எவனைக்கண்டால் கண்கள் தமை மறந்துஇமைக்கமறுக்கின்றதோஎவனின் பிம்பம் எனக்கு பதிலாய் கண்ணாடியில் தெரிகின்றதோ....எவனைக்கண்டால் என் எலும்புக்குள்ளும் மஜ்ஜைக்குள்ளும்எதிர்பாராத குளிர் உண்டாகிஎல்லா உறுப்புகளின் இயக்கமும் தடைபடுகின்றதோ.....எவனின் சுவாசகரிமிலவாயு கூட கமகமக்கின்றதோ....எவனைக்கண்டால் காரணமேயில்லாமல் நாணம் கொள்கிறேனோ....எவனைக்காணும் போது வெளிச்சமும் காணாதபோது இருளும் எனை சூழ்கின்றதோ...எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோகாத்திருக்கின்றேன் அவனுக்காய்என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....
72 comments:
வரேன் :))))))
எப்படிங்க இப்படி எல்லாம், முடியல :))))))))))))
சாயங்காலம் வந்துடுவாரு இருங்கோ!
எலும்புக்குள்ளும் மஜ்ஜைக்குள்ளும்
மஜ்ஜை = bonemarrow
ம்ம்ம் ...
சிந்தனை எங்கையோ போகுதுங்கு போங்க உங்களுக்கு ...
எவனின் சுவாசகரிமிலவாயு கூட கமகமக்கின்றதோ....\\
அட என்னாங்க இது
அதி பயங்கரமா
வேதியல் வார்த்தைகள் தெரிக்குது ...
எவனைக்காணும் போது வெளிச்சமும் காணாதபோது இருளும் எனை சூழ்கின்றதோ...\\
கவிதை முழுதும் சூரியனா! ...
:)
எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....\\
காத்திருத்தல் ஒரு சுகமே
நிச்சியம் விளங்கி கொண்டு வருவார்
காதலுக்காக காதல் காத்திருத்தலும் சுகம்தான். கவிதை நல்லா இருக்கு சக்தி
யார் அந்த "எவனோ ஒருவன்" ???
செம்ம ரொமான்டிக் சக்தி கவிதை முழுவதும்.இந்த கவிதை
சாமுராய் திரைப்படத்தில் வைரமுத்துவின் வரிகளில் நித்யஸ்ரீ பாடியதை நினைவுறுத்துகிறது.
தீராத ஆசைகளெல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்
ஒரு கற்பு,கண்ணியம் கண்ணிமை தர்மம் கண்டு கொள்ளாத ஒருவன்
நான் போதும் போதும் என்னும் வகையில் புதுமை செய்யும் ஒருவன்.
நீதானா...............
எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....
எப்படி புரியாமல் போகும். நிச்சயம் புரியும்
//எலும்புக்குள்ளும் மஜ்ஜைக்குள்ளும்
மஜ்ஜை = bonemarrow
ம்ம்ம் ...
சிந்தனை எங்கையோ போகுதுங்கு போங்க உங்களுக்கு ...//
எலும்புக்குள் தானே மஜ்ஜை இருக்கின்றது.
பிறகு ஏன் எலும்புகளுக்கும் மஜ்ஜைகளுக்கும் என்று தனித்தனி ??
இப்படிக்கு,
குத்த வைத்து குற்றம் கண்டு பிடிப்போர் சங்கம்.
பூனே கிளை.
//எவனின் பிம்பம் எனக்கு பதிலாய் கண்ணாடியில் தெரிகின்றதோ....//
இந்த வரிகள் கிளாஸ்.
எலும்புக்குள் தானே மஜ்ஜை இருக்கின்றது.
பிறகு ஏன் எலும்புகளுக்கும் மஜ்ஜைகளுக்கும் என்று தனித்தனி ??\\
நாடி நரம்பு என்று சொல்லுவதில்லையா
அது போலத்தான்
எவ்வள்வு குற்றம் கண்டு பிடித்தாலும்
விளக்கம் கொடுப்போர் சங்கம்
தலைமை
சிங்கை.
