மெல்ல இரவு சரிந்து
மேகம் தரையிறங்கியது....
மண் தரையிலோ
மழையின் கால்தடங்கள்....
மஞ்சள் வைரங்களாய்
மவுனமொழி பேசும் நட்சத்திரங்கள்...
இவையணைத்தையும்
இயல்பான ரசனையுடன் குழைந்து நான்
இயற்கையுடன் ஒன்றிட்டேன்....
காற்றும் மழையும்
தென்றலும் தூரலும்
பனியும் குளிரும் வாடையுமாய்
எனை தழுவிச்சென்றது அருவி....
எரியும் இருளினூடாக
அருவி நீரோடு மிதந்தழிந்தது
என் இன்ன பிறவும்!!!!
38 comments:
படம் மிரட்டல் யாத்தே...
இதுக்கு எதிர் கவுஜ எழுத வால் அழைக்கப்படுகிறார்...
கவிதை இரவு நேரத்துல எழுதுனதுலா இப்படியா? இல்லை எழுதியதே இரவு நேரத்தினால் என்பதாலா?
மழையின் கால் தடங்கள் மண்ணிலா...உவமையில் கற்பனா சக்தி எங்கோ பறக்கிறது...!
ஸ்பரிசங்கள் ,மழையின் கால்தடம்,மஞ்சள் நட்சத்திரம்....அழகு உவமை உங்கள் வீட்டு மொட்டைமாடி இரவில் அருவியும் அழகோ அழகு சக்திக்கா வாழ்த்துகள்...,
கவிதையில் இது அதுன்னு வரிகள் எடுத்து அருமை என்ற சொல்ல முடியவில்லை.. ஒவ்வொரு வார்த்தையும் வரியும் அருமை சக்தி...
மென்மையான கவிதைக்கு நன்றி தோழி...
”காற்றும் மழையும்
தென்றலும் தூரலும்
பனியும் குளிரும் வாடையுமாய்
எனை தழுவிச்சென்றது அருவி....
எரியும் இருளினூடாக
அருவி நீரோடு மிதந்தழிந்தது
என் இன்ன பிறவும்!!!!”
அருமையான கவிதை ஆனா மேலே உள்ள வரிகள் எதையோ உவமை படுத்துது அது என்னானு எனக்கு புரியல...முடிஞ்சா விளக்கவும்..
போன வருசம் 90 பதிவு இந்த வருசம் 7 தான் ரேசியோ ரொம்ப கம்மியா இருக்கே நிறைய எழுதுங்க...
அருமையான கவிதை. வாழ்த்த்துக்கள்
அருமையான கவிதை..
இந்தப் படமும் கலக்கல்..
//
மெல்ல இரவு சரிந்து
மேகம் தரையிறங்கியது....
//
சென்னை விமான நிலையத்திலே ?
சக்தி,
//எரியும் இருளினூடாக
அருவி நீரோடு மிதந்தழிந்தது
என் இன்ன பிறவும்!!!!//
...எரியும் இருள்... மிகவும் கவர்ந்த சொல்லாடல்.
அந்த இருளில் தான் எத்தனையோ(பாரதி சொன்னது போல்) குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லாமல் அழிந்தே போகின்றன.
படத்தையே வெகு நேரம் பாத்துக்கிட்டிருந்தேன்.
எங்கிருந்து பிடிச்சீங்க?
அருமை
//மண் தரையிலோ
மழையின் கால்தடங்கள்....///
அழகு...!
அக்கா ஸ்டெடியா இருங்க
:)))
கவித கவிதை கொட்டுதுங்க
கவிதை அருவியாய் பொழிகிறது
ரொம்ப அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்..
மொத்தத்தாக்கமும், அதனுடன் வார்த்தைகளை கோர்த்த விதமும் நன்றாக இருக்கிறது...
அருமை நண்பரே
ப்ரியமுடன் வசந்த் said...
படம் மிரட்டல் யாத்தே...
இதுக்கு எதிர் கவுஜ எழுத வால் அழைக்கப்படுகிறார்...
கவிதை இரவு நேரத்துல எழுதுனதுலா இப்படியா? இல்லை எழுதியதே இரவு நேரத்தினால் என்பதாலா?
ஆமா வசந்த் போன வாரம் குற்றாலத்தில் நடு நிசியில் தோன்றிய கவிதை
dheva said...
மழையின் கால் தடங்கள் மண்ணிலா...உவமையில் கற்பனா சக்தி எங்கோ பறக்கிறது...!
நன்றி தேவ் முதல் வருகைக்கு
சீமான்கனி said...
ஸ்பரிசங்கள் ,மழையின் கால்தடம்,மஞ்சள் நட்சத்திரம்....அழகு உவமை உங்கள் வீட்டு மொட்டைமாடி இரவில் அருவியும் அழகோ அழகு சக்திக்கா வாழ்த்துகள்...
