Thursday, July 30, 2009

அன்னையின் பொன்மொழிகள்....



வாழ்கையின் சிந்தனை மிகுந்த நேரங்களையும்,
நோய்களையும் வேதனைகளையும்
ஒதுங்கி நின்று பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.
அவை எல்லாம் உருமாறி விடக்கூடிய
ஒன்று என்பதை உணருங்கள்.....

வெயிலும் கடுமையும் வந்தால்
குளிரும் மழையும் வரக்காத்திருக்கின்றது
என்பதை அறீவீர்கள்.....

துன்பத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்.
துன்பத்தை தொடர்ந்து இன்பமும்
வரத்தான் போகின்றது என்பதை
எண்ணி ஆறுதல் அடையுங்கள்....

வாழ்கையை மிகத்தீவிரமாக ஏற்றுக்கொள்ளும்
மனிதர்களிடம் பழகாதீர்கள்....
உங்களை சுற்றியுள்ள சூழ்நிலை
உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள்
எல்லாவற்றையும் எளிமையாக லேசாக ஏற்கத்தயாராகுங்கள்....

ஆண்டவன் லீலைகளில் மகிழ்ச்சி அடைபவன்
ஆண்டவன் வைக்கும் சோதனைகளை
எல்லாம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்....

சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும்
வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள்
வெற்றியும் மகிழ்ச்சியும் மனப்பக்குவமும்
அடைய இதுவே சிறந்த வழி.....

Tuesday, July 28, 2009

மனம் -- மணம்



சீயக்காய் தோய்த்த குழல்
செஞ்சாந்து திலகமிட்ட முகம்
நலங்கு மாவின் நறுமணமும்
சமையலறையின் கலவையான வாசத்துடன்

முந்தானை சூட்டில் எனை
உறங்க வைத்த
அன்னையின் மணம்......


பழுப்பேறிய வெண்மையிலான உடை
உழைப்பின் பரிசான வியர்வை வாசத்துடன்
வாரியணைத்தவரின் அணைப்பில்
நுரையீரலை நிறைத்த அப்பாவின் மணம்.....


மஞ்சள் சரட்டின் சுகந்தத்துடனும்
நெற்றி வகிட்டில் நிறைத்த குங்குமத்துடனும்
அவன் மார்பில் சாய்ந்திருக்கும் வேளையில்

என் சுவாசத்தில் சங்கமிக்கும்

அவனுக்கேயுரிய பிரத்யேகமான மணம்......



என எத்தனையோ மணம்
நினைவுக்குமிழ்களாய் இருப்பினும்
என் மகவினை ஈன்றெடுத்த போழ்தில்
பல ஹார்மோன்களின் உதவியுடன்
பாசத்தின் வெளிப்பாடாய்
எனக்குள் வெளிப்பட்ட
தாய்மையின் மணமே தனி மணம்...... .

Sunday, July 26, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா!!!!







இணையத்தில் எமக்கு கிடைத்த
இனிய தோழமைக்கு என்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!


நட்பிற்கு ஒரு இலக்கணமாய்
வரைமுறைக்குட்பட்ட நட்பாய்
நட்பான நட்பாய் வாழும் ஜமால் அண்ணா!!!
Happy Birthday To You!!!!


வாழ்க நீவீர் வாழ்கை என்ற கடலில்
மகிழ்ச்சி என்ற படகில்
வாழ்நாளெல்லாம் பவனி வந்து!!!
வளம் பல பெற்று!!!
வாழ்க நீடுழி!!!
வளர்க வையத்தில் நின் புகழ்!!!!





நல்வாழ்த்துக்களுடன்
சக்தி



.

Saturday, July 25, 2009

ஒரு ஆலமரத்தின் கதை....


ஒரு பசுமை நிறைந்த ஆலமரம் இது
இழைகளாலும் தழைகளாலும் அம்மரம்
சூழப்பட்டிருந்த வரை.....

அங்கு குயில்கள் கூவியது
கிளிகள் பாடியது
பல பறவைகள் கூடு கொண்டு
தன் இணையுடன் மகிழ்ந்திருந்தது....

இயற்கையின் விதியால் தன்
இலைகளை உதிர்த்து அது
பட்டுப்போகின்ற சூழலில் நின்றபோழ்து....

அதற்கு ஆறுதல் கூற யாருமில்லை
ஆனால் அதன் விழுதுகள்
அதை எப்போதும் தாங்கி நிற்கும்
அவை இற்றுப்போகின்ற வரையிலும்....




.

Tuesday, July 21, 2009

தொப்பூள் கொடி சொந்தங்களை நம்பாதீர்கள்....




ஆண்களின் ரத்தத்தால் இந்த கடல் சிவப்பாகட்டும்
பெண்களின் கற்பு எங்கள் வீரர்களுக்கு விருந்தாகட்டும்
என சிங்களவன் கொக்கரித்தபோது
கொப்பளித்த என் கோபத்தை
கொட்டிவைக்க இடமின்றி குமறித்தான் போனேன்....

