யார் சொல்வது நாம்
அடிமைத்தளையிலிருந்து
விடுபட்டுவிட்டோமென.....
அழுகிச்சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவெறுப்பாய் நிற்கின்றது
நம் நாட்டு அரசியல்.....
சொந்தமக்களை சோற்றுக்கு
அலையவிட்டுவிட்டு அன்னியனை
ஆளவைத்து அழகு பார்க்கின்றோம்
அதிகாரங்களுக்கு அடிமைப்பட்டு....
விதேசிகளை துரத்திவிட்டதாய்
பீற்றிக்கொண்ட சுதேசிகள் இன்று
விதேசி பொருட்களுக்கு அடிமையாய்....
ஜாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் மொழியென்றும்
நமை நாமே பகுபடுத்தி திரிகின்றோம்
மூளையிருந்தும் அடிமையாய்.....
போதும் இந்தியனேபோதும்
நிலைகெட்டு மானம்கெட்டு
அலைந்து திரிந்தது போதும்
புறப்பட்டு வா
புதிய பாரதம் அமைப்போம்
உண்மையான சுதந்திர
காற்றை சுவாசித்திற்போம்..
22 comments:
///சொந்தமக்களை சோற்றுக்கு
அலையவிட்டுவிட்டு அன்னியனை
ஆளவைத்து அழகு பார்க்கின்றோம்
அதிகாரங்களுக்கு அடிமைப்பட்டு....///
உண்மையை மிக சரியாக சொல்லி இருக்கீங்க...!
நன்றி தமிழ் அமுதன்
:)))
போட்டுட்டேன்
///போதும் மனிதா போதும்
நிலைகெட்டு மானம்கெட்டு
அலைந்து திரிந்தது போதும்
புறப்பட்டு வா
புதிய பாரதம் அமைப்போம்
உண்மையான சுதந்திர
காற்றை சுவாசித்திற்போம்..///
’’போதும் மனிதா போதும்’’
இதில் ’மனிதா’ என்பதை விட ’’இந்தியனே’’ என இருந்தால் இன்னும் சரியாய் பொருந்தி இருக்குமோ..?
/ புறப்பட்டு வா
புதிய பாரதம் அமைப்போம்
உண்மையான சுதந்திர
காற்றை சுவாசித்திற்போம்../
இப்படி அமைந்தால் சொர்க்கம் இங்க தான் சக்தி...
ஆனா, உண்மை வேறல்லவா :(
தமிழ் அமுதன் said...
///போதும் மனிதா போதும்
நிலைகெட்டு மானம்கெட்டு
அலைந்து திரிந்தது போதும்
புறப்பட்டு வா
புதிய பாரதம் அமைப்போம்
உண்மையான சுதந்திர
காற்றை சுவாசித்திற்போம்..///
’’போதும் மனிதா போதும்’’
இதில் ’மனிதா’ என்பதை விட ’’இந்தியனே’’ என இருந்தால் இன்னும் சரியாய் பொருந்தி இருக்குமோ..?
சரி மாத்திட்டா போகுது
இன்னும் எத்தனை நாள் இப்படி தணியாத தாகத்தோடு ?
நான் கிளம்பி வர ரெடி அட்ரஸ் அனுப்புங்க
---------------
ஸீரியஸ் போஸ்ட்டுக்கு இப்படி காமெடியாய் கமெண்ட் போட்டேன்னு நினைக்காதீங்க, கேட்டு கேட்டு சொல்லி சொல்லி சுதந்திரம் என்பதே காமெடியாய் போச்சு
சொந்தமக்களை சோற்றுக்கு
அலையவிட்டுவிட்டு அன்னியனை
ஆளவைத்து அழகு பார்க்கின்றோம்
அதிகாரங்களுக்கு அடிமைப்பட்டு....///
sariya than solli irukada
என்று தணியுமிந்த சுதந்திர தாகம்...
என்று தணியுமிந்த அடிமையின் மோகம்..
வேறு என்ன சொல்லிவிட முடியும்.....
புதிய பாரதம் அமைப்போம்
உண்மையான சுதந்திர
காற்றை சுவாசித்திற்போம்.///
இந்த வரிகள் மிகவும் அருமை
good writing!
//விதேசிகளை துரத்திவிட்டதாய்
பீற்றிக்கொண்ட சுதேசிகள் இன்று
விதேசி பொருட்களுக்கு அடிமையாய்....
ஜாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் மொழியென்றும்
நமை நாமே பகுபடுத்தி திரிகின்றோம்
மூளையிருந்தும் அடிமையாய்.....//
கவிதை சிறப்பாய் வந்திருக்கு சக்திக்கா விடுதலை வேண்டிய விழிகளுக்கு விடியட்டும் நாளை பொழுது...
ரொம்ப நல்லா இருக்கு உங்க கவிதை
”சக்தி”மிகு கவிதை.
கவிதை சவுக்கடி...
பாராட்டுக்கள்.
என்னவோ பழைய சக்தி மிஸ் ஆகுதே
ஆமாம் வேண்டும்தான் விடுதலை..பெற்றுத்தர யாராவது இருக்கிறார்களா? இன்றைய உணவிற்கு நான்தான் உழைக்கவேண்டும் என்ற சுயநலம் எனக்குமிருக்கிறது.
நல்லா இருக்குங்க.
tho vanthutten akkaa puthiya bharatham amaippom hahahha
super ah irukku akkaa
Akkaaaaaa Adutha Kavithai Romba soft Ah Eyarkaiyai pathi eluthungalen plsssssss
aha shakthi kalakkals
Post a Comment