ஒரு பசுமை நிறைந்த ஆலமரம் இது
இழைகளாலும் தழைகளாலும் அம்மரம்
சூழப்பட்டிருந்த வரை.....
அங்கு குயில்கள் கூவியது
கிளிகள் பாடியது
பல பறவைகள் கூடு கொண்டு
தன் இணையுடன் மகிழ்ந்திருந்தது....
இயற்கையின் விதியால் தன்
இலைகளை உதிர்த்து அது
பட்டுப்போகின்ற சூழலில் நின்றபோழ்து....
அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை
ஆனால் அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்....
.
29 comments:
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்...
நல்லா இருக்குங்க சக்தி வழக்கம் போல்..
சூப்பரா இருக்கு அக்கா :)
நாங்க எல்லாம் கிளைகள் தானே ?
//எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்....//
நல்லாயிருக்கு சக்தி
நல்லா இருக்கு கவிதை...! முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா.
கவிதையின் நாட்(Knot) என்ன என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்.
புரியல..
/இயற்கையின் விதியால் தன்
இலைகளை உதிர்த்து அது
பட்டுப்போகின்ற சூழலில் நின்றபோழ்து....
அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை
ஆனால் அதன் கிளைகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்..../
அருமை
மரத்தின்
மகத்துவத்தை அறியாமல்
மனிதநேயமற்று
மரத்தை
வெட்டும்
வேதனையையும் சொல்லட்டும்
அருமைங்க.. ம்ம் எங்களால பாராட்டமட்டும் தான் முடியும்..
எழுத முடியலையேய..
nalla iruku da
ஹலோ அக்கா
இந்த வரி
"ஆனால் அதன் கிளைகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்"
இது சரியா
பொருட் பிழை ஏதும் இல்லையே
கிளைகள் எதை தாங்கி நிற்கும்னு சொல்றீங்க
ஹலோ அக்கா
இந்த வரி
"ஆனால் அதன் கிளைகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்"
இது சரியா
பொருட் பிழை ஏதும் இல்லையே
கிளைகள் எதை தாங்கி நிற்கும்னு சொல்றீங்க
கொஞ்சம் புரியலையே
அது எதை தாங்கி நிற்குனு சொல்றீங்க
இலையை யா? ,இல்ல பறவைகலையா? இல்ல மரத்தையா ?
எனக்கு என்ன சந்தேகம்னா
நீங்க போடுருக்குற வார்த்தை
"அதன் கிளைகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்""
கிளைகள் எதை தாங்கி நிற்கும்? இலையை ,பறவைகளை ..
மரத்தை எப்படி தாங்கி நிற்கும் ??/
அங்க நீங்க போட்ருக்க வேண்டிய வார்த்தை "விழுதுகள் "
கொஞ்சம் திருத்த முடியுமா ???
தங்கள் ஃபாதர் இன் லா கஷ்டப்பட்டுட்டு இருக்குறத பாத்து எழுதுனதோ?
ஹ்ம்ம்ம் நல்ல கவிதை சகோதரி...சில சமயம் மனித உறவுகளும் இப்படி தான் என்ன செய்ய.. :( மெல்லிய சோகம் தெரிகிறது உங்கள் கவிதையில்....
நல்ல கவிதை.
நல்ல வேலை ஆலமரங்களுக்கு முதியோர் இல்லம் இல்லை.
ஆனால் அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்....
////////////////////
ஆல மரத்திற்கு விழுதுகள் போல் ஏதோ ஓன்று எல்லாவற்றையும் தாங்கி நிற்கின்றது . நல்ல கவிதை
ஆனால் அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்....
////////////////////
ஆல மரத்திற்கு விழுதுகள் போல் ஏதோ ஓன்று எல்லாவற்றையும் தாங்கி நிற்கின்றது . நல்ல கவிதை
அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை
ஆனால் அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்....
ஆணிவேரின் துணை இறுதியில் விழுதுகளே. கவிதையில் மெல்லிய சோகம் இழையோடுகிறது. நல்லா இருக்கு சக்தி.
நல்லா இருக்கு!! அந்த விழுதுகள் நட்பு மற்றும் உறவுகளா?
சக்தி,யாருக்கு இந்தக் கதை ?எங்களுக்கா ?
உணர்வு நல்லாயிருக்கு.
கிராம பஞ்சாயத்துக்கள் இல்லாமல் காய்ந்துவிட்டதோ என்னவோ
நல்ல இருக்குடா. தாமதமாய் வந்து விட்டேன்.
நம்மைச் சுற்றி ஆலமர உறவுகள் இருக்கும்வரை அச்சமில்லை தோழி.
// அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்....//
good...
ilayaikalai nambi Marankal illai ...
ANBU ennum vaer stronga eruntha poathum Shakthi....
Meendum Ilaaikal thiulirkkum
-:)
ஆலமரத்திற்கு விழுதுகளாவது இருக்கிறது மனித மனங்களுக்கு?
சக்தி டச் குறைவு தான்....உண்மை கருத்தை முன் வச்சி இருக்க சக்தி...
இதயத்தை வருடம் கவிதை சக்தி...
வாழ்க்கையில் களவு போன பாசம்
மெலிதாய் மனதை குத்துகிறது...
நிறைய மாற்றங்கள் பார்க்க முடிகிறது உங்கள் நடையில் விதி விலக்கல்ல இந்தக் கவிதையும்
:)
இக்கவிதையின் மூலம் ஏதாவது ஒரு பஞ்ச் கொடுத்திருக்கலாமே..
ஒரு வாழைமரத்தின் கதை - எதிர் பதிவு
--------------------------------------------------------------
ஒரு பசுமை நிறைந்த வாழைமரம் இது
இழைகளாலும் குலைகளாலும் அம்மரம்
சூழப்பட்டிருந்த வரை.....
அங்கு இலைகள் கிழிந்தது
குலைகள் ஒடிந்தது
பல பறவைகள் அமர்ந்து கொண்டு
பாரம்தாங்காமல் தரையில் விழுந்தது....
இயற்கையின் விதியால் தன்
இலைகளை இழந்தது அது
பட்டுப்போகின்ற சூழலில் நின்றபோழ்து....
அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை
ஆனால் அதற்க்கு முட்டு கொடுக்கும்கோல்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்....
Post a Comment