நன்றி சீமான் ஆனால் இது மொட்டை மாடியில் உதித்த கவிதையல்ல குற்றாலத்தில் எழுதியது
வினோ said...
கவிதையில் இது அதுன்னு வரிகள் எடுத்து அருமை என்ற சொல்ல முடியவில்லை.. ஒவ்வொரு வார்த்தையும் வரியும் அருமை சக்தி...
மென்மையான கவிதைக்கு நன்றி தோழி...
நன்றி வினோ ரசித்தமைக்கு
டுபாக்கூர்கந்தசாமி said...
”காற்றும் மழையும்
தென்றலும் தூரலும்
பனியும் குளிரும் வாடையுமாய்
எனை தழுவிச்சென்றது அருவி....
எரியும் இருளினூடாக
அருவி நீரோடு மிதந்தழிந்தது
என் இன்ன பிறவும்!!!!”
அருமையான கவிதை ஆனா மேலே உள்ள வரிகள் எதையோ உவமை படுத்துது அது என்னானு எனக்கு புரியல...முடிஞ்சா விளக்கவும்..
போன வருசம் 90 பதிவு இந்த வருசம் 7 தான் ரேசியோ ரொம்ப கம்மியா இருக்கே நிறைய எழுதுங்க...
கந்தசாமி அந்த இன்னபிறவும்க்கு அர்த்தம் அருவியில் குளித்தால் நம்மிடம் அழியும் என்று முன்னோர் சொன்னது. அவ்வளவே
இந்த வருஷம் இப்போ தானே எழுதவே ஆரம்பிச்சு இருக்கேன் சீக்கிரம் நிறைய எழுத முயல்கிறேன் நண்பா
மதுரை சரவணன் said...
அருமையான கவிதை. வாழ்த்த்துக்கள்
நன்றி சரவணா
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
அருமையான கவிதை..
இந்தப் படமும் கலக்கல்
நன்றி செந்தில்
நசரேயன் said...
//
மெல்ல இரவு சரிந்து
மேகம் தரையிறங்கியது....
//
சென்னை விமான நிலையத்திலே ?
ஆமாம் நசர் அண்ணா
சத்ரியன் said...
சக்தி,
//எரியும் இருளினூடாக
அருவி நீரோடு மிதந்தழிந்தது
என் இன்ன பிறவும்!!!!//
...எரியும் இருள்... மிகவும் கவர்ந்த சொல்லாடல்.
அந்த இருளில் தான் எத்தனையோ(பாரதி சொன்னது போல்) குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லாமல் அழிந்தே போகின்றன.
படத்தையே வெகு நேரம் பாத்துக்கிட்டிருந்தேன்.
எங்கிருந்து பிடிச்சீங்க?
நன்றி சத்ரியன் ரசித்தமைக்கு
படம் எப்பவும் போல் கூகிள் தேடல் தான்
ANU said...
அருமை
நன்றிடா அனு
நன்றி தமிழமுதன்
நன்றி சிட்டுக்குருவி
A.சிவசங்கர் said...
கவித கவிதை கொட்டுதுங்க
நன்றி சிவசங்கர்
VELU.G said...
கவிதை அருவியாய் பொழிகிறது
நன்றி வேலு
பதிவுலகில் பாபு said...
ரொம்ப அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்..
நன்றி பதிவுலகில் பாபு
க.பாலாசி said...
மொத்தத்தாக்கமும், அதனுடன் வார்த்தைகளை கோர்த்த விதமும் நன்றாக இருக்கிறது...
நன்றி பாலாசி
Dr. Srjith. said...
அருமை நண்பரே
நன்றி டாக்டர் ஸ்ரீஜித்
purinthatha sakthi ippa.....kavithaiyin suvai....un kaivannathil ikkavithaiyin vannam azhagu....
மண்ணில் மழையின் கால் தடங்கள்
மிகவும் இரசித்த வரி
மிதந்தழிந்தது என் இன்ன பிறவும் - ஹூம்
//என் இன்ன பிறவும்//
முடியும் இடத்தில் கவிதை தொடங்குகிறது சக்தி. அருமை!
மண் தரையிலோ
மழையின் கால்தடங்கள்....
//
மழையின் காலடித்தடங்களா அருமை சக்தி
கவிதையில் மெருகு கூடிருக்கிறது சக்தி வாழ்த்துக்கள்:
// மண் தரையிலோ
மழையின் கால்தடங்கள்//
அருமை
நல்லாருக்கு தோழி...
படமே பயங்கரமா கவிதையாயிருக்கு சக்தி.
//எரியும் இருளினூடாக
அருவி நீரோடு மிதந்தழிந்தது
என் இன்ன பிறவும்!!!!//
சூப்பர்....
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment