எண்ணற்ற விரதங்கள்
பரிந்துரைக்கப்படும்
பிள்ளையற்றவளுக்காய்....
எண்ணிலடங்கா
இன்னல் தரும் பட்டங்கள்
இலவசமாய் வழங்கப்பட்டு
இதயத்தின் அடியாழம் வரை
ரணப்படுத்தப்படும்....
வித்தியாசமான வைத்தியங்கள் தரும்
விதவிதமான வாதைகளை விட
வார்த்தையம்புகள்
வலிக்கத்தைக்கும்....
வாராது வந்த மாமணியே
என் மணி வயிற்றின் தாழ் திறப்பது
எப்போது என
ஏக்கங்களை சுமந்து
காத்திருப்பவளுக்கு மட்டுமே தெரியும்
காத்திருத்தலின் வலியும்
காலியாய் கிடக்கும் கருப்பையின் வலியும்....
32 comments:
ஏக்கத்தை சொன்ன கவிதை, சற்று மனவலியையும் தந்தது.
சக்தி
ரொம்ப அருமை கவிதை.. ஏக்கத்தையும் வலியையும் உணர்த்தியது
என்ன சொல்ல..
//வித்தியாசமான வைத்தியங்கள் தரும்
விதவிதமான வாதைகளை விட
வார்த்தையம்புகள்
வலிக்கத்தைக்கும்....//
:(
அப்படி யாரையாச்சும் ரீசண்டா பார்த்தீங்களோ?
பொறந்தாலும் வலி தான்....
என்ன சொல்ல சக்தி :( . அனுபவிச்சங்களுக்கு மட்டுமே புரிஞ்ச வலி இல்லை இது
அந்த வலியை அனுபவித்து இருக்கிறேன். இறை அருளால், இன்று இரண்டு பெரிய ஆசிர்வாதங்கள் என் வீட்டில் துள்ளி விளையாடுகின்றன. :-)
ஹ்ம்ம்.. நன்று.. மனதிற்குள் பாதிப்பை ஏற்படுத்தும் கவிதை..
காலியாய் கிடக்கும் கருப்பையின் வலியும்.
.வார்த்தை வலி அதிகம். .
//வயிற்றின் தாழ் திறப்பதுஎப்போது என ஏக்கங்களை சுமந்துகாத்திருப்பவளுக்கு மட்டுமே தெரியும்//
ம்ம்ம்ம் ,
கடவுளே.. வலிக்குது சக்தி.
நல்லாருக்கு சக்தி
//காத்திருத்தலின் வலியும்
காலியாய் கிடக்கும் கருப்பையின் வலியும்....//
வலி(மை)யான வரிகள்....ம்ம்ம்
காத்திருத்தலின் வலி.. வலியது..
நல்லா இருக்கு சக்தி!
நல்ல இருக்கு அண்ணி... :)
வலியை மிக நுட்பமாகக் கூறியுள்ளீர்கள்..
சிறப்பான கவிதை சக்தி. தொடருங்கள்.
கவிதையின் “கரு” அருமை. வலி மிகக் கொடுமை!
அருமையா இருக்கு
காத்திருப்பு கஷ்டம்தேன், அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்
கருப்பையற்றவனின் வலி கேட்டதுண்டா
ஏக்கத்தையும் வலியையும் பிரதிபலிக்கிறது கவிதை.
சக்தி,
தொடர்ந்து எழுதுங்கள் சக்தி. வாழ்த்துகள்.
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
Miga kodumayana vali sollum varigal.. Unarvu poorvamana ezhuthu vazhthukal.
\\ நட்புடன் ஜமால் said...
கருப்பையற்றவனின் வலி கேட்டதுண்டா \\
Rippeeeetttuuuuu......
வித்தியாசமான வைத்தியங்கள் தரும்
விதவிதமான வாதைகளை விட
வார்த்தையம்புகள்//
வாதைகளா? வதைகளா ?
எது எப்படியோ அது உண்மை என்று மட்டும் அனுபவத்தில் நிறையக் கண்டிருக்கிறேன் !
ஆமா சொல்ல மறந்திட்டேன் ! கவிதை சூப்பர்
நன்றி தமிழ் உதயம்
நன்றி எல் கே
நன்றி வினோ
நன்றி வசந்த்
நன்றி தமிழரசி
நன்றி தாரணி பிரியா
நன்றி சித்ரா
நன்றி பால்
நன்றி நிலாமதி
நன்றி ரோகிணி சிவா
நன்றி சுசி
நன்றி நேசமித்ரன் அண்ணா
நன்றி ஆரூரரே
நன்றி பாலாஜி
நன்றி சிவாஜி சங்கர்
நன்றி செந்தில்
நன்றி மனவிழியாரே
நன்றி உழவரே
நன்றி அப்துல் மாலிக் அண்ணா
நன்றி ஜமால் அண்ணா
நன்றி அன்பென்று கொட்டு முரசே
நன்றி சிந்தியா
நன்றி லோகு
நன்றி மயாதி
கொஞ்சம் விரக்தியை உணர்கிறேன்.ஆனாலும் கவிதை நன்றாக இருக்கிறது.வாழ்க வளமுடன்.
ரொம்ப அருமை கவிதை..
படிக்கும் போது மனது வலிக்குது சக்தி
Post a Comment