில்லை//

இயற்கையை
செயற்கையாய்
வெறுக்க முடியாதே

நேசமித்ரன் said...

தீ பறக்குது
கடைசி பத்தி அழகு

கவிக்கிழவன் said...

வாழ்த்துக்கள்.
இலங்கையில் இருந்து யாதவன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

elutthum nandru photovum nandru...

சீமான்கனி said...

படம் பார்த்து கவிதையா...???
என்ன ஒரு ஒற்றுமை
படத்திற்கும் கவிதைக்கும் அருமை....

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

போட்டோவிற்காக கவிதையா கவிதைக்காக போட்டோவா - இரண்டிலுமே அழகும் இருக்கு, அக்னியும் இருக்கு

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

போட்டோ செம சூப்பருங்க

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்.......]]

கடைசி பத்தி பஞ்ச் ...

அந்த ஒரு வரி தான் கொஞ்சம் யோசித்து எழுதியது

sakthi said...

rose said...

அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்
\\
puriyalama

மெயில் அனுப்பறேன் ரோஸ்

sakthi said...

கதிர் - ஈரோடு said...

//ஆனால் இவை எதையும்
என்னால் வெறுக்க முடிவதில்லை//

இயற்கையை
செயற்கையாய்
வெறுக்க முடியாதே

ஆம் கதிர்

நன்றி தொடர்ந்து ஆதரவு தருவதற்கு

sakthi said...

நேசமித்ரன் said...

தீ பறக்குது
கடைசி பத்தி அழகு

நன்றி நேசமித்ரரே

sakthi said...

கவிக்கிழவன் said...

வாழ்த்துக்கள்.
இலங்கையில் இருந்து யாதவன்

நன்றி யாதவன்

sakthi said...

[பி]-[த்]-[த]-[ன்] said...

elutthum nandru photovum nandru...

நன்றி பித்தானந்தா

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு

படமும் கவிதையும்...

sakthi said...

seemangani said...

படம் பார்த்து கவிதையா...???
என்ன ஒரு ஒற்றுமை
படத்திற்கும் கவிதைக்கும் அருமை....

படத்திற்கு எழுதிய கவிதை தான் இது சீமான்

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

பிரியமுடன்...வசந்த் said...

நல்லாயிருக்கு

படமும் கவிதையும்.

நன்றி வசந்த்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை அழகாக இருக்கிறது. கடைசியில் வரி முடியாமல் தொக்கி நிற்பது மிக அழகு.
பாராட்டுக்கள் சக்தி.

அப்துல்மாலிக் said...

ம்ம் பஞ்சபூதத்தையும் சாடுறீங்கோ ஆனால் அதையும் ரசிக்கிறீங்கோ அதே வகையிலே உங்க அக்னியாய் எறிந்த அவரையும் நாசூக்காய் சொன்னவிதம் அருமை

தேவன் மாயம் said...

அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்..//

கடைசியில் தாக்கீட்டீங்களே!!

தமிழ் said...

அருமையாக இருக்கிறது

SUFFIX said...

கடைசியில் ஆழியாய் தாக்கிட்டீங்க!!நல்லா இருக்கு.

சப்ராஸ் அபூ பக்கர் said...

////அமைதியாய் ஆர்ப்பரிக்கும் இந்த ஆழிதான்
அன்று பொங்கி பிராவாகித்து
பலரை கொன்று குவித்தது////

சில நிமிடங்கள் சிந்தக்க வைத்தது இந்த வரிகள்....

ஆனால் கடைசி வரி உங்களுக்கும் இப்படியா என வியக்க வைத்தது.... (லொள்.....)

வாழ்த்துக்கள்....

SUBBU said...

அக்னி மழை பொழிகிறது வார்த்தைகளில்!!!

அ.மு.செய்யது said...

கவிதை‍ பொருள் வார்த்தை பிரயோகம் அனைத்தும் அருமை.

இருந்தாலும் நீங்களே எல்லாவற்றையும் தெளிவாக,விளக்கமாக உரைநடை போல் அமைத்து எழுதிவிட்டீர்களே!!

கொஞ்சம் வாசகர்களையும் யோசிக்க வைங்களேன்.

ஆ.ஞானசேகரன் said...

அருமை, அழகு...

Vidhoosh said...

///போட்டோ செம சூப்பருங்க ...///
repeat.

-vidhya

sakthi said...

ஜெஸ்வந்தி said...

கவிதை அழகாக இருக்கிறது. கடைசியில் வரி முடியாமல் தொக்கி நிற்பது மிக அழகு.
பாராட்டுக்கள் சக்தி.

நன்றி ஜெஸ்வந்தி

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

ம்ம் பஞ்சபூதத்தையும் சாடுறீங்கோ ஆனால் அதையும் ரசிக்கிறீங்கோ அதே வகையிலே உங்க அக்னியாய் எறிந்த அவரையும் நாசூக்காய் சொன்னவிதம் அருமை

நன்றி அபு அண்ணா

sakthi said...

தேவன் மாயம் said...

அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்..//

கடைசியில் தாக்கீட்டீங்களே!!

ஆம் தேவன் சார் அதான் எங்க ஸ்டைல்

sakthi said...

திகழ்மிளிர் said...

அருமையாக இருக்கிறது

நன்றி திகழ்

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

கடைசியில் ஆழியாய் தாக்கிட்டீங்க!!நல்லா இருக்கு

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

////அமைதியாய் ஆர்ப்பரிக்கும் இந்த ஆழிதான்
அன்று பொங்கி பிராவாகித்து
பலரை கொன்று குவித்தது////

சில நிமிடங்கள் சிந்தக்க வைத்தது இந்த வரிகள்....

ஆனால் கடைசி வரி உங்களுக்கும் இப்படியா என வியக்க வைத்தது.... (லொள்.....)

வாழ்த்துக்கள்....

அப்படிங்கறீங்க

sakthi said...

SUBBU said...

அக்னி மழை பொழிகிறது வார்த்தைகளில்!!!

நன்றி சுப்பு

sakthi said...

அ.மு.செய்யது said...

கவிதை‍ பொருள் வார்த்தை பிரயோகம் அனைத்தும் அருமை.

இருந்தாலும் நீங்களே எல்லாவற்றையும் தெளிவாக,விளக்கமாக உரைநடை போல் அமைத்து எழுதிவிட்டீர்களே!!

கொஞ்சம் வாசகர்களையும் யோசிக்க வைங்களேன்.

டிரையறேன் சகோ

முடியலை

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

அருமை, அழகு

நன்றி சேகரன்

sakthi said...

Vidhoosh said...

///போட்டோ செம சூப்பருங்க ...///
repeat.

-vidhya

நன்றி வித்யா

ஹேமா said...

கவிதை வரிகள் கலக்கல்.அதுவும் கடைசிப் பந்தி அருமை.இயற்கை எம்மைக் காக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்.செயற்கையால் இயற்கையை அழிக்கவும் செய்கிறார்களே !

vasu balaji said...

நல்லா இருக்கு கவிதை.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு சக்தி புகை பட கவிதை!