சூரியன் தன் வீரியத்தை
தொலைத்த கோபத்தில்
சிவந்து தணிந்து
கொண்டிருந்த வேளையில்
ஒரு தர்க்கத்தின் முடிவில்
உயிரை கருக செய்யும்
திராவகத் துளிகளை
அவன் வார்த்தைகள் சிதற
கந்தகமிட்ட காகிதமாய்
வெந்து உலர்ந்தது நெஞ்சம்
உணர்வுகளின் மௌன மறுகல்
ஊமை மலர்களின் மௌன விகசிப்பாய்
மெல்ல மெல்ல குறைந்தது விசும்பல்கள்
சற்றே மனம் அடங்கி குளிர
வெட்க புன்னகை யொன்று இதழ்களில் தோன்றி
தேகம் முழுவதும் பரவ
விழி நாணேற்ற
முறிந்தது அவன் திமிர்
உள்ளே ஏதோ ஒன்று இற்று உருகிட அதன்
சாறாக கண்ணில் நீர்!!!!
22 comments:
:-) nice pa
செம ஃபீல் சக்தி. நச்ன்னு இருக்கு.
அந்த ஏதோ ஒன்று இற்று உருகும் தருணம்...
அடடா.. ஒரு பிரசவம் போல்
இம்ப்ரெஷினிஸம்,
எக்ஷ்பிரசனிஸம்,
க்யூபிஸம்,
டாடாயிஸம்,
சர்ரியலிஸம்,
இந்த கவிதையும் படமும் எதிலும் சேராத ரியலிஸம் இந்த கவிதை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சகோ
இறுமாப்பு முடிவில், கண்ணீர் தருமோ?
அன்பு கனிந்த கனிவே சக்தி, ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி, இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
:)
நல்லாருக்கு சக்தி!
//கந்தகமிட்ட காகிதமாய்
வெந்து உலர்ந்தது நெஞ்சம்
உணர்வுகளின் மௌன மறுகல்
ஊமை மலர்களின் மௌன விகசிப்பாய்
மெல்ல மெல்ல குறைந்தது விசும்பல்கள்//
பொங்கி அடங்கும் புலர்வு...
அழகாய் அசத்தல் கவிதை சக்திக்கா.. வாழ்த்துகள்...
கவிதை சூப்பர்ரோ சூப்பர் வாழ்த்துகள்
ஆஅவ்வ்வ். சக்தியக்கா .... :)) ம்ம் நடத்து நடத்து
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
www.mytitbits.com
மீண்டும் வந்தாச்சா
ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு
அருமை
chellam kavithai nalla iruku ma
rompa naal kazichi mendum sakthi-in kavithai arumai
அருமை,அருமை.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
கவிதை...உணர்வு கொதித்துப் பின் அடங்கையிலும் கண்ணீர்தானோ !
உண்மையிலேயே நீங்க சக்தி தான்!
பொளக்கறீங்க பாஸூ...!
நன்றி புனிதா
நன்றி விக்கி
நன்றி கதிர் அண்ணா
நன்றி வசந்த்
நன்றி நேசன் அண்ணா
நன்றி ராஜாண்ணா
நன்றி சீமான்
நன்றி குரு
நன்றி ஹேமா
நன்றி குமார்
நன்றி மயில்
நன்றி ஜெசிகா
நன்றி அபு அண்ணா
நன்றி காயூ
நன்றி ரவீ
நன்றி பிங்கி.
நன்றி செல்வா
Post a Comment