முகமறியாத போதும்
எனை முன்னிறுத்தி.....
பொய் வார்த்தைகளாலும்
நயவஞ்சகங்களாலும்
ஓயாத துரோகங்களாலும் நிறைக்கப்பட்ட
அழுகிய புன்னகையின் துர்நாற்றம்
கண்ணுறுகையில்.....
அடிபட்டு ஓலமிட்டு பின் அடங்கும்
மனம் அதனிடம் சப்திப்பதற்கு
மொழியின்றி ஸ்தம்பிக்கிறேன்....
பனிப்புற்களில் பாதம் பதித்து
ஏறுவெயிலில் நான் நடக்க
கசியும் மோனவெளியில்
கதிரவனின் வெளிச்சத்தில்
நிழல் அழிவதை
கண்டு துக்கம் பீறிட
மரத்திடும் நெருப்புக் குளியல்.....
32 comments:
/ அழுகிய புன்னகையின் துர்நாற்றம்
கண்ணுறுகையில்..... /
/ மரத்திடும் நெருப்பு குளியல்..../
சக்தி இவ்வரிகள் அருமை...
வரிகள் ஆழமா இருக்கு சக்தி.
உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருகேன்.
//அழுகிய புன்னகையின் துர்நாற்றம்
கண்ணுறுகையில்....//
ஆழமான வரிகள் சக்தி
//வெளிச்சத்தில்நிழல் அழிவதை கண்டு துக்கம் பீறிடமரத்திடும் நெருப்பு குளியல்...
அருமை
//மரத்திடும் நெருப்பு குளியல்...//
ம்ம , மரத்திடும் நல்ல பயன்பாடு
சுப்பர் வரிகள் பல பொருள் காட்டி நிக்கிது சிந்திக்க வைக்கிறது
அழுகிய புன்னகையின் துர்நாற்றம் புதுவார்த்தை யோசிக்கையில் உணரமுடிகிறது புன்னகையின் கொடுரம்..உனக்கே உரிய நடை எழுத்து சக்தி....
என்னா ஒரு டெரர் கவிதை
:)
நல்ல முயற்சி வாழ்த்துகள்
நல்ல முயற்சி வாழ்த்துகள்
வாழ்த்துகள்...
//பொய் வார்த்தைகளாலும்
நயவஞ்சகங்களாலும்
ஓயாத துரோகங்களும் நிறைந்த//
ஆலும்ங்ற விகுதி தொடர்ச்சியா வரணும்... ஆகவே, துரோகங்களாலும்னு வரணும்...
அதை, அப்படி மாத்தினாலும் இடிக்கும்.... ஆலும்ங்ற விகுதி, செயப்பாட்டு வினையோடதான் ஒட்டி வரும்.... அதாவது,
”பொய் வார்த்தைகளாலும்
நயவஞ்சகங்களாலும்
ஓயாத துரோகங்களாலும் நிறைக்கப்பட்ட.....”
அல்லது, உம்கார விகுதியோட செய்வினையாக் குறிப்பிடலாம்...
”பொய் வார்த்தைகளும்
நயவஞ்சகங்களும்
ஓயாத துரோகங்களும் நிறைந்த...”
இஃகி, எது வசதி??
//நெருப்பு குளியல்....//
இரண்டு வல்லினம் சேரும் போது, வலி மிகும்ன்னு சொல்லுது, ஒற்று விதி!
நெருப்புக் குளியல்!!!
" Nerupu kuliyal.."
Sugamai irukku.
Blog Design innum jorunga.
இது கொலைவெறி கவுஜையா ?
பழமைபேசியாரே நன்றி மாற்றி விட்டேன்...
//sakthi said...
பழமைபேசியாரே நன்றி மாற்றி விட்டேன்...
//
replacement varies from correction... நீங்க செய்திருக்கிறது... திருத்தம்... அறவே, வேறொன்னைப் போட்டு இருந்தா, அது மாற்றி அமைக்கிறது.... ஆகவே, திருத்தி விட்டேன் அப்படின்னு சொல்றதுதான் சரி வரும்....
அப்புறம், அந்த நெருப்புக் குளியல்?
ஆமாங்க... இன்னிக்கு கொஞ்சம் ஆணி குறைவு... உங்க இடுகை நம்ம கண்ல அகப்பட்டிடுச்சி... பொறுத்துகுங்க!!!
நன்றிங்க திருத்திவிட்டேன்
நெருப்புக்க் குளியல்
அனலின் அர்ச்சனையாய் வரிகள் அசத்துங்க சக்திகா...
அவ் டெரர் கவிதை :)
கொஞ்சம் கொஞ்சம் புரியுது விளக்கம் வழக்கம் போல சொல்லிடுங்க சரியா :)
ஓ நீங்க கவிதாயினியா..
தெரியாம வந்துட்டேன். மன்னிச்சுருங்க:))
அருமை..!
கண்ணுறுகையில்
சப்திப்பதற்க்கு//
அர்த்தம் சொல்லுங்க சக்தி எனக்கு தெரியலை!!
ஆழமான வரிகளுடன் இன்னொரு சிறப்பான கவிதை.
/பொய் வார்த்தைகளாலும்நயவஞ்சகங்களாலும்ஓயாத துரோகங்களாலும் நிறைக்கப்பட்டஅழுகிய புன்னகையின் துர்நாற்றம்கண்ணுறுகையில்.....//
இவ்வரிகள் அட போட வைக்கிறது.
படமும் வரிகளும் அழகாய் .............சக்தி பிறக்கிறது
சக்தி...நெருப்புக்குளியல் அருமையான வார்த்தை.
கண்ணுறும் வார்த்தைகளைச் சப்திக்கும் வலிந்த கவிதை.
நல்லாயிருக்குங்க சக்தி..வாழ்த்துக்கள்
ஆம் குளித்து குளித்து
மரத்து தான் போய் விட்டது ...
அம்பு போல சொற்கள் தைக்கும் அழகான படைப்பு
அம்பு போல சொற்கள் தைக்கும் அழகான படைப்பு
பொய் வார்த்தைகளாலும்
நயவஞ்சகங்களாலும்
ஓயாத துரோகங்களாலும் நிறைக்கப்பட்ட
அழுகிய புன்னகையின் துர்நாற்றம்
கண்ணுறுகையில்....//
வலித்தது சக்தி..
அருமையான வரிகளில் ஆழமான உணர்வுகள். எனது ப்லாக் பக்கம் வந்ததற்கு நன்றி.
உங்கள் கவிதை நல்லா இருக்குது. (பின்தொடர்கிறேன்.) வாழ்த்துக்கள்!
Post a Comment