Sunday, July 12, 2009
சீதைகளை சிதையில் ஏற்றாதீர்....
வீட்டை விட்டு வெளியேறி
அலுவலகம் சென்று மீண்டும்
வீடு திரும்புவதற்குள்
எங்களுக்காய் காத்திருக்கும்
எத்தனையோ வலைவிரிப்புகள்.....
ரோட்சைட் ரோமியோக்களிடமிருந்து
தப்பி திரும்பினால்
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள்
இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின்
சற்று கலங்கித்தான் போய்விடும்......
அலுவலகங்களில் முகத்தை
இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில்
பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என
கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......
அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி
வீடு திரும்புகின்றோம் சீதையாய்
ஆம் எங்கள் கைப்பிடிக்க வரப்போகும்
மணவாளனுக்காய் நாங்கள் சீதைகளாகவே
இருக்கவிரும்புகின்றோம்....
ஆனால்
கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
காத்திருக்கின்றாய்.......
Labels:
விகடன் வெளீயிடு
Subscribe to:
Post Comments (Atom)
95 comments:
நிதர்சனமான உண்மைகள் அப்படியே கவிதை வரிகளாக வந்திருக்கு
என்று சொன்னால் இது மிகையாகாது.
சாதரணமாக நடப்பதுதான். இது தினம் தினம் பேருந்தில் செல்பவர்களின் மன வேதனை என்றே சொல்லலாம். :((
அருமையான வெளிப்பாடு ஷக்தி
வாழ்த்துக்கள்.
3 rd
padichutu varren
ஆனால்
கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
காத்திருக்கின்றாய்.......
\\
வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு சவுக்கடி சக்தி
அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி
வீடு திரும்புகின்றோம் சீதையாய்
ஆம் எங்கள் கைப்பிடிக்க வரப்போகும்
மணவாளனுக்காய் நாங்கள் சீதைகளாகவே
இருக்கவிரும்புகின்றோம்....
\\
super sakthima
// RAMYA said...
நிதர்சனமான உண்மைகள் அப்படியே கவிதை வரிகளாக வந்திருக்கு
என்று சொன்னால் இது மிகையாகாது.
சாதரணமாக நடப்பதுதான். இது தினம் தினம் பேருந்தில் செல்பவர்களின் மன வேதனை என்றே சொல்லலாம். :((//
ரிபீட்ட்ட்ட்ட்
//அலுவலகங்களில் முகத்தை
இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில்
பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என
கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......//
உண்மைகள்தான் பலர் பேசி நான் கேட்டுள்ளேன்...
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள்
இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின்
சற்று கலங்கித்தான் போய்விடும்......
100% unmayana varikal pa
உண்மை
சொல்ல வார்த்தைகள் இல்லை
அருமையான வரிகள்...
திருந்துவார்களா இவர்கள்????????
இன்றைய பெண்களின் ஏக்கமும் இதுவே....
ரோட்சைட் ரோமியோக்களிடமிருந்து
தப்பி திரும்பினால்
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள்
இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின்
சற்று கலங்கித்தான் போய்விடும்......
வேலைக்கு போகும் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை / தொல்லைகளை நெத்தில அடிச்சா மாதிரி சொல்லி இருக்கப்பா
இதேப்போல் ஆட்கள் திருந்த வேண்டும்..
அதற்கு உங்கள் ஒரு கவிதை ஒரு நெத்தியடி.
பனிக்குச்செல்லும் பென்களின் மன அழுத்தங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பனிமுடிந்து பேருந்திர்க்காக காத்து நிற்க்கும் பென்களை கானும்போது, பாவமாக தோன்றும், சில சமயம் இடிபாடகளுக்கிடையே ஏற முடியாமல் ஏமாந்து திரும்பும் அவர்கள் வாடிய முகம்..அம்மம்மா!! அப்படியே ஏறினாலும் இந்த இடி மன்னர்கள் செய்யும் இழிச்செயல்கள்!! திருந்தவேண்டும்...இல்லயேல் திருத்தவேண்டும்!!
ரொம்ப உண்மைங்க... :(
அருமையா வெளிபடுத்தி இருக்கீங்க
அருமையான வெளிப்பாடு
வாழ்த்துக்கள்.
///ரோட்சைட் ரோமியோக்களிடமிருந்து
தப்பி திரும்பினால்
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள்
இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின்
சற்று கலங்கித்தான் போய்விடும்......///
நாளாந்த நிகழ்வை நறுக்கென கொட்டி இருக்கிறீர்கள் கவி வரிகளில்.....