நாடி வேறு..நரம்பு வேறு..சோ அதனால பிரச்சனையில்ல..
சொற்போருக்கு தயாரா ???
இப்படிக்கு,
ஏடாகூடமாக குத்த வைத்து எகத்தாளமாக யோசிப்போர் பேரவை.
வியாசர்பாடி கிளை.
எலும்பும் மஜ்ஜையும் ஒன்றோடு ஒன்று இருந்தாலும்
கவிதையில் பிரித்து சொல்லலாம் என்ற தலைப்பில் சொற்போருக்கு தயார்
தலைமை சிங்கை
//அ.மு.செய்யது said...
நாடி வேறு..நரம்பு வேறு..சோ அதனால பிரச்சனையில்ல..
சொற்போருக்கு தயாரா ???
//
பாத்துரலாமா?. நல்லா கேக்குராங்கய்யா டீட்டயிலு :)
ஜமால்,சுப்பு இருவருக்கும்,
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ??
இது என்ன புணர்ச்சி விதி சொல்லுங்கள் பார்ப்போம் ??
// அ.மு.செய்யது said...
ஜமால்,சுப்பு இருவருக்கும்,
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ??
//
:(((((((((((((
வரிகள் முழுதும் காதல் ததும்பி வழிகிறது...
வரிகளின் அமைப்பை கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தால் அழகான கவிதை வடிவம் கிடைத்திருக்கும் சக்தி...
superrrrrrrrb akkaa
நம்மலால முடியாதுடா சாமி...
படிக்க மட்டுதான், எழுதுனுமுன்னு
நினைக்க கூட முடியல...
அருமை, பக்கா, அடிபொளி..
SUBBU said...
வரேன் :))))))
எப்படிங்க இப்படி எல்லாம், முடியல :))))))))))))
சரி சரி அழாதீங்க சுப்பு
நட்புடன் ஜமால் said...
சாயங்காலம் வந்துடுவாரு இருங்கோ!
நீங்க சொன்னா சரிதான் அண்ணா
நட்புடன் ஜமால் said...
எலும்புக்குள்ளும் மஜ்ஜைக்குள்ளும்
மஜ்ஜை = bonemarrow
ம்ம்ம் ...
சிந்தனை எங்கையோ போகுதுங்கு போங்க உங்களுக்கு ...
எல்லாம் காய்ச்சல் வேகம் அண்ணா
நட்புடன் ஜமால் said...
எவனின் சுவாசகரிமிலவாயு கூட கமகமக்கின்றதோ....\\
அட என்னாங்க இது
அதி பயங்கரமா
வேதியல் வார்த்தைகள் தெரிக்குது ...
எவனைக்காணும் போது வெளிச்சமும் காணாதபோது இருளும் எனை சூழ்கின்றதோ...\\
கவிதை முழுதும் சூரியனா! ...
என்ன எழுதியிருக்கேன்னு எனக்கே புரியலை அண்ணா நீங்க வேற கிண்டலடிக்காதீங்க
நட்புடன் ஜமால் said...
எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....\\
காத்திருத்தல் ஒரு சுகமே
நிச்சியம் விளங்கி கொண்டு வருவார்
வந்தா சரிதான்
S.A. நவாஸுதீன் said...
காதலுக்காக காதல் காத்திருத்தலும் சுகம்தான். கவிதை நல்லா இருக்கு சக்தி
சும்மா விளையாட்டுக்கு சொல்லக்கூடாது நவாஸ் அண்ணா
அ.மு.செய்யது said...
யார் அந்த "எவனோ ஒருவன்" ???
செம்ம ரொமான்டிக் சக்தி கவிதை முழுவதும்.இந்த கவிதை
சாமுராய் திரைப்படத்தில் வைரமுத்துவின் வரிகளில் நித்யஸ்ரீ பாடியதை நினைவுறுத்துகிறது.
