Thursday, June 4, 2009
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
உலக வெப்பமயமாதலால்
உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள்.....
குறைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....
காற்றுப் பெண்ணின் முகத்தை
கரிப்புன்னகையினால் கறைப்படுத்தியாயிற்று....
பெட்ரோலிய பொருட்களை
பெருமளவில் தீர்த்தாயிற்று....
இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று....
விளை நிலங்களை வந்த
விலைபேசி விற்றாயிற்று....
கான்கீரிட் காடுகளை
கண்மண் தெரியாமல் பெருக்கியாயிற்று....
நமக்கு முந்தைய தலைமுறையினர்
நமக்கு தந்த வளங்களை
நாமே முடிந்தளவு சுரண்டியாயிற்று....
அடுத்த தலைமுறையினர்
எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
Subscribe to:
Post Comments (Atom)
120 comments:
nice very nice
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
ada amala naan ippathula irutey pathil yosikiren pa

ada ithuku melaum ethavathu pannanume :)))))))))))
இப்போ ஜூட். சனிக்கிழமை வந்து சொல்றேன் சக்தி.
உண்மை., உண்மை.., உண்மை..,
இந்த தலைமுறை நாமே இதை தடுப்பதில்லை..
அடுத்த தலைமுறையினர்
இதையெல்லாம் எதிர்பார்பார்களா என்ன?
அது எப்படிங்க சக்தி
வலைச்சர ஆசிரியராகவும்/சொந்த பதிவும் ஒரே நேரத்துலே
கலக்குங்க
//விளை நிலங்களை வந்த
விலைபேசி விற்றாயிற்று....
/
வங்கியது யாருங்க.. எனக்கு குறைந்த விலைக்கு முடித்து தரலாம்லே
//கான்கீரிட் காடுகளை/
வானுயர்ந்த கட்டிடங்களை சொல்லும் புது வார்த்தை உபயோகம்
அபுஅஃப்ஸர் said...
அது எப்படிங்க சக்தி
வலைச்சர ஆசிரியராகவும்/சொந்த பதிவும் ஒரே நேரத்துலே
கலக்குங்க
vanga abhu anna
அபுஅஃப்ஸர் said...
//விளை நிலங்களை வந்த
விலைபேசி விற்றாயிற்று....
/
வங்கியது யாருங்க.. எனக்கு குறைந்த விலைக்கு முடித்து தரலாம்லே
சரி அடுத்த முறை விற்குப்போது சொல்ல சொல்லறேன்
Kavi kilavan said...
nice very nice
நன்றி கவிக்கிழவன்
gayathri said...
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
ada amala naan ippathula irutey pathil yosikiren pa
யோசிங்க காயா
S.A. நவாஸுதீன் said...
இப்போ ஜூட். சனிக்கிழமை வந்து சொல்றேன் சக்தி.
கண்டிப்பா வந்து பதில் சொல்லனும் நவாஸ் அண்ணா
//எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
/
இதைதான் 20 வருஷம் முன்னாடி நானும் கேட்டேன்.. அப்போ சொல்றதுக்கு ஆளில்லை...
புது டெக்னாலஜியை விட்டுசெல்கிறோம்... இனி மதிய உணவிற்கு வரிந்து கட்டி உக்காந்து சாப்பிடனும்னு தேவையில்லை ஒரு மாத்திரை போதும்.. வேர்வை சிந்தும் உடல் உழைப்பு தேவையில்லை.. எல்லாமே ரிமோட் இயக்கம்தான்.....
சக்தி உங்க தவிப்பு தெரியுது, இப்போவே உங்க குழந்தைக|ளுக்கு டெக்னாலஜியை சொல்லிக்கொடுங்க....
கலையரசன் said...
உண்மை., உண்மை.., உண்மை..,
இந்த தலைமுறை நாமே இதை தடுப்பதில்லை..
அடுத்த தலைமுறையினர்
இதையெல்லாம் எதிர்பார்பார்களா என்ன?
