Monday, February 7, 2011

தனிமையில் அழல்.....


இது காறும் என் உலகில்
இது போன்ற நிகழ்வுகளே அதிகம்....

என் அன்பு அற்பமாகவும்
என் அக்கறை அவமதிப்பாகவும்
என் நேசம் வேஷமாகவும்
என் பாசம் பைத்தியக்காரத்தனமாகவும்....
என் கருத்துகள் கர்வத்தின் வெளிப்பாடாகவும்
உங்களுக்கு தோன்றிடலாம்....

அவரவர் உலகம்
அவரவர்க்கான கோணங்களில்
அவரவர்க்காய்......

உங்களுக்கான பாதையில்
உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....

என் வீட்டு தோட்டத்தில்
என் கரம் பிடித்து நடக்க
காத்திருக்கும் இரு சிறு
வண்ண மலர்களின்
ஸ்பரிசம் போதும் எனக்கு
விட்டுவிடுங்கள் தயை கூர்ந்து
விலகிச்செல்லுங்கள்.......

31 comments:

வசந்தா நடேசன் said...

//விட்டுவிடுங்கள் தயை கூர்ந்து
விலகிச்செல்லுங்கள்....//

தனிமையின் கொடுமை!!

rvelkannan said...

நல்லா இருக்கு சக்தி

Prabu M said...

தனிமை ஏற்படுவது வலி...
தனிமைப்படுத்தப் படுவது அதைவிட வலி..
தனிமையை நானே ஏற்படுத்திக்கொள்வதுகூட நிகழ்கிறது அதில்கூட ஒரு தனி வலிதான்....
எனக்கென்னவோ இந்தக் கவிதை அத்தனை வலிகளுக்கும் ஆறுதலாகவே தெரிகின்றது...
நைஸ்...

Yaathoramani.blogspot.com said...

தனிமையின் அழலை உணர்ந்தேன்
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

நல்லாருக்குடா சக்தி.

individuality!

it walks. it leads!

ஹேமா said...

சக்தி...கவிதை தனிமை வாழ்வின் வலி சொல்கிறது.அடிக்கடி எழுதுங்கள் குறையும் !

R. Gopi said...

சக்தி, நல்லாருக்கு பதிவு

Chitra said...

Superb! :-)

வினோ said...

/ இரு சிறு
வண்ண மலர்களின் /

un kavithaiyaiyum serththukko...

சீமான்கனி said...

யாரையும் நெருங்கவிடாத தனிமையின் வலி...
அவஸ்தையின் அழகு...
வாழ்த்துகள் சக்திக்கா ...

சுசி said...

//அவரவர் உலகம்அவரவர்க்கான கோணங்களில்அவரவர்க்காய்......
உங்களுக்கான பாதையில்உங்களின் நடையைநான் எப்போதும்தடுக்கப்போவதேயில்லை.//

:)

நல்லாருக்கு சக்தி.

Thenammai Lakshmanan said...

அவரவர் உலகம்
அவரவர்க்கான கோணங்களில்
அவரவர்க்காய்......


// சரியா சொல்லி இருக்கீங்க சக்தி.. ஹ்ம்ம்

நட்புடன் ஜமால் said...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாயிருக்கு சக்தி...

ஆனந்தி.. said...

//உங்களுக்கான பாதையில்
உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....//

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது சக்தி...unique ஆ யோசிக்க முடிகிறவங்களுக்கு தான் இப்படி ஒரு matured மனநிலை வரும்னு நம்புறேன்..இல்லாட்டி எதிர்பார்ப்பிலேயே சிக்கி போவது தான் உண்மை...சில தனிமைகள் கொடுமை என்றாலும்..எதிர்பார்ப்பில் இருந்து விலகி வரும்போது அந்த தனிமையும் சுகம் தாண்டா ..இல்லையா ஷக்தி...??

போளூர் தயாநிதி said...

//அவரவர் உலகம்அவரவர்க்கான கோணங்களில்அவரவர்க்காய்......
உங்களுக்கான பாதையில்உங்களின் நடையைநான் எப்போதும்தடுக்கப்போவதேயில்லை.////விட்டுவிடுங்கள் தயை கூர்ந்து
விலகிச்செல்லுங்கள்....// பாராட்டுகள் நல்ல சாட்டைஅடி இது போன்ற வர்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்களுக்கு நல்ல அறிவுரை

சத்ரியன் said...

சக்தி,

இயற்கையுடனான உறவே மகிழ்சியானது. பூக்களே போதும்...!

logu.. said...

\\என் அன்பு அற்பமாகவும்
என் அக்கறை அவமதிப்பாகவும்
என் நேசம் வேஷமாகவும்
என் பாசம் பைத்தியக்காரத்தனமாகவும்....
என் கருத்துகள் கர்வத்தின் வெளிப்பாடாகவும்
உங்களுக்கு தோன்றிடலாம்....\\

Entha koomuttai sonnathu?
mmm.. valigal ariya sirupillai avargal.

romba nalaikapram arumaiyana kavithai.

ஆயிஷா said...

நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்

Thanglish Payan said...

நல்லா இருக்கு!!!!!!!!!!!!

Sugirtha said...

உங்களின் நடையை
நான் எப்போதும்
தடுக்கப்போவதேயில்லை.....


என் வீட்டு தோட்டத்தில்
என் கரம் பிடித்து நடக்க
காத்திருக்கும் இரு சிறு
வண்ண மலர்களின்
ஸ்பரிசம் போதும் எனக்கு//

அருமையான வரிகள்! ரொம்ப நல்லா இருக்குங்க...

கீறிப்புள்ள!! said...

வரிகளில் உங்கள் வலி தெரிகிறது!!
/இரு சிறு வண்ண மலர்களின் ஸ்பரிசம்//
எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்..

R. Gopi said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

jayakumar said...

yen ivvalavu sogam?

sakthi said...

நன்றி வசந்தா நடேசன் முதல் கருத்திற்கு

sakthi said...

நன்றி வேல் கண்ணன் முதல் வருகைக்கு

sakthi said...

நன்றி பிரபு புரிந்து கொண்டமைக்கும் உங்கள் கருத்திற்கும்

sakthi said...

நன்றி ரமணி

sakthi said...

நன்றி பா ரா அண்ணா

sakthi said...

நன்றி ஹேமா

sakthi said...

நன்றி கோபி
நன்றி சித்ரா
நன்றி சீமான் கனி
நன்றி வினோ
நன்றி சுசி
நன்றி தேனம்மை
நன்றி ஜமால் அண்ணா.
நன்றி பிரஷா
நன்றி ஆனந்தி
நன்றி தயானிதி
நன்றி சத்ரியன்
நன்றி லோகு
நன்றி ஆயிஷா
நன்றி தங்கிலிஷ்
நன்றி சுகிர்தா
நன்றி பிரவி