Saturday, October 30, 2010

காவியுடைக் கள்வர்கள்


அண்ட சராசரங்கள் எம்

ஆளுகைக்கு கீழ் என்பன் தமை

அண்டி நிற்போர்க்கு

ஆனந்தமே எல்லை என்பன்.....

சிந்தாந்த செதுக்கல்களை நம்

சிந்தைக்கு தெளித்திட்டு

சிற்றின்பத்தில் மூழ்கும்

அற்பப் பதர்கள் இவர்கள்.....

கஞ்சாவும் கொகேயினும் முகர்ந்து

பிரம்மத்தை அறிந்ததாய்

பினாத்திடும் பித்தர்கள்.....

களைந்தொழிக்கவேண்டும்

கபால விழிகளில் மிகுந்திருக்கும்

காமத்தை அறியா கன்னியருக்கு

களவியல் பாடத்தை

கற்பிக்கும்

கள்ளவிஷக்காளான்களை

கயமையில் திளைத்திடும்

காவியுடைக்கள்வர்களை.....

17 comments:

எல் கே said...

:))

கவி அழகன் said...

கபால விழிகளில் மிகுந்திருக்கும்

காமத்தை அறியா கன்னியருக்கு

களவியல் பாடத்தை

கற்பிக்கும்

காளவிஷக்காளான்களை

எனக்கு பிடித்த கவிதை வரிகள் ரசித்த கவிதை

sakthi said...

நன்றி எல் கே

sakthi said...

யாதவன் said...
கபால விழிகளில் மிகுந்திருக்கும்

காமத்தை அறியா கன்னியருக்கு

களவியல் பாடத்தை

கற்பிக்கும்

காளவிஷக்காளான்களை

எனக்கு பிடித்த கவிதை வரிகள் ரசித்த கவிதை

நன்றி யாதவா

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு சக்திக்கா:)

sakthi said...

வித்யா said...
நல்லாருக்கு சக்திக்கா:)

நன்றி வித்யா

க.பாலாசி said...

//விஷக்காளான்கள்//
ரொம்பப் பொருத்தம்..

காவியுடைக் கயவர்கள்னு சொன்னாலும் சரிதான்..

Anonymous said...

நல்லாயிருக்கு சக்தி..

Chitra said...

அருமை.... :-)

RVS said...

கரை படிந்த காவிகள்.. நல்லா இருக்கு சக்தி ;-)

ப்ரியமுடன் வசந்த் said...

கஞ்சாவும் ஹெராயினுமா கொகேயுனுமா?

வித்யாசமான கவிதை
நல்லாருக்கு சகோ!

நட்புடன் ஜமால் said...

ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு இந்த தலைப்பு கவிதைக்கு கமெண்ட் போட

சுசி said...

//விஷக் காளான்//

சரியா சொன்னிங்க சக்தி.

priyamudanprabu said...

காளவிஷக்காளான்களை


///
நல்லாருக்கு சக்திக்கா:)

logu.. said...

ha..ha..

Neththiyadinga..

Thanglish Payan said...

Diwali pattasu..

Really superb...

ஹேமா said...

தலைப்பே போதும் சக்தி !