தீராத ஆசைகளெல்லாம் தீர்க்க தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்
ஒரு கற்பு,கண்ணியம் கண்ணிமை தர்மம் கண்டு கொள்ளாத ஒருவன்
நான் போதும் போதும் என்னும் வகையில் புதுமை செய்யும் ஒருவன்.
நீதானா...............
அட பாட்டு நல்லா இருக்கே செய்யது தம்பி....
S.A. நவாஸுதீன் said...
எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....
எப்படி புரியாமல் போகும். நிச்சயம் புரியும்
புரிஞ்சா சரி...
அ.மு.செய்யது said...
//எலும்புக்குள்ளும் மஜ்ஜைக்குள்ளும்
மஜ்ஜை = bonemarrow
ம்ம்ம் ...
சிந்தனை எங்கையோ போகுதுங்கு போங்க உங்களுக்கு ...//
எலும்புக்குள் தானே மஜ்ஜை இருக்கின்றது.
பிறகு ஏன் எலும்புகளுக்கும் மஜ்ஜைகளுக்கும் என்று தனித்தனி ??
இப்படிக்கு,
குத்த வைத்து குற்றம் கண்டு பிடிப்போர் சங்கம்.
பூனே கிளை.
அப்போ குற்றம் இருக்குக்கீறிங்க
சரிதான் பா குறைச்சிக்கிறேன்...
அ.மு.செய்யது said...
//எவனின் பிம்பம் எனக்கு பதிலாய் கண்ணாடியில் தெரிகின்றதோ....//
இந்த வரிகள் கிளாஸ்.
டீ கிளாஸ் ஆர் காப்பி கிளாஸ்
நட்புடன் ஜமால் said...
எலும்புக்குள் தானே மஜ்ஜை இருக்கின்றது.
பிறகு ஏன் எலும்புகளுக்கும் மஜ்ஜைகளுக்கும் என்று தனித்தனி ??\\
நாடி நரம்பு என்று சொல்லுவதில்லையா
அது போலத்தான்
எவ்வள்வு குற்றம் கண்டு பிடித்தாலும்
விளக்கம் கொடுப்போர் சங்கம்
தலைமை
சிங்கை.
அண்ணா இருக்க பயமேன்...
காதலின் வெளிப்பாடுகளை அருமை
அ.மு.செய்யது said...
நாடி வேறு..நரம்பு வேறு..சோ அதனால பிரச்சனையில்ல..
சொற்போருக்கு தயாரா ???
இப்படிக்கு,
ஏடாகூடமாக குத்த வைத்து எகத்தாளமாக யோசிப்போர் பேரவை.
வியாசர்பாடி கிளை.
நான் இல்லாதபோதில் இப்படி எல்லாம் சண்டை நடந்திருக்கா
நட்புடன் ஜமால் said...
எலும்பும் மஜ்ஜையும் ஒன்றோடு ஒன்று இருந்தாலும்
கவிதையில் பிரித்து சொல்லலாம் என்ற தலைப்பில் சொற்போருக்கு தயார்
தலைமை சிங்கை
அண்ணா கண்ணுல தண்ணிவரவைத்துவிட்டீர்கள்
SUBBU said...
//அ.மு.செய்யது said...
நாடி வேறு..நரம்பு வேறு..சோ அதனால பிரச்சனையில்ல..
சொற்போருக்கு தயாரா ???
//
பாத்துரலாமா?. நல்லா கேக்குராங்கய்யா டீட்டயிலு :)
அதானே சுப்பு
அ.மு.செய்யது said...
ஜமால்,சுப்பு இருவருக்கும்,
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ??
இது என்ன புணர்ச்சி விதி சொல்லுங்கள் பார்ப்போம் ??
ம்ம்ம்ம்
இலக்கணமா??
அப்படின்னா என்னன்னு கூட எனக்கு தெரியாதே...
புதியவன் said...
வரிகள் முழுதும் காதல் ததும்பி வழிகிறது...
வரிகளின் அமைப்பை கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தால் அழகான கவிதை வடிவம் கிடைத்திருக்கும் சக்தி...
