ஆயகலைகள் அறுபத்து நான்கோடு
அறுபத்தைந்தாய் ஆங்கிலமொழி கல்வி என்று சேர்ந்ததோ
அப்போது ஆரம்பித்தது எங்களின் அவஸ்தை....
அனைத்து பெற்றோர்களுமே
ஆங்கில மீடியத்தில் எங்கள்
அன்பு செல்வங்களை சேர்க்க
ஆசை கொள்கின்றோம்....
கான்வென்ட்களின் வாசல்களில் தவமிருக்கின்றோம் விளைவு
கல்வி நிறுவனங்கள் கமர்சியல் சென்டர்களாகிவிட்டது
L.K.G. யில் சேர்க்க 50000 நன்கொடை அதிலிருத்து
பொறியியல் கல்லூரிக்கு 15 லகரம் வரை
என தாரை வார்க்கின்றோம்.....
எங்களின் எதிர்கால கனவுகள்
நிஜமாகிட வேண்டும் என
நிகழ்காலத்தில் நிம்மதியிழந்து தவிக்கும்...
எங்களை கல்வி கட்டணங்களிலிருந்து
காப்பாற்றபோவது யார்????
21 comments:
யாருமில்லை :((
ஒரு பள்ளிக்கூடம் கட்டலாமே!
கான்வென்ட்களின் வாசல்களில் தவமிருக்கின்றோம் விளைவு
கல்வி நிறுவனங்கள் கமர்சியல் சென்டர்களாகிவிட்டது
இப்போதைக்கு சூடான பிசினஸ் இதுதான். (ஆனால் தமிழக அரசு ரொம்ப சீரியஸா(????) கண்காணிக்கிறதா கேள்வி, நல்லது நடந்தா சரி)
யாருமில்லை... நம்மிடையேயுள்ள அதிக அதிக எதிர்ப்பார்பிலிருந்து நாமும் நம் குழந்தைகளும் விடுதலைப்பெறும் வரை
மக்களின் அறியாமை , பயம் இரண்டும் காசாகிறது :-(
ஏதோ ஒரு இனம் புரியாத தாக்கத்தை என்னுள் இந்த கவிதை ஏற்படுத்தியது...
நன்றி...
:(((
இதுக்கு தாங்க ஊர் பக்கம் வர பயமா இருக்கு...
நம்ம அவஸ்தையை அழகா கவிதை வடிவுல சொல்லிருக்கீங்க...
நல்லாயிருந்தது....
ரசித்தேன்...
:-(
வர்த்தமாகி விட்டது இன்றைய கல்வி....அத்தியாவசியம் அறிந்தவுடன் அறியாமை தெளிந்தவுடன் இவர்கள் ஆட்சி கொடிக்கட்டி பறக்கிறது....
நாமும் சளைத்தவர்கள் அல்ல...பள்ளியின் நிலை அறிந்தா சேர்க்கிறோம் தரம் அறிந்து அல்லவா? பள்ளித் தரம் அறிந்து அல்ல நம் பொருளாதார தரம் பிறர் அறிய நாம் பெருமை பட அடுத்தவர் பொறாமைப் பட நாம் தான் திருந்தனும் பிறகு அவர்களை திருத்தனும் நல்ல டைமிங் பதிவு சக்தி....
ஆங்கிலமே ஒரு மீடிய்யா அதுல ஏன் குழந்தைகளை சேர்க்கணும்
குழந்தைகளை தமிழ் வழி கல்வி படிக்க கற்றுத்தர வேண்டும்
வேற யாரு.. சக்திதான் காப்பத்தனும்
எங்களை கல்வி கட்டணங்களிலிருந்து
காப்பாற்றபோவது யார்???
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
//எங்களை கல்வி கட்டணங்களிலிருந்து
காப்பாற்றபோவது யார்???? //
நல்ல கேள்வி நண்பா
இதற்கு தொடர்புள்ள என்பதிவு
காசுகேத்த கல்வியாம்!..
சமீப காலங்களில்தான் கல்விக்கட்டண உயர்வை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. இங்கு மட்டுமல்ல; கேரளத்தில் கூட..
தீர்வு அரசு கையில்தான் இருக்கிறது.. இதற்கு ஊடகங்களும் துணைநிற்கவேண்டும்.
யாருமில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது :(
கல்வி நிறுவனங்கள் அனைத்துமே பண முதலைகளாக மாறிய பிறகு நாம் என்ன செய்வது :(
niyaayamaana kavalai nallaa irukku akkaa
//யாருமில்லை :((//
சரியான கூற்று...
ரஜினிகாந்த் இல்லேன்னா ஷங்கர் சார் இவங்க பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...:-))))
கல்வி வர்த்தகமாக ஆகிவிட்டது.
அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன்
எங்களை கல்வி கட்டணங்களிலிருந்து
காப்பாற்றபோவது யார்????
பகவான் பேசுவதில்லை பக்தியும் குறைவதில்லை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
Post a Comment