அங்கே கொட்டியிருக்கும் ரத்தத்தை மண் உறியவே
இன்னும் எத்தனையோ நாட்களாகும் என கூறுகின்றனரே
அந்த மண்ணின் ரத்தவெறி தீர்ந்ததா????
இல்லை இன்னும் முகாம்களில் வெறிபிடித்த மிருகங்களால்
வதைக்கப்பட்டு சிதைக்கப்படுவோரின் ரத்தமும் வேண்டுமா???

அவர்களின் கொடூர செய்கைகளை கண்டு
வேதனையில் வெம்பியபடி
எங்கள் நாட்டில் உங்கள் நிலையை
சற்றே யோசித்துபார்க்கிறேன்...

ஆயிரக்கணக்கான உயிர்கள்
அங்கு பலியானபோது இங்கு யாரும்
அதிகமாய் அழுததாய் தெரியவில்லை
ஆனால் ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பையை
எங்கள் நாடு வெல்லவில்லையே என சற்று அதீதமாய் அழுதோம்.....

ஆனால் ஒன்று மட்டும் உறுதி
அங்கு நடக்கும் கொடுமைகளை கண்டு
கவிதை வடிப்போம், கதை எழுதுவோம்
கட்டுரைகளில் கிழி கிழியென கிழிப்போம் ....

அதே சமயத்தில்தப்பி தவறி எங்கள் பேச்சை நம்பி நீங்கள்
தொப்பூள் கொடி சொந்தமிது என இங்கு வந்தீர்களானால்
உங்களுக்கு அகதிகள் என பட்டமும் அளிப்போம்....

Saturday, July 18, 2009

சுவாரஸ்ய பதிவர் விருது ......


என் தளத்திற்கு சுவாரஸ்ய பதிவர் விருதளித்த

சகோதரர் நவாஸ் அண்ணாவிற்கும் ,

சகோதரர் ஷ‌ஃபிக்ஸ்,

சகோதரி இயற்கை மகள்,

சகோதரி ஜெஸ்வந்தி

ஆகியோருக்கு எனது நன்றிகள் பல.......


சில நாட்களுக்குள்ளே இந்த விருது இல்லாத தளமே இல்லை எனும் அளவிற்கு இவ்விருது அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி....

எனக்களித்த இவ்விருதை இவர்கள் ஆறு பேருக்கும் பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.....


திகழ்மிளிரார்

ஹம்மிங் பேர்ட் அசீ

ஸ்வீட் ப்ரீஸ் சக்திகுமார்

பாமரன் பக்கங்கள் பாலா

நசரேயன் அண்ணா

கனவுகளின் முகவரியை சொல்லும் ரீனா







.

Sunday, July 12, 2009

சீதைகளை சிதையில் ஏற்றாதீர்....


வீட்டை விட்டு வெளியேறி
அலுவலகம் சென்று மீண்டும்
வீடு திரும்புவதற்குள்
எங்களுக்காய் காத்திருக்கும்
எத்தனையோ வலைவிரிப்புகள்.....

ரோட்சைட் ரோமியோக்களிடமிருந்து
தப்பி திரும்பினால்
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள்
இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின்
சற்று கலங்கித்தான் போய்விடும்......

அலுவலகங்களில் முகத்தை
இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில்
பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என
கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......

அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி
வீடு திரும்புகின்றோம் சீதையாய்
ஆம் எங்கள் கைப்பிடிக்க வரப்போகும்
மணவாளனுக்காய் நாங்கள் சீதைகளாகவே
இருக்கவிரும்புகின்றோம்....

ஆனால்
கரன்சியும் காணமும்
குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
காத்திருக்கின்றாய்.......

Thursday, July 9, 2009

குப்பைதொட்டி பெறும் குழந்தைகள்....

நம்பிக்கைகுரியவர்களே
நல்லவர்களே!!!
நம் நாட்டில் ஜனத்தொகை அதிகம்
என எள்ளி நகையாடி
ஏகடியம் செய்பவர்களுக்கு
தெரிவதில்லை நம் நாட்டில்
பெண்கள் மட்டுமல்ல
பல சமயங்களில்
குப்பை தொட்டிகள் கூட
குழந்தை பெற்றுக்கொள்ளும் என.....

Tuesday, July 7, 2009

வானத்து மகளே



ஐந்து இரு மாதங்கள்
அடிவயிறறில உனை தாங்கி
அம்மா என அலறி நான்
ஈன்று எடுத்த தேவதையே

வானவரும் தேவரும் பூ மழை பொழிய
என் இல்லம் வந்த காரிகையே

அஞ்சனைஇல் கண் எழுதி
அல்லி பூ மெத்தைஇட்டு

முத்து சிவிகை உடன்
முல்லை பந்தலில் தொட்டிலிட்டு

நான் காத்து இருக்க
எனை வெறுத்து பூமகளே எங்குசென்றாய்

இழப்பின் வலி என்ன வென்று
எனக்கு உணர்த்த சென்றாயோ

மீளா துயரில் எனை ஆழ்த்தி
மாளா சோகத்தில் எனை வீழ்த்தி....

பி.கு: திகழ்மிளிராரின் தளத்தில் இந்த கவிதையை படித்ததும் எனது மனதில் தோன்றிய என் பழைய கவிதை (மீள்பதிவு)

Monday, July 6, 2009

இதயப்பூவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....


இன்று பிறந்த நாள் காணும்
இயற்கை அன்னையின்

இனியமகளே
இன்றுபோல் என்றும்
எல்லா வளமுடனும நலமுடனும்
வாழ வாழ்த்துக்கள்!!!!


அன்பும் உயர் பண்பும் நிறைந்த

அழகிய தேவதையே!!!


வலைப்பூவில் வாசம் வீசும்

எங்களின் இனிய இதயப்பூவே!!!


பெற்றவர்களுக்கு செல்ல மகள் நீ

நண்பர்களுக்கு நல்ல தோழி நீ
கற்பவர்களுக்கு கலைமகள் நீ
சக்திமிக்க அலைமகள் நீ

என்றும் திருமகளாய் நீ வாழ்க!!!


தோன்றின் புகலொடு தோன்றுக வென்னும்
தொன்முறை கூறும் நன்மக வாய்
நோன்பிற் பிறந்த விழாகண்டாய்
நூறாண்டு காலம் வாழியவே!!!!

என்றும் மறவேன் உங்கள் அன்பை....



என் வாழ்வு பூமிப்பந்தில் துவங்கிய நாள் இன்று
இதுவரை பெரிதாய் சாதித்துவிட்டதாய் நினைக்கவில்லை
ஆனால் முகம் கூட பார்த்தறியாத எனக்காய்

வாழ்த்துமழையும் கவிதை மழையும் பொழிந்து
என் மனதை நெகிழச்செய்த
என்
உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகள்....


நன்றி இயற்கை மகள், தமிழரசி


Orkut , Face book, E- greetings, Gmail போன்றவற்றில்
வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்....


வரைமுறையின்றி தலைமுறைக்கும் தொடரவேண்டும்

உங்களின் இந்த அன்பு பந்தம்

உயிர்குதிரையேறி விண்ணுலகும் ஏகும் வரை
உங்கள் அன்பை என்றும் மறவாது என் நெஞ்சம்.....



*

Friday, July 3, 2009

நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள்!!!


என் அன்பு மகன் பாலாஜிக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!

தாய்மை எனும் பேரின்பத்தை எனக்களித்தாய்!!!
தாலாட்டு பாடும் வரத்தையும் தந்திட்டாய்!!!

எத்தனையோ வருடங்கள்
நான் செய்த தவத்தின் பலனாய்
என் மடி சேர்ந்த அழகு பொக்கிஷமே!!!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீ வாழவேண்டும் இந்த
அன்னையின் ஆயுளும் உன்னையே சேரவேண்டும்!!!!

வாழ்க வளமுடன்!!!

என் செல்லத்துக்கு எனக்கு முன்பே வாழ்த்து தெரிவித்து அழகியதொரு பதிவு இட்டிருக்கும் என் சகோதரி இயற்கை மகள்க்கு என் நன்றிகள்!!!

Thursday, July 2, 2009

உனக்காய் ஒரு அழகிய பிரபஞ்சம்......


எனக்குள் ஒரு அழகிய பிரபஞ்சம்
உனக்காய் உருவானது!!!

என் விரல் தொடும் தூரத்தில் விண்மீண்கள் காத்திருக்க
அங்கும் என் விரல் படா தூரத்திலேயே நீ இருக்கின்றாய்!!!

மொட்டவிழ்கின்ற மலர்களை நான் ரசித்திட்டபோதும்
மழைசாரலில் துளைந்து வியர்த்திட்டபோதும்
சத்தமின்றி நீ சிரித்த சிரிப்பின் ஞாபகத்தில்
சிக்கி சித்தம் மறந்து சிலிர்க்கின்றேன்!!!!

நீள் விசும்பினிடை நீந்தும்
நிலவின் மொழியும்
நட்சத்திரங்களின் முணுமுணுப்பும் கேட்டு
நிம்மதியிழந்து தவிக்கின்றேன்
உன் நேசமுகம் காணாத போழ்துகளில்!!!!

உன் காலடியோசை கேட்டால் மட்டுமே
சப்திப்பேன் என மெளனவிரதமிருக்கும்
என் கொலுசுகளின் இசை மீண்டும் நான்
கேட்க நீ வரவேண்டும்!!!!