வேறு என்ன செய்வாங்க
கண்டிப்பா கேள்வி கேட்பாங்க கலையரசன்
நன்றி கலையரசன்
அபுஅஃப்ஸர் said...
//எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
/
இதைதான் 20 வருஷம் முன்னாடி நானும் கேட்டேன்.. அப்போ சொல்றதுக்கு ஆளில்லை...
புது டெக்னாலஜியை விட்டுசெல்கிறோம்... இனி மதிய உணவிற்கு வரிந்து கட்டி உக்காந்து சாப்பிடனும்னு தேவையில்லை ஒரு மாத்திரை போதும்.. வேர்வை சிந்தும் உடல் உழைப்பு தேவையில்லை.. எல்லாமே ரிமோட் இயக்கம்தான்.....
சக்தி உங்க தவிப்பு தெரியுது, இப்போவே உங்க குழந்தைக|ளுக்கு டெக்னாலஜியை சொல்லிக்கொடுங்க....
ஹ ஹ ஹ ஹ
நன்றி அபு அண்ணா
//gayathri said...
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
ada amala naan ippathula irutey pathil yosikireந் ப//
நல்லா யோசியுங்க...அடுத்த பாராளுமன்றத்துலே தாக்கல் பண்ணனும்
அபுஅஃப்ஸர் said...
//gayathri said...
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
ada amala naan ippathula irutey pathil yosikireந் ப//
நல்லா யோசியுங்க...அடுத்த பாராளுமன்றத்துலே தாக்கல் பண்ணனும்
என்ன இப்படி சொல்லிட்டீங்க எவ்ளோ பெரிய கேள்வியிது
:( nijan thaangka ... nammala mudinthathai namma thalai muraikku enna kodukka porome theriyalai.. ulagam minji irundha adhuve periya vishayam pola....
நாணல் said...
:( nijan thaangka ... nammala mudinthathai namma thalai muraikku enna kodukka porome theriyalai.. ulagam minji irundha adhuve periya vishayam pola....
நன்றி நாணல் தங்கள் முதல் வருகைக்கு
உண்மைதான் உங்கள் கேளவி ஆதங்கள்.
ஆனால்
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
இதேதான் எல்லோரிடமும்.
சமூகத்தின் மீதான ஆதங்கமும் அடுத்த தலை
முறைக்கான அக்கறையும் கவிதை முழுதும்
இழையோடுகிறது...
//ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....
//
ம்...இதில் நம் அனைவருக்கும் பங்குண்டு...
சக்தி கவிதை என்ற பட்ச்சத்தில் அருமை.
\\கான்கீரிட் காடுகளை\\
இது ரொம்ப பிடிச்சிருக்கு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்\\
பொய்யானது இந்த வரிகள் சக்தி
அதைவிட போலியானது என்று சொல்லலாம்.
கற்பிதம்ன்னு சொல்லலாம்.
சரி எத்துனை கேள்விகள்
எதுனா பதில் இருக்கா சக்தி,
நானும் யோசித்து பார்க்கின்றேன்
கேள்விகள் அழகா, அருமையா, நிறைய கேட்கின்றோம், வாழ்க்கையிலும் தான் - ஆனால் பதில்/தீர்வு யாருமே சொன்ன மாதிரி தெரியலையே (என்னையும் சேர்த்தே)
ஆனாலும் உங்க அக்கறை விளங்குகிறது சக்தி.
அருமை
வார்த்தையில்
விளையாடி உள்ளீர்கள்
உண்மைதான்
அடுத்த தலைமுறை கேள்வி கேட்பதற்கே நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள் எந்திரத்தனமான வாழ்க்கை அவர்களை ஆட்கொண்டிருக்கும் .
அக்கறையான பதிவு...
இந்த கவிதையில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் ஒன்றாக இருக்கிறது..
அது தான் இதன் சிறப்பு...
மிகவும் ரசித்தேன்...
வரும் சந்ததியினர் நம்மீதான அபிப்ராயத்தை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறோம்.... இதை கவிதையாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் சமூக இயற்கை நிந்தனைகளின் தொகுப்பென எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் சமூக அக்கறைக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்
ஆ.முத்துராமலிங்கம் said...
உண்மைதான் உங்கள் கேளவி ஆதங்கள்.
ஆனால்
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
இதேதான் எல்லோரிடமும்.
நன்றி முத்துராமலிங்கம்
புதியவன் said...
சமூகத்தின் மீதான ஆதங்கமும் அடுத்த தலை
முறைக்கான அக்கறையும் கவிதை முழுதும்
இழையோடுகிறது...
நன்றி புதியவன் அண்ணா
புதியவன் said...
//ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....
//
ம்...இதில் நம் அனைவருக்கும் பங்குண்டு...
கண்டிப்பாக புதியவன் அண்ணா
நம் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு
நட்புடன் ஜமால் said...
சக்தி கவிதை என்ற பட்ச்சத்தில் அருமை.
\\கான்கீரிட் காடுகளை\\
இது ரொம்ப பிடிச்சிருக்கு
உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி அண்ணா
நட்புடன் ஜமால் said...
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்\\
பொய்யானது இந்த வரிகள் சக்தி
அதைவிட போலியானது என்று சொல்லலாம்.
கற்பிதம்ன்னு சொல்லலாம்.
சரி எத்துனை கேள்விகள்
எதுனா பதில் இருக்கா சக்தி,
நானும் யோசித்து பார்க்கின்றேன்
கேள்விகள் அழகா, அருமையா, நிறைய கேட்கின்றோம், வாழ்க்கையிலும் தான் - ஆனால் பதில்/தீர்வு யாருமே சொன்ன மாதிரி தெரியலையே (என்னையும் சேர்த்தே)
ஒரு புலம்பல் தான்
வேறு என்ன சொல்ல அண்ணா
நட்புடன் ஜமால் said...
ஆனாலும் உங்க அக்கறை விளங்குகிறது சக்தி.
நன்றி ஜமால் அண்ணா
திகழ்மிளிர் said...
அருமை
வார்த்தையில்
விளையாடி உள்ளீர்கள்
நன்றி திகழ்மிளிர்
குமரை நிலாவன் said...
உண்மைதான்
அடுத்த தலைமுறை கேள்வி கேட்பதற்கே நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள் எந்திரத்தனமான வாழ்க்கை அவர்களை ஆட்கொண்டிருக்கும் .
உண்மையான வார்த்தை ....
வேத்தியன் said...
அக்கறையான பதிவு...
நன்றி வேத்தியரே...
ஆதவா said...
வரும் சந்ததியினர் நம்மீதான அபிப்ராயத்தை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறோம்.... இதை கவிதையாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் சமூக இயற்கை நிந்தனைகளின் தொகுப்பென எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் சமூக அக்கறைக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்
நன்றி ஆதவா
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....
///
ஆமா சக்தி!!
கேள்விகள் வீரியமாக உள்ளன!
thevanmayam said...
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....
///
ஆமா சக்தி!!
கேள்விகள் வீரியமாக உள்ளன!
நன்றி தேவன்மாயம் சார்
ரொம்ப நல்ல சிந்தனையுடன் எழுதி உள்ளிர்கள்..நான் நமக்கு பின் வரப்போகும் தலைமுறைக்கு ஒரு அழிவு உலகத்தை தான் விட்டு விட்டு செல்கிறோம்..
//என்ன பதில் சொல்லபோகின்றோம்????//
கேள்வியே கேட்காம பதிலுக்கு எங்கே போக?
//உலக வெப்பமயமாதலால்
உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள்.....//
பனி உருகாம என்ன செய்யும் அது படிச்சது உங்க கவிதைய !!!
//குறைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....//
மத்தியமும், மாநிலமும் அல்ல மக்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
//ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....//
என்ன செய்ய அவங்களுக்கு வேலை இல்லை
//காற்றுப் பெண்ணின் முகத்தை
கரிப்புன்னகையினால் கறைப்படுத்தியாயிற்று....//
யாரப்பா அங்கே.. இனிமேல எல்லாம் நடந்து தான் போனும்..
//பெட்ரோலிய பொருட்களை
பெருமளவில் தீர்த்தாயிற்று....//
புதுசா ஏதும் கண்டுபிடிக்கலாமுன்னு யோசனை இருக்கா ?
//இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று....//
பாதி உங்க மளிகை கடையிலே தான் இருக்கு
//விளை நிலங்களை வந்த
விலைபேசி விற்றாயிற்று....//
ஒரு வேளை, நீங்க அவங்க ஏரியா பக்கம் போகும் போது பாட்டு படிச்சீங்களா !!!
//கான்கீரிட் காடுகளை
கண்மண் தெரியாமல் பெருக்கியாயிற்று....//
இந்த தொல்லைக்கு தான் நான் எங்க ஊரை விட்டு வெளியே வாரதில்லை
//நமக்கு முந்தைய தலைமுறையினர்
நமக்கு தந்த வளங்களை
நாமே முடிந்தளவு சுரண்டியாயிற்று....//
தெரிஞ்சதை தானே செய்வோம்
//
எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????//
கருத்து சொல்ல விருப்பம் இல்லைன்னு கழண்டுக்க வேண்டியது தான்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
\\
அழகாவா இருந்தது
இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று....
\\
செல்வங்களை மட்டுமா
நமக்கு முந்தைய தலைமுறையினர்
நமக்கு தந்த வளங்களை
நாமே முடிந்தளவு சுரண்டியாயிற்று
\\
நாமா?
எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
\\
யோசிக்க வேண்டிய விஷயம்தான்
sakthima nice lines
//கான்கீரிட் காடுகளை//
இந்த வரிகளை வெகுவாக ரசித்தேன்.
சமூக அக்கறையோடு வெளி வந்திருக்கும் அருமையான ஆக்கம்.
(அலுவலக ஆணிகள் காரணமாக அதிகம் வலைப்பூவில் நடமாட முடியவில்லை.மன்னிக்கவும் )
//குறைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்..../
உண்மை
//பெட்ரோலிய பொருட்களை
பெருமளவில் தீர்த்தாயிற்று....//
//இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று...//
அப்பா வரிக்கு வரி அடிக்கனும் போல சமுதாய சிந்தனை சூப்பரா இருக்கு
//அடுத்த தலைமுறையினர்
எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????//
சரியான கேள்வி
நல்ல கேள்விதான். நாக்கைப் பிடுங்கிகிற அளவுக்குக் கேட்பார்கள்...
அதற்கு நமது ஒரே பதில்...”ஙே...” தான்....
நாம என்ன சொல்லப் போகிறோம்னு சுரண்டிண்டிருக்கறதுக்குள்ள அடுத்த தலைமுறை சரி பண்ணிடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. மத்தளம் மாதிரி பெருசுங்க கிட்ட இடி பொடுசுங்க கிட்ட குட்டு.
தோ ! இப்படி கொஞ்ச பேரு அக்கரைப் பட்டோம்னு சொல்லிக்கலாம்.
sure they will be ask us.
vinoth gowtham said...
ரொம்ப நல்ல சிந்தனையுடன் எழுதி உள்ளிர்கள்..நான் நமக்கு பின் வரப்போகும் தலைமுறைக்கு ஒரு அழிவு உலகத்தை தான் விட்டு விட்டு செல்கிறோம்..
நன்றி வினோத் கெளதம்
நசரேயன் said...
//என்ன பதில் சொல்லபோகின்றோம்????//
கேள்வியே கேட்காம பதிலுக்கு எங்கே போக?
hahahahaah
nasreyan anna oru mudivoda than erukenga poala
நசரேயன் said...