அருமையாக இருந்தது....
வாழ்த்துக்கள்.......
சரியா சொன்னீங்க சகோதரி
இதற்கெல்லாம் ஒரு வழி எப்பதான் வருமோ
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் ...
RAMYA said...
நிதர்சனமான உண்மைகள் அப்படியே கவிதை வரிகளாக வந்திருக்கு
என்று சொன்னால் இது மிகையாகாது.
சாதரணமாக நடப்பதுதான். இது தினம் தினம் பேருந்தில் செல்பவர்களின் மன வேதனை என்றே சொல்லலாம். :((
நன்றி ரம்யா
RAMYA said...
அருமையான வெளிப்பாடு ஷக்தி
வாழ்த்துக்கள்.
நன்றி ரம்யா
rose said...
ஆனால்
கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
காத்திருக்கின்றாய்.......
\\
வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு சவுக்கடி சக்தி
நன்றி ரோஸ்
rose said...
அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி
வீடு திரும்புகின்றோம் சீதையாய்
ஆம் எங்கள் கைப்பிடிக்க வரப்போகும்
மணவாளனுக்காய் நாங்கள் சீதைகளாகவே
இருக்கவிரும்புகின்றோம்....
\\
super sakthima
நன்றி மா
ஆ.ஞானசேகரன் said...
// RAMYA said...
நிதர்சனமான உண்மைகள் அப்படியே கவிதை வரிகளாக வந்திருக்கு
என்று சொன்னால் இது மிகையாகாது.
சாதரணமாக நடப்பதுதான். இது தினம் தினம் பேருந்தில் செல்பவர்களின் மன வேதனை என்றே சொல்லலாம். :((//
ரிபீட்ட்ட்ட்ட்
நன்றி சேகரன்
ஆ.ஞானசேகரன் said...
//அலுவலகங்களில் முகத்தை
இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில்
பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என
கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......//
உண்மைகள்தான் பலர் பேசி நான் கேட்டுள்ளேன்...
ஆம் சேகரன் சார் மிக கொடுமை இது
gayathri said...
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள்
இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின்
சற்று கலங்கித்தான் போய்விடும்......
100% unmayana varikal pa
நன்றி காயா
திகழ்மிளிர் said...
உண்மை
சொல்ல வார்த்தைகள் இல்லை
நன்றி திகழ்மிளிராரே
சந்ரு said...
அருமையான வரிகள்...
திருந்துவார்களா இவர்கள்????????
இன்றைய பெண்களின் ஏக்கமும் இதுவே....
நன்றி சந்ரு
என்னாச்சி சக்தி திடீர்னு புரட்சியா வெடிச்சிட்டீங்களே
உண்மையய் கவிதையாய் வடித்திருக்கீர்கள்
//கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை//
சீதைகளே கொடுக்க காத்திருக்கும்போது அதை வாங்குபவர்களை எப்படி தடுக்க முடியும்...
எங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் வரதட்சனை வாங்ககூடாதுது முடிவுபண்ணி அதே மாதிரி செய்தும் காட்டிருக்கோம்...
S.A. நவாஸுதீன் said...
ரோட்சைட் ரோமியோக்களிடமிருந்து
தப்பி திரும்பினால்
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள்
இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின்
சற்று கலங்கித்தான் போய்விடும்......
வேலைக்கு போகும் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை / தொல்லைகளை நெத்தில அடிச்சா மாதிரி சொல்லி இருக்கப்பா
நன்றி நவாஸ் அண்ணா
வினோத்கெளதம் said...
இதேப்போல் ஆட்கள் திருந்த வேண்டும்..
அதற்கு உங்கள் ஒரு கவிதை ஒரு நெத்தியடி.
நன்றி வினு
ஷஃபிக்ஸ் said...
பனிக்குச்செல்லும் பென்களின் மன அழுத்தங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பனிமுடிந்து பேருந்திர்க்காக காத்து நிற்க்கும் பென்களை கானும்போது, பாவமாக தோன்றும், சில சமயம் இடிபாடகளுக்கிடையே ஏற முடியாமல் ஏமாந்து திரும்பும் அவர்கள் வாடிய முகம்..அம்மம்மா!! அப்படியே ஏறினாலும் இந்த இடி மன்னர்கள் செய்யும் இழிச்செயல்கள்!! திருந்தவேண்டும்...இல்லயேல் திருத்தவேண்டும்!!
