
ஆர்த்து எழுங்கள் இளைய பாரதமே
காத்திருக்கும் பாதை கொடியது
கல்லும் முள்ளும் பல நிறைந்தது
பாதச்சுவடுகளை தேடாது
புதிய பாதை அமைப்போம்
நீங்கள் எங்களின் வெளிச்சவிதைகள்
விதைகளின் ஏக்கம் விருட்சமாவதே
வைராக்கிய விதைகளை விதைப்பவர்க்கு
பாறாங்கல்லும் பஞ்சாகும்
மலையும் மண்மேடாகும்
மௌனத்தை நோக்கி பயணம் செய்து
நம் மனதின் வன்மத்தை களைவோம்
நிகழ்காலம் உங்களை பித்தன் எனறாலும்
வருங்காலம் உங்களை புத்தன் என்கும்
உள்ளத்தில் உறுதியுடனிருந்து
உன்னதம் படைப்போம் உலகை ஆள்வோம்
எங்களவர்களுக்கு வானம் மட்டுமல்ல
துணை நிற்கும் கோள்களும் வசப்படட்டும்