//உலக வெப்பமயமாதலால்
உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள்.....//
பனி உருகாம என்ன செய்யும் அது படிச்சது உங்க கவிதைய !!!
ஓ அதான் பனி உருகிடிச்சா எனக்கு தெரியாமல் போயிடுச்சே....
நசரேயன் said...
//குறைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....//
மத்தியமும், மாநிலமும் அல்ல மக்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
இந்த கேள்வியை நான் மக்கள் கிட்ட தான் கேட்கிறேன்
அரசாங்கத்துக்கு கிட்ட கேட்கலை அண்ணா
நசரேயன் said...
//ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....//
என்ன செய்ய அவங்களுக்கு வேலை இல்லை
ஆமா இயற்கையை சேதப்படுத்துதால் இன்றைய முக்கிய வேலை ...
நசரேயன் said...
//காற்றுப் பெண்ணின் முகத்தை
கரிப்புன்னகையினால் கறைப்படுத்தியாயிற்று....//
யாரப்பா அங்கே.. இனிமேல எல்லாம் நடந்து தான் போனும்..
ஹெல்த்க்கு நல்லது தானே வாக்கிங்...
நசரேயன் said...
//பெட்ரோலிய பொருட்களை
பெருமளவில் தீர்த்தாயிற்று....//
புதுசா ஏதும் கண்டுபிடிக்கலாமுன்னு யோசனை இருக்கா ?
அவ்வள்வு பெரிய ஆராய்ச்சியாளர் நான் இல்லைப்பா...
நசரேயன் said...
//இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று....//
பாதி உங்க மளிகை கடையிலே தான் இருக்கு
அப்போ மீதி
நசரேயன் said...
//விளை நிலங்களை வந்த
விலைபேசி விற்றாயிற்று....//
ஒரு வேளை, நீங்க அவங்க ஏரியா பக்கம் போகும் போது பாட்டு படிச்சீங்களா !!!
ஹ ஹ ஹ
நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு
நசரேயன் said...
//கான்கீரிட் காடுகளை
கண்மண் தெரியாமல் பெருக்கியாயிற்று....//
இந்த தொல்லைக்கு தான் நான் எங்க ஊரை விட்டு வெளியே வாரதில்லை
அது எந்த ஊர் கான்கீரிட் காடுகள் இல்லாத ஊர் நான் கேள்விப்பட்டதேயில்லை
சொல்லிட்டுபோங்க அண்ணா
rose said...
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
\\
அழகாவா இருந்தது
நம் தலைமுறைக்கு முன்னால் பூமி அழகு தான் ரோஸ்
rose said...
இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று....
\\
செல்வங்களை மட்டுமா
ஏன் இன்னும் கலாச்சார சீரழிவுகள் பண்பாடு என நாம் அழித்ததின் பட்டியல் சற்று நீளம் தான்
rose said...
நமக்கு முந்தைய தலைமுறையினர்
நமக்கு தந்த வளங்களை
நாமே முடிந்தளவு சுரண்டியாயிற்று
\\
நாமா?
நாம் என நான் கூறுவது இங்கு சமுதாயத்தை பா...
rose said...
எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
\\
யோசிக்க வேண்டிய விஷயம்தான்
எதுவும் செய்ய நம்மால் இயலவில்லை என குற்ற உணர்வு தான் இந்த கவிதையின் கரு
அ.மு.செய்யது said...
//கான்கீரிட் காடுகளை//
இந்த வரிகளை வெகுவாக ரசித்தேன்.
சமூக அக்கறையோடு வெளி வந்திருக்கும் அருமையான ஆக்கம்.
(அலுவலக ஆணிகள் காரணமாக அதிகம் வலைப்பூவில் நடமாட முடியவில்லை.மன்னிக்கவும் )
நன்றி செய்யது
Suresh said...
//குறைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்..../
உண்மை
//பெட்ரோலிய பொருட்களை
பெருமளவில் தீர்த்தாயிற்று....//
//இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று...//
அப்பா வரிக்கு வரி அடிக்கனும் போல சமுதாய சிந்தனை சூப்பரா இருக்கு
//அடுத்த தலைமுறையினர்
எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????//
சரியான கேள்வி
நன்றி சுரேஷ்
தமிழ்ப்பறவை said...
நல்ல கேள்விதான். நாக்கைப் பிடுங்கிகிற அளவுக்குக் கேட்பார்கள்...
அதற்கு நமது ஒரே பதில்...”ஙே...” தான்..
ஆம்
வேறு என்ன சொல்ல முடியும்
நன்றி தமிழ்பறவை
பாலா... said...
நாம என்ன சொல்லப் போகிறோம்னு சுரண்டிண்டிருக்கறதுக்குள்ள அடுத்த தலைமுறை சரி பண்ணிடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. மத்தளம் மாதிரி பெருசுங்க கிட்ட இடி பொடுசுங்க கிட்ட குட்டு.
தோ ! இப்படி கொஞ்ச பேரு அக்கரைப் பட்டோம்னு சொல்லிக்கலாம்.
எனது ஆதங்கத்தின் வெளிப்பாடு பா...
நன்றி பாலா
sam said...
sure they will be ask us.
thanks for ur visit sam...
//எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????//
ஒன்னும் தெரியலபா...
//ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....//
நல்ல வரிகள்
//உலக வெப்பமயமாதலால்
உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள்.....//
இதுக்கு
வயிற்றெரிச்சலை குறைக்க வேண்டும்
//குறைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....//
இதுக்கு
குண்டாயிருக்குறவங்கள போட்டு தள்ளணும்
ஆ.ஞானசேகரன் said...
//எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????//
ஒன்னும் தெரியலபா...
நன்றி ஞான சேகரன்
பிரியமுடன்.........வசந்த் said...
//உலக வெப்பமயமாதலால்
உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள்.....//
இதுக்கு
வயிற்றெரிச்சலை குறைக்க வேண்டும்
நன்றி வசந்த்
வெட்கித் தலை குனிதலைத் தவிர வேறென்ன செய்வோம்...
இயந்திரமயமான வாழ்க்கை இதில் இவை அனைத்தும் இன்றியமையாதது..... நாகரீக முன்னேற்றதுக்கு அடிமைப்பட்டு நம்மை ஆட்படுத்திக் கொண்டிட்டோம்
அதான் ஒன்றை அடையனும் என்றால் ஒன்றை இழக்கனும்... என்ற நியதிப்படித்தான்...இந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நம்மால் இனி இழக்க மனம் வருமா?
உண்மை புலப்பட்டாலும் நம்மால் புலம்ப மட்டும் தான் முடியும்.....
தமிழரசி said...

நன்றி தமிழரசி
//என்ன பதில் சொல்லபோகின்றோம்???? //
சொல்ரதுக்கு என்ன இருக்கு :(((((((((((
95
96
97
98
99
மீ த 100..
அவர்களுக்காகத்தான் பிற கிரகங்களில் வாழ்வதற்கான சாத்திய கூறுகளை இன்றைய தலைமுறை ஆராய்ந்து கொண்டு உள்ளதே..
"WALL-E" திரைப்படத்தில் வருவதுபோல் அனைவரையும் வேறு கிரகத்திற்கு அப்புறப்படுத்திவிட வேண்டியதுதான்..
வாழ்த்துக்கள் சக்தி..விகடனில் ஹாட் பகுதியில் இந்த கவிதை வெளிவந்துள்ளது.....
நன்றி சுப்பு
நன்றி சுரேஷ் குமார்
நன்றி தமிழரசி
உலக வெப்பமயமாதலால்
உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள்.....