நன்றி ஷஃபிக்ஸ்
தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி
kanagu said...
ரொம்ப உண்மைங்க... :(
அருமையா வெளிபடுத்தி இருக்கீங்க
நன்றி கனகு
இயற்கை said...
அருமையான வெளிப்பாடு
வாழ்த்துக்கள்.
நன்றி இயற்கை
சப்ராஸ் அபூ பக்கர் said...
///ரோட்சைட் ரோமியோக்களிடமிருந்து
தப்பி திரும்பினால்
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள்
இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின்
சற்று கலங்கித்தான் போய்விடும்......///
நாளாந்த நிகழ்வை நறுக்கென கொட்டி இருக்கிறீர்கள் கவி வரிகளில்.....
அருமையாக இருந்தது....
வாழ்த்துக்கள்.......
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நட்புடன் ஜமால் said...
சரியா சொன்னீங்க சகோதரி
இதற்கெல்லாம் ஒரு வழி எப்பதான் வருமோ
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
நன்றி ஜமால் அண்ணா
அருமையான பதிவு..
முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.
நடைமுறையில் பெண்களுக்குத் தான் எத்தனை சங்கடங்கள்! என் மனைவிக்கு சென்னை மா ந(ரக)கரப் பேருந்தே பிடிக்காமல் போனதிற்கு நீங்கள் குறிப்பிட்ட இடி ராஜாக்களே காரணம்..
இது போல தரமான பதிவுகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!
சக்திக்கா ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க
பெண்களின்
சமூக கொடுமைகளை
அப்படியே கவிதை வரியா மாற்றி
ஆண்களுக்கு மற்றும் சில வன்மமாக பேசும் பெண்களுக்கும் அம்பு எய்திட்டீர்கள்
பிரிச்சு மேஞ்சிட்டீங்க..
cool down...
பிரிச்சு மேஞ்சிட்டீங்க..
cool down...
பிரிச்சு மேஞ்சிட்டீங்க..
cool down...
நீங்க எழுதுன கவிதையிலே பெஸ்ட் இதான்
ஒவ்வொரு பத்தியிலும் அனல் பறக்குது.
ஆண்களுக்கெதிராக எழுதப்பட்டாலும் முற்றிலும் யதார்த்தம்,
குறிப்பாக அலுவலகத்திலும்,பேருந்திலும் சொல்லப்பட்டவை ஆண்களின் மனநிலையை
டார்ச் அடிச்சி காமிச்சிட்டீங்க..
இன்னும் நிறைய எழுதுங்க சக்தி..இதே மாதிரி...
keep up the momentum !!!!!!!!
அபுஅஃப்ஸர் said...
என்னாச்சி சக்தி திடீர்னு புரட்சியா வெடிச்சிட்டீங்களே
உண்மையய் கவிதையாய் வடித்திருக்கீர்கள்
//கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை//
சீதைகளே கொடுக்க காத்திருக்கும்போது அதை வாங்குபவர்களை எப்படி தடுக்க முடியும்...
அது நிஜம் தான்
எங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் வரதட்சனை வாங்ககூடாதுது முடிவுபண்ணி அதே மாதிரி செய்தும் காட்டிருக்கோம்...
நல்ல விஷயம் அபு அண்ணா....
ச.செந்தில்வேலன் said...
அருமையான பதிவு..
முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.
நடைமுறையில் பெண்களுக்குத் தான் எத்தனை சங்கடங்கள்! என் மனைவிக்கு சென்னை மா ந(ரக)கரப் பேருந்தே பிடிக்காமல் போனதிற்கு நீங்கள் குறிப்பிட்ட இடி ராஜாக்களே காரணம்..
இது போல தரமான பதிவுகளை தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!
நன்றி செந்தில்வேலன்
பிரியமுடன்.........வசந்த் said...
சக்திக்கா ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க
பெண்களின்
சமூக கொடுமைகளை
அப்படியே கவிதை வரியா மாற்றி
ஆண்களுக்கு மற்றும் சில வன்மமாக பேசும் பெண்களுக்கும் அம்பு எய்திட்டீர்கள்
முடிந்தால் ஏப்ரல் மாதத்து பதிவுகளை படித்து பாருங்கள் வசந்த் தம்பி
நன்றி வசந்த்
sarathy said...
பிரிச்சு மேஞ்சிட்டீங்க..
cool dow
சரிங்க சாரதியாரே...
நன்றி தங்கள் வருகைக்கு
அ.மு.செய்யது said...