ஸாரி புதியவன் அண்ணா
அடுத்தமுறை கொஞ்சம் நல்ல கவிதையாக எழுத முயல்கிறேன்...
இன்னும் காய்ச்சல் அடித்த வேகத்தில் கவிதை சரியாய் வர மாட்டேன் என்கிறது....
shakthi kumar said...
superrrrrrrrb akkaa
ஹேய் பொய் தானே சக்திகுமார்
கலையரசன் said...
நம்மலால முடியாதுடா சாமி...
படிக்க மட்டுதான், எழுதுனுமுன்னு
நினைக்க கூட முடியல...
அருமை, பக்கா, அடிபொளி..
பக்கா,அடிபொளின்னா என்னவோ கலையரசரே....
" உழவன் " " Uzhavan " said...
காதலின் வெளிப்பாடுகளை அருமை
நன்றி உழவரே
யப்பா செம ரொமாண்டிக்....
இளமை கொழிக்கும் இனிமை செழிக்கும்.....
காதலில் கசிந்துரிகி
கற்புரமாய் எரிந்து உருகி
கவிதையில் சொல் உருகி
உன்னவனின் உயிரில் உருகி
கண்ணில் இட்ட மையுருகி
அவன் நினைவால் உன் மெய் உருகி
காதலில் வாடுகின்றாயடி சகியே....
உன்னை களவாட உன் அவரை வரச்சொல்கின்றேனடி....
எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....
கவிதை அருமை சக்தி
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....
sekarem purium da
kavithai supar da
எவனின் பிம்பம் எனக்கு பதிலாய் கண்ணாடியில் தெரிகின்றதோ....//
ஓ அந்தளவுக்கு போயாச்சா???
பரவாயில்லையே...
எவனின் சுவாசகரிமிலவாயு கூட கமகமக்கின்றதோ....
எவனைக்கண்டால் காரணமேயில்லாமல் நாணம் கொள்கிறேனோ....//
ஓ...
அதிபயங்கரமா விளையாடுறீங்க போங்க...
நல்லா இருக்கே...
நல்லாயிருக்கு சக்தி..
வித்தியாசமான பார்வையில்..
அடிப்பொளி- சூப்பரு ன்னு அர்த்தம்.
கலையரசன் வளைகுடா நாட்ல இருக்காரு போல அதான் மலையாள வாடை...
நன்று..
என்ன சக்தி, சக்தி வெளியூர் போயாச்சா??
//
எவனைக்கண்டால் கண்கள் தமை மறந்து
இமைக்கமறுக்கின்றதோ
எவனின் பிம்பம் எனக்கு பதிலாய் கண்ணாடியில் தெரிகின்றதோ...
//
மரியாதை எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு
//எவனைக்கண்டால் என் எலும்புக்குள்ளும் மஜ்ஜைக்குள்ளும்
எதிர்பாராத குளிர் உண்டாகி
எல்லா உறுப்புகளின் இயக்கமும் தடைபடுகின்றதோ.....//
ஜன்னியா இருக்கும் சக்தி
தமிழரசி said...
யப்பா செம ரொமாண்டிக்....
இளமை கொழிக்கும் இனிமை செழிக்கும்.....
காதலில் கசிந்துரிகி
கற்புரமாய் எரிந்து உருகி
கவிதையில் சொல் உருகி
உன்னவனின் உயிரில் உருகி
கண்ணில் இட்ட மையுருகி
அவன் நினைவால் உன் மெய் உருகி
காதலில் வாடுகின்றாயடி சகியே....
உன்னை களவாட உன் அவரை வரச்சொல்கின்றேனடி....
என் கவிதையை விட இந்த கவிதை நல்லாயிருக்கு தமிழரசியாரே....
குமரை நிலாவன் said...
எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....
கவிதை அருமை சக்தி
நன்றி நிலாவன் அண்ணா
gayathri said...
என் காதலும் கவிதையும் புரியப்போகும் நாளுக்காய்.....
sekarem purium da
நன்றி காயா
வேத்தியன் said...
