
பிரியம் சுமக்கும் சொற்கள்
கொண்டு உனக்காய்
வடிப்பேன் ஒரு கவிதை....
மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட
மனதின் மென்மைகளை
அதில் பொதித்து
நீ அண்மிக்கையில்
பரிசளிப்பேன்
வெட்கம் குமிழ் குமிழாய்
உடைத்தபடி......
உன் நயன பாஷைகள் கண்டு
அந்தரங்கத்தில் மலரும்
சித்திரங்களின் மொழி
நானறிவேன்.....
மென்று விழுங்கும்
பார்வையுடன் நீ
என் முன் நிற்க
எல்லாம் புரிந்தும்
ஏதுமறியாச் சிறுமியாய்
நான் நிற்பேன்....
மறுதலிக்கப்படும் அன்பின் வலி
என்றும் நான் உணராதிருக்கவேண்டும்
என பிரார்த்தித்துக்கொண்டே.....
நன்றி : திண்ணை
18 comments:
காதல் - கவிதை பேசுகிறது... அழகாக.
மறுக்கப்படும் அன்பின் வழி...
உணர்வு பூர்ணமான நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி தமிழ் உதயம்
வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி
எளிமையாகவும் அழகாகவும் இருக்கின்றது
மிக அழகு சக்தி! மறுதலிப்பின் வலி எப்போதுமே கொடுமைதான்
நன்றி ஜமால் அண்ணா
நன்றி பாலாஜி சரவணா
வாழ்த்துகள் :-)
சக்தி, நல்லாருக்கு.
பிரியம் சுமக்கும் சொற்கள், ஆழமான மனதின் உணர்வுகளைக் காட்டி நிற்கின்றன. வாழ்த்துக்கள்.
இத்தனை அன்பை மறுதலிக்க எந்த மனம்தான் முன்வரும்? அழகான கவிதை... காதலாய்! பிரமாதம் சக்தி.
மறுதலிப்பெனத் தெரிந்துகொண்டே காதலிப்பது கொடுமை !
மறுதலிக்கப்படும் அன்பின் வலி
என்றும் நான் உணராதிருக்கவேண்டும்
என பிரார்த்தித்துக்கொண்டே.....
"பிரியம் சுமக்கும் சொற்களால்..... //
அருமை. வாழ்த்துக்கள்.
கவிதை அழகு
வாழ்த்துக்கள்
http://specialdoseofsadness.blogspot.com/
add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...
add tis movie blog too in ur google reader
http://cliched-monologues.blogspot.com/
maruthalippin vali konjam kadinam thaan. hmmmmmm niraya ve kadinam thaan...
மறுதலிக்கப்படும் அன்பின் வலி
என்றும் நான் உணராதிருக்கவேண்டும்
என பிரார்த்தித்துக்கொண்டே.....
fantastic. :)
Post a Comment