நீங்க எழுதுன கவிதையிலே பெஸ்ட் இதான்
ஒவ்வொரு பத்தியிலும் அனல் பறக்குது.
ஆண்களுக்கெதிராக எழுதப்பட்டாலும் முற்றிலும் யதார்த்தம்,
குறிப்பாக அலுவலகத்திலும்,பேருந்திலும் சொல்லப்பட்டவை ஆண்களின் மனநிலையை
டார்ச் அடிச்சி காமிச்சிட்டீங்க..
இன்னும் நிறைய எழுதுங்க சக்தி..இதே மாதிரி...
keep up the momentum !!!!!!!!
கண்டிப்பாக செய்யது தம்பி
நன்றி தங்கள் வருகைக்கு
//அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி
வீடு திரும்புகின்றோம் சீதையாய்//
பாவம் சீதைகள்..
சீதைகள் சீதைகளாகவே இருக்கிறார்கள்
இராமன்கள் தான் இராமன்களாக
பலசமயம் இருப்பதில்லை
//இந்த கதை குங்குமம் வார இதழில் வெளி வந்ததில் மிக்க மகிழ்ச்சி...
அருமையான நகைச்சுவை கதை//
எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள்
விபரம் கூறவும்
சக்தி,
கவிதை நன்றாக இருக்கிறது.
கவிதையின் உட்பொருளான விஷயம் பெண்களுக்கேயுரிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவதினால் இன்னும் சிறக்கிறது. மாற்றங்கள் மனதில் நிகழவேண்டும். நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
அ.மு.செய்யது said...
நீங்க எழுதுன கவிதையிலே பெஸ்ட் இதான்
ஒவ்வொரு பத்தியிலும் அனல் பறக்குது.
ஆண்களுக்கெதிராக எழுதப்பட்டாலும் முற்றிலும் யதார்த்தம்,
குறிப்பாக அலுவலகத்திலும்,பேருந்திலும் சொல்லப்பட்டவை ஆண்களின் மனநிலையை
டார்ச் அடிச்சி காமிச்சிட்டீங்க..
இன்னும் நிறைய எழுதுங்க சக்தி..இதே மாதிரி...
ரிப்பீட்டேய்
அருமைத் தமிழ்... :-)
// நட்புடன் ஜமால் said...
சரியா சொன்னீங்க சகோதரி
இதற்கெல்லாம் ஒரு வழி எப்ப தான் வருமோ
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் ...//
நான் சொல்ல நினைத்ததை அப்படியே ஜமால் சொல்லி விட்டார். இந்தக் கவிதை ஆணினத்தைத் தாக்கினாலும், பேதமில்லாமல் உங்களுக்குக் கிடைத்த பாராட்டு ஆனந்தம் தருகிறது. காலம் மாறும். அது எப்போவென்றுதான் தெரியவில்லை.
மாறுமா ஆணுலகம்?........உண்மையான வெளிப்பாடு வாழ்த்துக்கள்.
கதிர் said...
//அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி
வீடு திரும்புகின்றோம் சீதையாய்//
பாவம் சீதைகள்..
சீதைகள் சீதைகளாகவே இருக்கிறார்கள்
இராமன்கள் தான் இராமன்களாக
பலசமயம் இருப்பதில்லை
//இந்த கதை குங்குமம் வார இதழில் வெளி வந்ததில் மிக்க மகிழ்ச்சி...
அருமையான நகைச்சுவை கதை//
எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள்
விபரம் கூறவும்
நன்றி கதிர்
விபரம் கூறியுள்ளேன்
"அகநாழிகை" said...
சக்தி,
கவிதை நன்றாக இருக்கிறது.
கவிதையின் உட்பொருளான விஷயம் பெண்களுக்கேயுரிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவதினால் இன்னும் சிறக்கிறது. மாற்றங்கள் மனதில் நிகழவேண்டும். நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நன்றி வாசு சார் தங்கள் வருகைக்கு
S.A. நவாஸுதீன் said...
அ.மு.செய்யது said...
நீங்க எழுதுன கவிதையிலே பெஸ்ட் இதான்
ஒவ்வொரு பத்தியிலும் அனல் பறக்குது.
ஆண்களுக்கெதிராக எழுதப்பட்டாலும் முற்றிலும் யதார்த்தம்,
குறிப்பாக அலுவலகத்திலும்,பேருந்திலும் சொல்லப்பட்டவை ஆண்களின் மனநிலையை
டார்ச் அடிச்சி காமிச்சிட்டீங்க..
இன்னும் நிறைய எழுதுங்க சக்தி..இதே மாதிரி...
ரிப்பீட்டேய்
நன்றி நவாஸ் அண்ணா
கடைக்குட்டி said...
அருமைத் தமிழ்..
நன்றி கடைக்குட்டி
ஜெஸ்வந்தி said...
// நட்புடன் ஜமால் said...
சரியா சொன்னீங்க சகோதரி
இதற்கெல்லாம் ஒரு வழி எப்ப தான் வருமோ
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் ...//
நான் சொல்ல நினைத்ததை அப்படியே ஜமால் சொல்லி விட்டார். இந்தக் கவிதை ஆணினத்தைத் தாக்கினாலும், பேதமில்லாமல் உங்களுக்குக் கிடைத்த பாராட்டு ஆனந்தம் தருகிறது. காலம் மாறும். அது எப்போவென்றுதான் தெரியவில்லை.
நன்றி ஜெஸ்
நசரேயன் said...
நல்லா இருக்கு
நன்றி நசரேயன் அண்ணா
முனைவர் சே.கல்பனா said...
மாறுமா ஆணுலகம்?........உண்மையான வெளிப்பாடு வாழ்த்துக்கள்.
நன்றி கல்பனா மா
தங்கள் முதல் வருகைக்கு
அடங்கக்கமக்கா..
ஆரம்ப பின்னூட்டங்கள் பெரும்பாலானவை பெண்குலத்தவர்களோடதாவே இருக்கே..
நிதர்சனமானா உண்மைகளை ரொம்ப எளிமையா நெற்றிப்பொட்டில் அறையும்வண்ணம் சொல்லிருக்கிங்க சக்தி.. வாழ்த்துக்கள்..
Intha thalaipe enaku rombha pidichirukku Shakthi .
Suresh said...
அடங்கக்கமக்கா..
ஆரம்ப பின்னூட்டங்கள் பெரும்பாலானவை பெண்குலத்தவர்களோடதாவே இருக்கே..
நன்றி சுரேஷ்
Suresh said...
நிதர்சனமானா உண்மைகளை ரொம்ப எளிமையா நெற்றிப்பொட்டில் அறையும்வண்ணம் சொல்லிருக்கிங்க சக்தி.. வாழ்த்துக்கள்..
அப்படிங்கறீங்க
சுபா said...
Intha thalaipe enaku rombha pidichirukku Shakthi .
நன்றி சுபா
எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க இன்னும் நான் என்ன சொல்ல? நிதர்சனமான உண்மை...ஆனால் மாறி வரும் சமூக முன்னேற்றத்தில் இந்த வன்மத்தின் நிலை குறைந்தே உள்ளது எனலாம்..ஆனால் கடைசி பத்தி நெஞ்சை பிழிகிறது வலியால்....ஆம் இந்த பலிக்கு படித்த படிக்காத ஏழை பணக்கார என்ற பேதமில்லாமல் பலியாவது கொடுமை இதற்கு தகுந்த சட்டம் கொண்டு வராதது நம் அரசின் மெத்தனமே....
உண்மையை அழகாக வார்த்துள்ளீர்கள் தோழி
பெண்களின் கஷ்டங்களை தெளிவா சொல்லிருக்கீங்க. மாற்றங்கள் நிகழட்டும்.
//
Suresh said...
நிதர்சனமானா உண்மைகளை ரொம்ப எளிமையா நெற்றிப்பொட்டில் அறையும்வண்ணம் சொல்லிருக்கிங்க சக்தி.. வாழ்த்துக்கள்..
//
சாரி.. ஜீ'டாக் ஐடீல இருந்து கமென்ட்டிட்டேன்..
"ஆனால்
கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
காத்திருக்கின்றாய்......".
அருமை!
தமிழரசி said...

நன்றி தமிழரசியாரே
தமிழ்ப்பிரியா said...
உண்மையை அழகாக வார்த்துள்ளீர்கள் தோழி
நன்றி தமிழ்பிரியா
" உழவன் " " Uzhavan " said...
பெண்களின் கஷ்டங்களை தெளிவா சொல்லிருக்கீங்க. மாற்றங்கள் நிகழட்டும்.
நன்றி உழவரே
सुREஷ் कुMAர் said...
//
Suresh said...
நிதர்சனமானா உண்மைகளை ரொம்ப எளிமையா நெற்றிப்பொட்டில் அறையும்வண்ணம் சொல்லிருக்கிங்க சக்தி.. வாழ்த்துக்கள்..
