Tuesday, August 10, 2010

இதயம் ரணமானது


திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை.....

கண்ணில் உனை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது.....

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்...

33 comments:

வினோ said...

நல்ல இருக்கு சக்தி :)

பிரிவா? ஏமாற்றமா?

நட்புடன் ஜமால் said...

:(

சீமான்கனி said...

வெறுப்பு... ஏமாற்றம்.. ஏக்கம்.. பிரிவு.. சோகம்....என்னாச்சு சக்திக்கா??

ப்ரியமுடன் வசந்த் said...

தோழியே சீக்கிரம் வருவாங்க சும்மா உங்ககிட்ட கேம் ஆடறாங்கன்னு நினைக்கிறேன்..!

நசரேயன் said...

//தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்//

கவுஜ எழுதி தோழியைப் படிக்கச்சொன்னால் இப்படித்தான் ஆகும்

வினோத் கெளதம் said...

என்ன ஆச்சுங்க சக்தி வெறும் கவிதை தானா..!!

தாரணி பிரியா said...

இனிமேல கவிதை எழுத மாட்டேன்னு சத்தியம் செய்தால் தோழி திரும்பி வருவாங்க‌

தீ சுடாதா இரு மவளே நல்லா நாலு கொள்ளிக்கட்டையோட வூட்டுக்கு வரேன்

ஆதவா said...

திக்கற்ற வெளி, சூன்யம்,
திசையற்றது பிரபஞ்சம்,

தவிப்பது கிரகங்கள்
உற்றவள், உறவினர் சூரியப்பந்துகள்

சூரியப்பந்துகளுக்குள் வைத்தால் கரைத்துவிடும்
கதிர்களை மட்டும் இதயத்தில் (புவிக்கருவில்) வைத்து,
நிலநடுக்கம் கேள்

இதமாய் உணர்வாய்
(மனிதனால்) செத்துவிட்ட மனம்,
இனியெப்படி சுடும்?

இதுதானே நீங்கள் மறைத்துவைத்த மறைபொருள்?

க.பாலாசி said...

//செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்...//

ம்ம்ம்.... கவிதையாக நல்லாயிருக்கு...

Anonymous said...

periya kavingnar aagintenga sakthi....nice one

அப்துல்மாலிக் said...

வருத்தம் கலந்த வரிகள்

அருமை

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல கவிதைங்க சக்தி.

வெறுமையின் வெளிப்பாடு..

ஒரு கேள்வி.. உங்கள் பதிவுகளில் வரும் படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறதே.. எப்படி?

ஏதாவது போட்டோஷாப் வேலையா?

கவி அழகன் said...

நல்ல கவிதை but என்ன ஆச்சு

வால்பையன் said...

ரொம்ப சோகம்

:(

விக்னேஷ்வரி said...

ஏன் சோகம். அழுத்தமான கவிதை வரிகள்.

sakthi said...

வினோ said...
நல்ல இருக்கு சக்தி :)

பிரிவா? ஏமாற்றமா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை வினோ நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

சீமான்கனி said...
வெறுப்பு... ஏமாற்றம்.. ஏக்கம்.. பிரிவு.. சோகம்....என்னாச்சு சக்திக்கா?

சும்மா சீமான் இது ஒரு மீள்பதிவு அவ்வளவுதான்!!!

sakthi said...

ப்ரியமுடன் வசந்த் said...
தோழியே சீக்கிரம் வருவாங்க சும்மா உங்ககிட்ட கேம் ஆடறாங்கன்னு நினைக்கிறேன்..


அப்படித்தான் போலும் வசந்த்

sakthi said...

நசரேயன் said...
//தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்//

கவுஜ எழுதி தோழியைப் படிக்கச்சொன்னால் இப்படித்தான் ஆகும்

அட ஆமா நசர் அண்ணா

sakthi said...

வினோத்கெளதம் said...
என்ன ஆச்சுங்க சக்தி வெறும் கவிதை தானா..!!

வெறும் கவிதை தான் பா

sakthi said...

தாரணி பிரியா said...
இனிமேல கவிதை எழுத மாட்டேன்னு சத்தியம் செய்தால் தோழி திரும்பி வருவாங்க‌

தீ சுடாதா இரு மவளே நல்லா நாலு கொள்ளிக்கட்டையோட வூட்டுக்கு வரேன்

கொலவெறியா தாபி

sakthi said...

ஆதவா said...
திக்கற்ற வெளி, சூன்யம்,
திசையற்றது பிரபஞ்சம்,

தவிப்பது கிரகங்கள்
உற்றவள், உறவினர் சூரியப்பந்துகள்

சூரியப்பந்துகளுக்குள் வைத்தால் கரைத்துவிடும்
கதிர்களை மட்டும் இதயத்தில் (புவிக்கருவில்) வைத்து,
நிலநடுக்கம் கேள்

இதமாய் உணர்வாய்
(மனிதனால்) செத்துவிட்ட மனம்,
இனியெப்படி சுடும்?

இதுதானே நீங்கள் மறைத்துவைத்த மறைபொருள்?


அபாரம் ஆதவா

sakthi said...

க.பாலாசி said...
//செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்...//

ம்ம்ம்.... கவிதையாக நல்லாயிருக்கு...

நன்றி பாலாசி

குமரை நிலாவன் said...

கவிதை அருமை

வருத்தம் கலந்த வரிகள்

Anonymous said...

ரொம்ப சோகம்

sakthi said...

தமிழரசி said...
periya kavingnar aagintenga sakthi....nice one

நன்றி தமிழரசியாரே

sakthi said...

அப்துல்மாலிக் said...
வருத்தம் கலந்த வரிகள்

அருமை

நன்றி அப்துல் அண்ணா

sakthi said...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
நல்ல கவிதைங்க சக்தி.

வெறுமையின் வெளிப்பாடு..

ஒரு கேள்வி.. உங்கள் பதிவுகளில் வரும் படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறதே.. எப்படி?

ஏதாவது போட்டோஷாப் வேலையா?

அப்படி எல்லாம் எதுவும் இல்லை செந்தில் கொஞ்சம் படங்களுக்கு முக்கியத்துவம் குடுத்து கூகிளில் தேடுவேன் அவ்வளவே!!!

sakthi said...

யாதவன் said...
நல்ல கவிதை but என்ன ஆச்சு

ஒன்றும் இல்லை யாதவா இது கவிதை அவ்வளவே

sakthi said...

நன்றி வால்பையன்
நன்றி விக்கி
நன்றி குமரை நிலவன்
நன்றி ஆனந்த்

சத்ரியன் said...

//செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்..//

செத்துவிட்டப் பின் சுட்டால் என்ன? புதைத்தால் என்ன?

உரியவர்களுடன் மனம் விட்டு கதைத்தால் ஒருவேளை உயிர்ப்பெறலாம்.

பழமைபேசி said...

உங்க மின்னஞ்சல் தெரிவியுங்க... pazamaipesi@gmail.com

அண்ணாமலை..!! said...

சுடாதது சுட்டுவிட்டது ..
சுடுவது சுடாது.. சுட்டதனால்..!
நல்லாயிருக்குங்க உங்க கவிதை!