எவனின் பிம்பம் எனக்கு பதிலாய் கண்ணாடியில் தெரிகின்றதோ....//
ஓ அந்தளவுக்கு போயாச்சா???
பரவாயில்லையே...
ஹே சும்மா கவிதை பா...
அந்த அளவுக்கு எல்லாம் இன்னும் போகலை
வேத்தியன் said...
எவனின் சுவாசகரிமிலவாயு கூட கமகமக்கின்றதோ....
எவனைக்கண்டால் காரணமேயில்லாமல் நாணம் கொள்கிறேனோ....//
ஓ...
அதிபயங்கரமா விளையாடுறீங்க போங்க...
நல்லா இருக்கே...
நல்லா இருந்தா சரி தான் வேத்தியரே...
sarathy said...
நல்லாயிருக்கு சக்தி..
வித்தியாசமான பார்வையில்..
அடிப்பொளி- சூப்பரு ன்னு அர்த்தம்.
கலையரசன் வளைகுடா நாட்ல இருக்காரு போல அதான் மலையாள வாடை...
ஓ அப்படியா சேதி
நன்றி சாரதி
வினோத்கெளதம் said...
நன்று..
நன்றி வினு
நசரேயன் said...
என்ன சக்தி, சக்தி வெளியூர் போயாச்சா?
ஆஹா இல்லைங்க அண்ணா
இது சும்மா ஒரு பிதற்றல்
நசரேயன் said...
//
எவனைக்கண்டால் கண்கள் தமை மறந்து
இமைக்கமறுக்கின்றதோ
எவனின் பிம்பம் எனக்கு பதிலாய் கண்ணாடியில் தெரிகின்றதோ...
//
மரியாதை எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு
எப்பவும் மரியாதை கொடுக்கிறது வழமை தான் அண்ணா
நசரேயன் said...
//எவனைக்கண்டால் என் எலும்புக்குள்ளும் மஜ்ஜைக்குள்ளும்
எதிர்பாராத குளிர் உண்டாகி
எல்லா உறுப்புகளின் இயக்கமும் தடைபடுகின்றதோ.....//
ஜன்னியா இருக்கும் சக்தி
ஆமா அண்ணா அடித்த காய்ச்சலில் ஜன்னி தான் வந்துவிட்டது...
yethaarththam athey samayam rasikkum padiyagavum
bala
பாலா said...
yethaarththam athey samayam rasikkum padiyagavum
bala
nandri bala
எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்//
என்னை மிகவும் கவர்ந்த இருவரிகள்..
கவிதை நன்றாய் இருக்கிறது
டக்கரா இருக்குங்க கவிதை!
//
காத்திருக்கிறேன் அவனுக்காய்.....
//
காத்திருங்கள்..
விரைவில் அவனைகான வாழ்த்துக்கள்..
(இந்த பின்னூட்டம் எதாச்சும் உங்களின் பதிவிற்கு சம்பந்தத்தோட இருக்கா..?)
Rajeswari said...
எவன் விலகிச்சென்றாலும் என்னுள் விஸ்வரூபம் எடுக்கின்றானோ
காத்திருக்கின்றேன் அவனுக்காய்//
என்னை மிகவும் கவர்ந்த இருவரிகள்..
கவிதை நன்றாய் இருக்கிறது
நன்றி ராஜி
கபிலன் said...
டக்கரா இருக்குங்க கவிதை
நன்றி கபிலன்
சுரேஷ் குமார் said...
//
காத்திருக்கிறேன் அவனுக்காய்.....
//
காத்திருங்கள்..
விரைவில் அவனைகான வாழ்த்துக்கள்..
(இந்த பின்னூட்டம் எதாச்சும் உங்களின் பதிவிற்கு சம்பந்தத்தோட இருக்கா..?)
நன்றி சுரேஷ்
அருமையான, ரொம்ப சீரியஸான கவிதையா இருக்கு :)
kanagu said...
அருமையான, ரொம்ப சீரியஸான கவிதையா இருக்கு :)
நன்றி கனகு
Post a Comment