//
சாரி.. ஜீ'டாக் ஐடீல இருந்து கமென்ட்டிட்டேன்..
நன்றி சுரேஷ் குமார்
கபிலன் said...
"ஆனால்
கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
காத்திருக்கின்றாய்......".
அருமை!
நன்றி கபிலன்
ஆத்தி...! தீ பறக்குது...
நான்கூட வீட்டுபுறான்ன வுடனே மெல்லிய கவிதைகள் எழுதுரவங்கன்னு நினைச்சுட்டேன்
கலக்குங்க சக்தி..!
அருமை...!
நேசமித்ரன் said...
ஆத்தி...! தீ பறக்குது...
நான்கூட வீட்டுபுறான்ன வுடனே மெல்லிய கவிதைகள் எழுதுரவங்கன்னு நினைச்சுட்டேன்
கலக்குங்க சக்தி..!
அருமை...!
நன்றி நேசமித்ரரே
உலா வரும் உண்மைகள் இங்கே உறைந்திருக்கின்றன.... கவிதையாய்.
\\அலுவலகங்களில் முகத்தை
இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில்
பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என
கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......\\
Hellow..
konjam sirichu pesuna
neengala oru mudivu eduthuta epdinga.
Officela akka thangacheeeeennu
nenachu pazhagaravangalum irukkanga.
\\ஆனால்
கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
காத்திருக்கின்றாய்....\\
mmm..
Ennoda favorite thaboo shankar
oru storyla sonnathu..
"Nammma kalyanathappo
unnoda kanavugal ellathaium
seera kondu vaa..
aprama naan ovvonna unakku seyyanum"
ippollam ipdithanga neraiyya peru irukkanga..
aagave neenga eluthinathu nalla irunthaalum athi pathi unmaiyillai enru koori intha kavithaiyai naan migavum menmaiyaga kandikkiren.
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
நிதர்சனமான உண்மை சொல்லும் வலி நிறைந்த கவிதை...
குடந்தை அன்புமணி said...
உலா வரும் உண்மைகள் இங்கே உறைந்திருக்கின்றன.... கவிதையாய்.
நன்றி அன்புமணி சார்
logu.. said...
\\அலுவலகங்களில் முகத்தை
இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில்
பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என
கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......\\
Hellow..
konjam sirichu pesuna
neengala oru mudivu eduthuta epdinga.
Officela akka thangacheeeeennu
nenachu pazhagaravangalum irukkanga.
சரிங்க லோகு
logu.. said...
\\ஆனால்
கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
காத்திருக்கின்றாய்....\\
mmm..
Ennoda favorite thaboo shankar
oru storyla sonnathu..
"Nammma kalyanathappo
unnoda kanavugal ellathaium
seera kondu vaa..
aprama naan ovvonna unakku seyyanum"
ippollam ipdithanga neraiyya peru irukkanga..
aagave neenga eluthinathu nalla irunthaalum athi pathi unmaiyillai enru koori intha kavithaiyai naan migavum menmaiyaga kandikkiren.
கண்டித்தமைக்கு நன்றி லோகு
ஆப்பு said...
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
நன்றி ஆனால் இந்த செய்திக்கு என்ன அர்த்தம்
reena said...
நிதர்சனமான உண்மை சொல்லும் வலி நிறைந்த கவிதை...
நன்றி ரீனா
நிதர்சனம். சாட்டையடி.
சக்தி,பெண்களின் வலி சொல்லும் அருமையான கவிதை.
பெண்ணய்ப்பிறந்திட மாதவம் செய்ய வேணும் என்று சொன்னவரைத் தேடிப்பிடிப்போம்.
என் பிளாக்கில் விருது காத்திருக்கிறது
http://iyarkai09.blogspot.com/
பாலா... said...
நிதர்சனம். சாட்டையடி.
நன்றி பாலா
ஹேமா said...
சக்தி,பெண்களின் வலி சொல்லும் அருமையான கவிதை.
பெண்ணய்ப்பிறந்திட மாதவம் செய்ய வேணும் என்று சொன்னவரைத் தேடிப்பிடிப்போம்.
நன்றி ஹேமா
இயற்கை said...
என் பிளாக்கில் விருது காத்திருக்கிறது
http://iyarkai09.blogspot.com/
நன்றி இயற்கை
உண்மையை கவிதையாய் கொட்டியிருக்கிறீர்கள் அருமையான கவிதை வரிகள் சக்தி .
Post a Comment