வெப்பத்தின் கொடுமையால் மடிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள்.
குறைந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பு
குறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....
மறைக்க முடியாத உண்மை
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
அழகாய் இருந்த பூமியை
அரை நூற்றாண்டுக்குள் சேதப்படுத்தியாயிற்று.....
மனிதனாய் பிறந்ததற்கு ஏதாவது செய்ய வேண்டுமல்லவா
காற்றுப் பெண்ணின் முகத்தை
கரிப்புன்னகையினால் கறைப்படுத்தியாயிற்று....
பெட்ரோலிய பொருட்களை
பெருமளவில் தீர்த்தாயிற்று....
இருக்கும் நட்சத்திரங்கள் போதாதென ஓசோன் திரையிலும் ஓட்டை போட்டாயிற்று
இயற்கை அன்னையின் செல்வங்களை
இயன்ற அளவு அழித்தாயிற்று....
விளை நிலங்களை வந்த
விலைபேசி விற்றாயிற்று....
இயற்கை அன்னையும் இன்று முதியோர் இல்லத்தில் தான் கேட்பாரற்று
கான்கீரிட் காடுகளை
கண்மண் தெரியாமல் பெருக்கியாயிற்று....
அருமை சக்தி. கான்க்ரீட் காடுகள் கட்ட இயற்கை காடுகள் இடிக்கப்படுகின்றன.
நமக்கு முந்தைய தலைமுறையினர்
நமக்கு தந்த வளங்களை
நாமே முடிந்தளவு சுரண்டியாயிற்று....
அடுத்த தலைமுறையினர்
எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்
என கேட்கப்போகும் கேள்விக்கு
என்ன பதில் சொல்லபோகின்றோம்????
நீங்களும் எதையாவது உருவாக்குங்கள் (உங்களின்) அடுத்த தலைமுறை அதை உடைத்து எறியட்டும். விரக்தியில் வேறென்ன சொல்ல
// காற்றுப் பெண்ணின் முகத்தை
கரிப்புன்னகையினால் கறைப்படுத்தியாயிற்று....//
உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது?
நானும் பதில் யோசிக்கிறேன்...
கவிதை நல்லா இருக்குங்க..
நமக்கு முந்தைய தலைமுறையினர்
நமக்கு தந்த வளங்களை
நாமே முடிந்தளவு சுரண்டியாயிற்று....
//
முற்றிலும் உண்மையே:(
"காற்றுப் பெண்ணின் முகத்தை
கரிப்புன்னகையினால் கறைப்படுத்தியாயிற்று...."
இந்த வரிகள் மட்டுமின்றி கவிதை முழுவதுமே அபாரம்.
Illai yenbathey.. neengal ketta kelvikkum.. naam nam pillaikallukku thara povadharkkum pathil... !! Kangali kaneer udhan...
எளிய நடை..இன்று தான் உங்கள் வலைப்பூவிர்க்கு வந்து படிக்க முடிந்தது, ஜூன் 5 உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தையொட்டி எழுதிய கவிதைனு நினைக்கின்றேன். மிக அருமை.
நன்றி நவாஸ் அண்ணா
நன்றி பூர்ணிமா
நன்றி சாரதி
நன்றி மாதேவி
நன்றி பாலா
நன்றி ஷஃபி
எங்கப்பா கொஞ்ச நாளாக் காணோம். எல்லோருடைய சக்தியும் கொறஞ்ச மாதிரி ஆயிடுச்சுப்பா
காற்று கருமையாயிருக்கும் அடுத்த தலைமுறையில் நம் பதில் வெறுமை தான். சொன்ன விதம் அழகு. பாராட்டுக்கள்.
" உழவன் " " Uzhavan " said...
காற்று கருமையாயிருக்கும் அடுத்த தலைமுறையில் நம் பதில் வெறுமை தான். சொன்ன விதம் அழகு. பாராட்டுக்கள்.
நன்றி உழவரே
Post a Comment